ப்ளாக்பெரி புதிய கருவி, முன்பதிவுக்கு முந்துங்கள்..!!

Written By:

கனடா நாட்டை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ப்ளாக்பெரி, ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் ப்ளாக்பெரி ப்ரிவ் கருவிக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கின்றது. அதன் படி வாடிக்கையாளர்கள் ப்ளாக்பெரி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

 ப்ளாக்பெரி புதிய கருவி, முன்பதிவுக்கு முந்துங்கள்..!!

மேலும் ப்ளாக்பெரி இணையதளத்தில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் ப்ளாக்பெரி ப்ரிவ் கருவியின் சிறப்பம்சங்களையும் அறிவித்திருக்கின்றது. அதன் படி இந்த கருவியில் 5.4 இன்ச் டூயல் கர்வ்டு டிஸ்ப்ளே, டச் மற்றும் ஸ்லைடர் வடிவில் கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது, இதோடு 3410 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 ப்ளாக்பெரி புதிய கருவி, முன்பதிவுக்கு முந்துங்கள்..!!

முன்னதாக இந்த கருவி குறித்த விரிவான தகவல்களை இணையதளத்தில் காண முடிந்தது, அதன் படி இந்த கருவியில் 5.4 இன்ச் திரை, ஹெக்ஸாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 808 பிராசஸர், 3ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி, மெமரி கார்டு மூலம் நீட்டிக்கும் வசதி, ப்ளூடூத் 4.1, என்எப்சி, மைக்ரோயு-எஸ்பி போர்ட், 18 எம்பி ப்ரைமரி கேமராவும், ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

 

English summary
BlackBerry Priv Android Slider Smartphone Goes Up for PreRegistration. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot