Home
News

யாரும் பார்த்திடாத கொடூரமான விண்வெளி நிகழ்வை படம்பிடித்த NASA.! ஸ்டாரை சுக்குநூறாக்கி விழுங்கிய பிளாக் ஹோல்.!

அமெரிக்காவின் நாசா (NASA) விண்வெளி ஆராய்ச்சி மையம், முன்னோடியாக திகழும் ஒன்றாகும். மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் பல தொலைநோக்கிகள் (Telescope) மற்றும் செயற்கை கோள்களை (Satellite) நாசா விண்ணில் செலுத்தி உள்ளது.

நாசா நிறுவிய தொழில்நோக்கிகளில், மிகவும் முக்கியமான ஒரு டெலஸ்கோப் என்றால், நாம் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்பை (Hubble Space Telescope) எப்போதுமே குறிப்பிடலாம். இப்போது களத்தில் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் (James Webb Telescope) தான் ராஜாவாக இருக்கிறது. இருப்பினும், 1990 ஆம் ஆண்டு லோ எர்த் ஆர்பிட்டில் (Low Earth Orbit) நிறுவப்பட்ட, இந்த ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்பிற்கு எப்போவுமே ஒரு தனி பிரியம் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் உண்டு.

யாரும் பார்த்திடாத கொடூரமான விண்வெளி நிகழ்வை படம்பிடித்த NASA.!

முழு நட்சத்திரத்தை அப்படியே விழுங்கிய பிளாக் ஹோல்.!

ஏனெனில், இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் பல வியப்படையும் விண்வெளி உண்மைகளை கண்டறிந்துள்ளனர். விண்ணில் செலுத்தப்பட்ட மிகப் பெரிய டெலஸ்கோப்புகளில் இந்த ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்பும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளி ஆராய்ச்சிக்கான தகவல்களை தருவது மட்டுமின்றி, விண்வெளி பற்றிய கண்கவர் காட்சிகளையும், புகைப்படங்களையும் படம் பிடித்து மக்களுக்கு காட்டியதில் ஒரு மிகப்பெரிய பங்கு இந்த ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்பிற்கு உண்டு.

சமீபத்தில், நாசா வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் (James Webb Space Telescope), இந்த ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் வேலையை குறைத்து இருக்கிறது என்றே சொல்லலாம். ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் வரவிற்குப் பிறகும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் இன்னும் செயல்பாட்டில் தான் உள்ளது.

இந்த ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்பானது, சமீபத்தில் பிளாக் ஹோல் (Black Hole) ஒரு நட்சத்திரத்தை (Star) முழுமையாக விழுங்கும் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. பிளாக் ஹோல் நட்சத்திரத்தை விழுங்கும் நிகழ்வு அவ்வப்போது நடக்கும் என்றாலும், அதனை சரியான நேரத்தில் படம் பிடிப்பது மிகவும் கடினமான ஒன்றுதான். அதனை, ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

யாரும் பார்த்திடாத கொடூரமான விண்வெளி நிகழ்வை படம்பிடித்த NASA.!

300 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் நடந்த கொடூரமான நிகழ்வு.!

பிளாக் ஹோல் அந்த நட்சத்திரத்தை விழுங்கும் பொழுது, டோனட் (Doughnut) மாதிரியான ஒரு உருவத்தை காஸ்மிக் துகள்கள் கொண்டு உருவாக்கியதை நாசாவின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிளாக் ஹோல் அந்த நட்சத்திரத்தை விழுங்கும் போது, அதிலிருந்து வெளியான வாயுவை அதனைச் சுற்றி சுழல்வது போல செய்து, அதனை ஒரு டோனட் வடிவம் போல உருவாக்கியுள்ளது. அந்த டோனட் வடிவத்தின் பரப்பளவு நம் சூரிய குடும்பத்தின் அளவை ஒத்து இருந்ததாகக் கணிக்கப்படுகிறது.

பொதுவாக, பிளாக் ஹோலால் ஒரு நட்சத்திரம் விழுங்கப்படும் பொழுது, அது ஒரு குறிப்பிட்ட ரேடியேஷனை வெளியிடும். அந்த ரேடியேஷனை ஆராய்ச்சி செய்வதன் மூலம் தான் விஞ்ஞானிகள் அந்த நிகழ்வை பற்றி தெரிந்து கொள்வர். இப்படி பிளாக் ஹோல் ஒரு முழு நட்சத்திரத்தை விழுங்கும் நிகழ்வை டைடல் டிஸ்ரப்ஷன் ஈவன்ட் (Tidal Disruption Event) என்று குறிப்பிடுவார்கள். பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்வுகளில் இது மிகவும் வன்மையானது.

வன்மையானது மட்டுமின்றி மிகவும் சிக்கலானது என்றும் நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய நிகழ்வுகளை பற்றிய ஆதாரங்கள் கிடைப்பது, அந்த நிகழ்வுகளைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இப்போது, ஹப்பிள் டெலஸ்கோப் படம் பிடித்துள்ள இந்த காட்சியானது 300 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் நடந்த ஒரு நிகழ்வாகும்.

யாரும் பார்த்திடாத கொடூரமான விண்வெளி நிகழ்வை படம்பிடித்த NASA.!

என்னது.! இந்த சம்பவம் பல மில்லியன் ஆண்டுக்கு முன் நடந்த நிகழ்வா? பூமியில் இப்போது தெரிய காரணம் என்ன?

அப்படியானால், இது சமீபத்தில் நடந்த நிகழ்வு இல்லை. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்விலிருந்து வெளியான ஒளியானது இப்போது தான் நம்முடைய டெலஸ்கோப்பை வந்து அடைந்துள்ளது. அதாவது, ஹப்பிள் டெலஸ்கோப் இப்போது படம் பிடித்து காட்டியிருப்பது, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஹப்பிள் டெலஸ்கோப் கண்டறிந்த ரேடியேஷனானது (Radiation) எக்ஸ்-கதிர்களின் ஒளியை (X-Ray Light) அல்ல. அவை புற ஊதா ஸ்பெக்ட்ரத்தை (Ultraviolet Spectrum) சேர்ந்ததாகும். இத்தகைய ஒளியானது மனிதனின் கண்களுக்கு புலப்படாது. அவற்றை விசிபில் ஒளியாக (Visible Light) மாற்றியமைத்த பின்னரே விஞ்ஞானிகள் அதனை ஆராய்ச்சி செய்ய முடியும். பிளாக் ஹோலில் சிக்கி ஒரு நட்சத்திரம் அழிவது இது முதல் முறையல்ல.

More from GizBot

Best Mobiles in India

English summary
Black Hole Eating A Star Millions Of Light Years Away Captured By NASA's Hubble Telescope
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X