Home
News

144 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 64 எம்பி கேமரா உடன் பிளாக் ஷார்க் 4 சீரிஸ்: விலை என்ன தெரியுமா?

பிளாக் ஷார்க் 4 சீரிஸ் ஸ்மார்ட்போனானது 144 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 64 எம்பி முதன்மை கேமராவுடன் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் கிடைக்கும் தன்மை மற்றும் இந்திய விலை குறித்து பார்க்கலாம்.

பிளாக் ஷார்க் 4 மற்றும் பிளாக் ஷார்க் 4 ப்ரோ

பிளாக் ஷார்க் 4 மற்றும் பிளாக் ஷார்க் 4 ப்ரோ

பிளாக் ஷார்க் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சீனாவில் பிளாக் ஷார்க் 4 மற்றும் பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. பிளாக் ஷார்க் 4 சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்கு பிறகு உலகளவில் அறிமுகமானது. அதேபோல் ப்ரோ மாடல் இறுதியாக ஒரு வருடத்திற்கு பிறகு உலகளாவிய சந்தைகளில் நுழைகிறது. பிளாக் ஷார்க் 4 ப்ரோ பதிப்பு தற்போது நிறுவனத்தால் உலகளவில் வெளியிடப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 ஆக்டோ கோர் ப்ராசஸர் மற்றும் அட்ரீனோ 660 ஜிபியூ ஆகியவை புதிதாக வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டிருக்கின்றன. குவால்காம்-ன் எக்ஸ்60 5ஜி மாடலை இணைப்புக்காக நிறுவனம் வழங்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஜாய் யுஐ 12.5 ஓவர்லேயில் இயங்குகிறது.

டிரிபிள் கேமரா ஆதரவு

டிரிபிள் கேமரா ஆதரவு

பிளாக் ஷார்க் 4 ப்ரோ எல்இடி ஃப்ளாஷ் உடன் டிரிபிள் கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 64 எம்பி பிரைமரி ஷூட்டர் மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 5 எம்பி மேக்ரோ லென்ஸ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் செல்பிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 20 எம்பி முன்புற கேமரா உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் பேட்டரி திறனை கொண்டிருக்கிறது. 120 வாட்ஸ் விரைவான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது டைப் சி சார்ஜிங் கனெக்டர், இரண்டு ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது. இரட்டை சிம், 5ஜி, ப்ளூடூத் 5.2 ஆகிய இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

இரண்டு சேமிப்பு வேரியண்ட்கள்

இரண்டு சேமிப்பு வேரியண்ட்கள்

இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு சேமிப்பு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.43,000 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.50,000 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கிடைக்கிறது.

சமீபத்திய ஸ்மார்ட்போனாக பிளாக் ஷார்க் 4

சமீபத்திய ஸ்மார்ட்போனாக பிளாக் ஷார்க் 4

பிளாக் ஷார்க் 4 எஸ் ப்ரோ சாதனமும் பிளாக் ஷார்க் 4 எஸ் உடன் அறிமுகமாகும் என தெரிவிக்கப்படுகிறது. ப்ரோ வேரியண்ட் சாதனம் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி உடன் வருகிறது. சமீபத்திய ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் எஸ்ஓசி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. பிளாக் ஷார்க் 4 எஸ் 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 120 டபிள்யூ ரேபிட் சார்ஜிங் வசதியோடு வரும் என கூறப்படுகிறது. இந்த சாதனங்கள் 1080 x 2400 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் வருகிறது. 6.67 இன்ச் சாம்சங் இ4 அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 720 ஹெர்ட்ஸ் ட்ச் மாதிரி விகிதம், எம்இஎம்சி தொழில்நுட்ப ஆதரவு மற்றும் 1300 நிட்ஸ் பிரகாசம் ஆகியவைகளுடன் வருகிறது. பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன்கள் சிறந்த கேமிங் சாதனங்களில் ஒன்றாக அறிமுகம் செய்ய உள்ளது. கேமிங் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சமீபத்திய ஸ்மார்ட்போனாக பிளாக் ஷார்க் 4 இருக்கும்.

Best Mobiles in India

English summary
Black Shark 4 Series Launched in india With 64 MP Primary camera, 12GB RAM and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X