Home
News

பரபரக்கும் Black Friday Sale.. எந்தெந்த சர்வதேச வலைத்தளங்கள் இந்தியாவிற்கு ஷிப்பிங் செய்கின்றன? இதோ லிஸ்ட்!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை காலத்தின் போது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வலைத்தளங்களானது போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வாரி வழங்கும் அல்லவா? அதுபோன்ற ஒரு சர்வதேச சிறப்பு விற்பனை தான் - பிளாக் ஃப்ரைடே சேல் (Black Friday Sale)!

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் மற்றும் ஹாலிடே ஷாப்பிங் பருவத்தின் (Christmas and Holiday Shopping season) தொடக்கத்தை குறிக்கும் இந்த சிறப்பு விற்பனையில் இந்தியாவில் இருப்பவர்களால் எப்படி பங்குகொள்ள முடியும்? எப்படி பொருட்களை ஆர்டர் செய்ய முடியம் என்று சிலர் கேட்கலாம்.

எந்தெந்த சர்வதேச வலைத்தளங்கள் இந்தியாவிற்கு ஷிப்பிங் செய்கின்றன?

கண்டிப்பாக பங்குகொள்ள முடியும். ஏனென்றால், ஏற்கனவே (நவம்பர் 24 ஆம் தேதி முதல்) தொடங்கிவிட்ட பிளாக் ஃப்ரைடே விற்பனையை நடத்தும் சில சர்வதேச இணையதளங்கள் ஆனது இந்தியாவிற்கும் ஷிப்பிங் செய்கின்றன. அதாவது இந்தியாவில் இருந்தபடியே கூட உங்களால் ஷாப்பிங் செய்ய முடியும்.

இதற்கான ஷிப்பிங் செலவு மற்றும் பொருந்தக்கூடிய வரிகளை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். சரி வாருங்கள் எந்தெந்த சர்வதேச வலைதளங்கள் (பிளாக் ஃப்ரைடே விற்பனையின் போது நீங்கள் ஆர்ட்ர் செய்யும் பொருட்களை) இந்தியாவிற்கு ஷிப்பிங்ஸ் செய்கின்றன என்கிற பட்டியலை பார்ப்போம்.

எந்தெந்த சர்வதேச வலைத்தளங்கள் இந்தியாவிற்கு ஷிப்பிங் செய்கின்றன?

அமேசான் யுஎஸ் (Amazon US): அமேசான் யுஎஸ் வலைத்தளமானது இந்தியாவிற்கும் டெலிவரி செய்கிறது. இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அமேசான் ஆப்பில் உங்கள் நாட்டை மாற்ற வேண்டும் அல்லது நேரடியாக அமேசான் யுஎஸ் வலைத்தளத்திற்குள் செல்லவேண்டும்; ஷாப்பிங் செய்ய வேண்டும்.

மேசி'ஸ் (Macy's): அமெரிக்காவை தளமாக கொண்ட சில்லறை விற்பனையாளர் ஆன மேசி'ஸ் வலைத்தளமும் கூட இந்தியாவிற்கு ஷிப்பிங் செய்கிறது. வாடிக்கையாளர்கள் ரூபாய் உட்பட தங்களுக்கு விருப்பமான நாணயத்தில் macys.com இல் ஷாப்பிங் செய்யலாம். ஏசாஸ் (Asos): ஏசாஸ் என்பது இங்கிலாந்தை தளமாக கொண்ட ஃபேஷன் இணையதளமாகும். இதுவும் இந்தியாவிற்கு ஷிப்பிங் செய்கிறது.

எந்தெந்த சர்வதேச வலைத்தளங்கள் இந்தியாவிற்கு ஷிப்பிங் செய்கின்றன?

பியூட்டி பே (Beauty Bay): மேக்கப் பிரியர்களில் மத்தியில் மிகவும் பிரபலமான பியூட்டி பே வலைத்தளமும் கூட இந்திய நாணயத்தில் விலைகளை காட்டுகிறது; இந்தியாவிற்கு ஷிப்பிங் செய்கிறது. பியூட்டி ஜாயின்ட் (Beauty Joint): மற்றொரு மேக்கப் பொருட்கள் விற்பனையாளர் ஆன பியூட்டி ஜாயின்ட் பரந்த அளவிலான ஒப்பனை தயாரிப்புகளை கொண்டுள்ளது. இதுவும் இந்திய நாணயத்தில் விலைகளைக் காட்டுகிறது.

இந்த பட்டியலில் ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ், காலணிகள் மற்றும் பைகள் போன்றவைகளை விற்பனை செய்யும் லைட் இன் தி பாக்ஸ் (LightInTheBox), அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜேக்ரூ.காம் (JCrew.com), நகைகள், ஆடைகள், காலணிகள், வீட்டு பொருட்ஜ்கள், கலை மற்றும் சேகரிப்புகள், கைவினை பொருட்கள் மற்றும் விண்டேஜ் பொருட்ககளை விற்கும் இட்ஸி (Etsy) போன்ற சர்வதேச வலைத்தளங்களும் உள்ளன.

கடைசியாக பரந்த அளவிலான அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் ஸ்ட்ராபெரி நெட் (Strawberry பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்யும் சியர்ஸ்.காம் (Sears.com) போன்றவைகளும் கூட டெலிவரி செய்யப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை கொண்டுள்ளன. சியர்ஸ் வலைத்தளம் ஆனது இறுதி விலை உத்தரவாதம் மற்றும் டெலிவரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது போன்ற வாக்குறுதிகளை வழங்குகிறது.

இந்தியாவில் உள்ள சில உள்ளூர் பிராண்டுகளும் கூட தங்களுக்கான சொந்த பிளாக் ஃப்ரைடே விற்பனையை நடத்துகின்றன / நடத்தின. இந்த பட்டியலில் விஜய் சேல்ஸ் (Vijay Sales), க்ரோமா (Croma), ஏஜியோ (Ajio), எச் அண்ட் எம் (H&M), ஸாரா (Zara), நைக்கா (Nykaa) போன்றவைகள் அடக்கம்.

விஜய் சேல்ஸின் பிளாக் ஃப்ரைடே விற்பனையானது நவ.24 முதல் 27 வரை நடக்கும். க்ரோமாவின் பிளாக் ஃப்ரைடே விற்பனையானது நவ.24 முதல் 267 வரை நடக்கும். ஏஜியோவின் பிளாக் ஃப்ரைடே விற்பனையானது நவ.24 முதல் 27 வரை நடக்கும். மேலே உள்ள சில உள்ளூர் பிராண்டுகளின் பிளாக் ஃப்ரைடே விற்பனை தொடங்கிய வேகத்தில் முடிந்தும் விட்டன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Black Friday Sale 2023 International websites Shipping to India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X