Home
News

இனி வீடியோ சாட் வசதியுடன் பிளாக்பெர்ரி மெஸென்ஜர்!

By Super
இனி வீடியோ சாட் வசதியுடன் பிளாக்பெர்ரி மெஸென்ஜர்!

புதிய வீடியோ சாட் வசதியினை பிளாக்பெர்ரி மெஸென்ஜரில் அறிமுகம் செய்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம்.

மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தி பெற்ற பிளாக்பெர்ரி மெஸென்ஜரில் புதிதாக வீடியோ சாட் வசதியினை கொடுக்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம்.

அதுமட்டும் அல்லாது முகம் பார்த்து பேசும் இந்த வீடியோ சாட் வசதியினை தனது புதிய இயங்குதளமான பிளாக்பெர்ரி-10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் சேர்க்க இருக்கிறது இந்நிறுவனம். இதனால் இந்த பிளாக்பெர்ரி-10 இயங்குதளம் புதிய வீடியோ சாட் வசதிக்கு எளிதாக சப்போர்ட் செய்யும்.

வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்று வரும் ஆன்ட்ராய்டு மாற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்மார்ட்போனுக்கு மத்தியில் பிளாக்பெர்ரி நிறுவனம் தனது புதிய இயங்குதளத்தினை வழங்க முன் வந்திருப்பதற்கே பெரிய 'சபாஷ்' சொல்ல வேண்டும்.

அத்தகைய சிறந்த தொழில் நுட்ப வசதியினை பிளாக்பெர்ரி-10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழங்கும் என்பதால், ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பிளாக்பெர்ரி-10 ஓஎஸ் சிறந்த வரவேற்பினை பெறும் என்று நம்பிக்கையாக கூறுகிறது பிளாக்பெர்ரி நிறுவனம்.

அதிக தொழில் நுட்பத்தினை கொடுக்கும் பிளாக்பெர்ரி-10 இயங்குதளத்துடனும், கியூவர்டி கீப்பேட் வடிவமைப்புடனும் ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பாக கால் பதிக்கும் என்றும் அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி பல புதிய வசதிகளையும் பிளாக்பெர்ரி-10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் சேர்க்க இருப்பதால், 2013-ஆம் ஆண்டிற்கும் முன்பு அறிமுகமாக இருந்த இந்த இயங்குதளம் இன்னும் சற்று தாமதமாக அறிமுகமாகும் என்றும் கருதப்படுகிறது.

புகைப்படங்கள், வீடியோ ரக்கார்டிங், வீடியோ சாட்டிங் போன்ற வசதிகளை வாடிக்கையாளர்களும் அதிகம் விரும்புகிறார்கள்.

சிறந்த துல்லியம் கொண்ட புகைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிகம் தேவைப்படுகிறது. ஏனெனில் ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் அதிகம் புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

இதனால் மக்கள் சிறப்பான தொழில் நுட்பத்தினை வழங்கும் புகைப்படங்களை எதிர்பார்க்கின்றனர். இன்று ஒவ்வொருவரும் வேறு வேறு இடங்களில் இருப்பதால் வீடியோ சாட்டிங் போன்ற வசதிகளும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது பல புதிய வசதிகளை வழங்கும் பிளாக்பெர்ரி-10 இயங்குதளம் சிறப்பான வரவேற்பினையும் பெறும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X