ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ப்ளாக்பெரி ஸ்மார்ட்போன்
ப்ளாக்பெரி நிறுவனம் தனது புதிய கருவிகளில் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தினை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தினை முழுமையாக பயன்படுத்தாமல் மென்பொருள் மற்றும் டிவைஸ் மேனேஜ்மென்ட் சேவைகளை மட்டும் ப்ளாக்பெரி பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகின்றது.
ஹாக்கர்களுக்கு ஆப்பு வைக்க சில ஐடியாக்கள்..!

மேலும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்லைடு மாடல் போனில் கூகுள் இயங்குதளம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட மாடலின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர தகவல்கள் குறித்த தகவல்கள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றது.
ஜூன் ஸ்பெஷல் - டாப் 10 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்

ப்ளாக்பெரி நிறுவனத்தின் புதிய முடிவு அனைவருக்கும் வியப்பாகவே இருந்தாலும், இன்னும் பரிசீலனையில் இருக்கும் திட்டம் உண்மையில் உறுதியானால் மற்ற நிறுவனங்களுக்கு சந்தையில் ப்ளாக்பெரி கடுமையான போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்பதை தவிற வேறு வழி இல்லை.


Click it and Unblock the Notifications