Home
News

ஜனவரி 30ல் ப்ளாக்பெரி 10 இயங்கு தளத்தை அறிமுகம் செய்யும் ரிம்

By Karthikeyan
ஜனவரி 30ல் ப்ளாக்பெரி 10 இயங்கு தளத்தை அறிமுகம் செய்யும் ரிம்

கனடாவைச் சேரந்த மொபைல் நிறுவனமான ரிம் ப்ளாக்பெரி 10 என்ற புதிய இயங்கு தளத்தை வெகு விரைவில் களமிறக்க இருக்கிறது. அதற்கான அறிமுக விழாவை 2013 ஜனவரி 30ல் நடத்த இருக்கிறது. மேலும் அந்த விழாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களையும் ரிம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களில் ஒன்று முழு தொடுதிரையுடனும், மற்றொன்று குவெர்ட்டி கீபோர்டுடனும் வரும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் வரும் பிப்ரவரியில் விற்பனைக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதற்கு முன்பாகவே இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களைப் பற்றியும் மற்றும் புதிய ப்ளாக்பெரி 10 இயங்கு தளத்தைப் பற்றியும் ஏராளமான தகவல்கள் வருகின்றன. அதாவது ரிம்மின் சிஇஒவான தோர்ஸ்டன் ஹெய்ன்ஸ் மற்றும் ரிம்மின் துணைத் தலைவரான ஆன்ட்ரூ போக்கிங் ஆகியோர் ப்ளாக்பெரி 10 ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது ஒரு போட்டோக்களை வெளியிட்டிருக்கிறது ஒரு முக்கிய செய்தி நிறுவனம்.

அதிகார்ப்பூர்வமாக அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே ஏன் ப்ளாக்பெரி தனது புதிய ஸ்மார்ட்போனை கசியவிடுகிறது என்பது பலருக்கும் ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ப்ளாக்பெரி 10 இயங்கு தளத்தில் வருகிறது.

இந்த புதிய ப்ளாக்பெரி இயங்கு தளம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்கு தளங்களுக்குக் கடும் போட்டியாக இருக்கும் என்று ப்ளாக்பெரி தெரிவித்திருக்கிறது. அதோடு ப்ளாக்பெரி 10 இயங்கு தளம் ஒரு சிறப்பான வெப் ப்ரவுசரைக் கொண்டிருப்பதால் அது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த இன்டர்நெட் அனுபவத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X