ஒரே ஒரு டுவிட்தான் முதலிடம் போச்சு: உலக பணக்காரர் பட்டியில் கீழ் இறங்கிய "எலான் மஸ்க்"- என்ன தெரியுமா?

|

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், கிரிப்டோகரன்சிகளை தனது நிறுவன கார்களுக்கு கட்டண வடிவமாக ஏற்றுக் கொள்ள தொடங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து பிட்காயின் மதிப்பு சமீபத்தில் அதிகரித்தையடுத்து எலான் மஸ்க் டுவிட்டுக்கு பிறகு மீண்டும் பிட்காயின் மதிப்பு அதிகரிக்கத்துள்ளது.

எலான் மஸ்க் பதிவிட்ட டுவிட்

எலான் மஸ்க் பதிவிட்ட டுவிட்

மறுபுறம் எலான் மஸ்க் பதிவிட்ட பிட்காயின் குறித்த டுவிட்டர் மதிப்புக்கு பிறகு டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தது. இதையடுத்து உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி

காரணம் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் வீழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. எலான் மஸ்க் டுவிட் செய்த ஒரே நாளில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டாவது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 186.3 பில்லியன் சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

பிட்காயின் என்றால் என்ன

பிட்காயின் என்றால் என்ன

இணையம் சார்ந்த பண பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சேர்ந்தது பிட்காயின். வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு எதிராக இருப்பவை இந்த பரிவர்த்தனை. இந்தியாவில் பல இடங்களில் பிட்காயின் பெயர் எதிரொலிப்பது வழக்கம். காரணம் பிட்காயின் மதிப்பு குறுகிய காலத்தில் அதிகளவு அதிகரித்து வருகிறது.

டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ்

எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். இந்த நிறுவனங்களை இவர் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகளை கண்டுள்ளார். தோல்வி அடையும் போது இவர் பெரும்பாலும் உச்சரிக்கும் ஒரு வார்த்தை, இது வெற்றிகரமான தோல்வி என்பதுதான்.

ஜெப் பெசாஸ் மீண்டும் முதலிடம்

ஜெப் பெசாஸ் மீண்டும் முதலிடம்

கடந்த நவம்பர் மாதத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி எலான் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்ந்ததையடுத்து அவரது சொத்து மதிப்பு உயர்ந்தது. இந்தநிலையில் மீண்டும் எலான் மஸ்க் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். எலான் மஸ்க் பலரின் நாயகனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Bitcoin Value Increased Again After Elon Musk's Tweet: Tesla Elonmusk Loses Worlds First Richest Person Place

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X