Home
News

பிளாக்பெர்ரியின் கடைசி வாக்குறுதி - இதோ 'ஆண்ட்ராய்டு' ஆதாரம்.!

லீக் ஆனது பிளாக்பெர்ரி மெர்க்குரி குவெர்ட்டி ஆண்ட்ராய்டு போன்.!

By Muthuraj

பிளாக்பெர்ரி நிறுவனம் அதன் போன் தயாரிப்பை நிறுத்தி விட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அந்நிறுவனம் அதன் ரசிகர்களுக்காக கடைசியாக ஒரு குவெர்ட்டி போன் வெளியிடும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தது. பிளாக்பெர்ரியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் சென் கூட அதை உறுதி செய்யும் வண்ணம் "ஒரு கருவியை வெளியிட திட்டமிட்டுளோம் அது ஒருவேளை நிறுவனத்தின் கடைசி போன் என்றே அழைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

விபோ சமீபத்தில் வெளியிட்ட புதிய 'லீக்' புகைப்படங்கள் அந்த செய்தியை உறுதிப்படுத்தி அது உண்மையான ஒரு ஒப்பந்தம் தான் என்பதை நிரூபித்துள்ளது.

உரிமம்

உரிமம்

சென்'னின் அறிக்கை மூலம் வெளியாகும் பிளாக்பெர்ரி போன் ஆனது மெர்குரி என்ற பெயர் கொண்டதாக இருக்கும் கூறப்படுகின்றது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அல்காடெல் டிடெக் 50 மற்றும் டிடெக் 60 ஸ்மார்ட்போன்கள், பிளாக்பெர்ரி வர்த்தகத்தை பயன்படுத்தும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிராண்ட் பெயர் இல்லை

பிராண்ட் பெயர் இல்லை

சமீபத்திய வெளியான லீக்ஸ் படங்களில் உள்ள கருவியின் அமைப்பு ஒரு குவெர்ட்டி கீபேட் உடனான ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் ஒரு போன் போல காட்சியளிக்கிறது. எனினும்,அந்த போனில் எந்த விதமான பிராண்ட் பெயரும் இல்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

"அது வருகிறது"

கடந்த நவம்பர் மாதத்தில்சென் அளித்த ஒரு பேட்டியில் "மக்களுக்கு வாக்குறுதி அளித்த படி ஒரு கீபோர்ட் தொலைபேசி எங்களிடம் உண்டு" என்று கூறினார். மேலும் அவர் ஒரு கால கொடுக்காமல் "அது வருகிறது" என்று கூறினார். ஒருவேளை பிளாக்பெர்ரியின் கடைசி கருவி 2017-ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே அறிமுகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மென்பொருள்

மென்பொருள்

கடந்த செப்டம்பர் நிறுவனம் போன்கள் தயாரிப்பை நிறுத்துக்கொண்டு அதற்கு பதிலாக தனித்து மென்பொருள் மீது மட்டுமே வேலை செய்யும். மற்றும்தொலைபேசிகள் தயாரிப்பை செய்ய மற்றவர்களுக்கு உரிமம் வழங்கப்படும் என்று பிளாக்பெர்ரி நிறுவனம் மூலம் அறிவிக்கப்பட்டது.

டிடெக் 50 மற்றும் டிடெக் 60

டிடெக் 50 மற்றும் டிடெக் 60

பிளாக்பெர்ரி சமீபத்தில் இந்தியாவில் டிடெக் 50 மற்றும் டிடெக் 60 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது, அந்த இரண்டு போன்களுமே அல்காடெல் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. டிடெக் 50 மற்றும் டிடெக் 60 கருவிகளின் விலை ரூ 21.990/- மற்றும் முறையே ரூ 46.990/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிடெக் 50 அம்சங்கள் :

டிடெக் 50 அம்சங்கள் :

5.2-அங்குல 1080பி டிஸ்ப்ளே,
3ஜிபி ரேம், மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 2 டிபி வரை விரிவாக்கம்,
16 ஜிபிஉள்ளடக்க சேமிப்பு,
குவால்காம் ஸ்னாப்டிராகன் 617 செயலி

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டிடெக் 60 அம்சங்கள் :

டிடெக் 60 அம்சங்கள் :

5.5-அங்குல க்யூஎச்டி கீறல் மற்றும் அழுக்கு தட எதிர்ப்பு டிஸ்ப்ளே,
ஸ்னாப்டிராகன் 820,
4ஜிபி ரேம் 4GB (32ஜிபி விரிவாக்க சேமிப்பு வசதி)

மேலும் படிக்க

மேலும் படிக்க

மீண்டும் நோக்கியா : தமிழ்நாட்டின் செல்லக்குட்டி.. இந்தியாவின் சிங்கக்குட்டி..!

Best Mobiles in India

English summary
BlackBerry Mercury QWERTY Android phone images leaked. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X