பிட்காயினுக்கு எதிராக களம் இறங்கிய கூகுள்.!

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சாதனங்களில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் செயலிகளை இனி அனுமதிக்க மாட்டோம்.

|

ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் க்ரிப்டோகரென்சிக்களை மைன் செய்யும் செயலிகளுக்கு தடை விதித்து இருக்கிறது. தனது பிளே ஸ்டோர் விதிமுறைகளை மாற்றியிருக்கும் கூகுள் இனி க்ரிப்டோகரென்சி செயலிகளை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சாதனங்களில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் செயலிகளை இனி அனுமதிக்க மாட்டோம். க்ரிப்டோகரென்சி மைனிங்கை கண்கானிக்கும் செயலிகளை அனுமதிப்போம் என தெரிவித்திருக்கிறது. எனினும் பிளே ஸ்டோரில் க்ரிப்டோ-மைனிங் செய்யும் செயலிகள் கிடைக்கும் பட்சத்தில், இந்த தடை புதிய க்ரிப்டோ கரென்சி செயலிகளுக்கு பொருந்துமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

மற்றவர்களின் நிறம், தோற்றம்

மற்றவர்களின் நிறம், தோற்றம்

இத்துடன் வன்முறையை தூண்டுவது, மற்றவர்களின் நிறம், தோற்றம் அல்லது இதர அம்சங்களை வைத்து தீங்கு விளைவிக்கும் வகையிலான தரவுகளை கொண்ட செயலிகளை அனுமதிக்க முடியாது என கூகுள் தெரிவித்துள்ளது. க்ரிப்டோகரென்சி மைனர்களுக்கு இனி கூகுள் பிளே ஸ்டோரில் இடம் கிடையாது என்பது புதிய விதிமுறைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

க்ரிப்டோ மைனர்

க்ரிப்டோ மைனர்

மைனர்கேட், க்ரிப்டோ மைனர் மற்றும் நியோமைனர் என போன்று பல்வேறு மைனிங் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. முன்னதாக இதே ஆண்டில் க்ரோம் வெப் ஸ்டோரில் இருந்து க்ரிப்டோ மைனிங் எக்ஸ்டென்ஷன்களை கூகுள் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெடிபொருள் விற்பனை

வெடிபொருள் விற்பனை

அந்த வகையில் தற்சமயம் வெடிபொருள் விற்பனை, ஆயுதங்கள் மற்றும் இதர உபகரணங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் செயலிகளை கூகுள் தடை செய்திருக்கிறது. இதேபோன்று ஒரு மாதிரியான பயனர் அனுபவம் மற்றும் ஒரே அம்சங்களை வழங்கும் செயலிகள் மற்றும் ஆட்டோமேட்டெட் டூல் மூலம் உருவாக்கப்பட்ட செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து தடை செய்யப்படுகிறது.

கூகுள் முடக்க இருக்கிறது

கூகுள் முடக்க இருக்கிறது

மேலும் அதிகளவு விளம்பரங்களை வழங்குவது மற்றும் பயனர்களை அடிக்கடி திசைதிருப்பும் வகையிலான செயலிகளையும் பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் முடக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Bitcoin suffers another big blow this time from Google: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X