மெகா ஹேக்கிங்:ரூ.89 லட்சம் அபேஸ்: 1000 கொடுத்தால் 2000 என ட்வீட்- வாரி வழங்கிய மக்கள்!

|

கன்யே வெஸ்ட், எலோன் மஸ்க், பராக் ஒபாமா, கிம் கர்தாஷியன் மற்றும் பலரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதன் மூலம் ஹேக்கர்கள் சுமார் ரூ.89 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

பலரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்

பலரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்

சமீபத்தில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் கன்யே வெஸ்ட், எலோன் மஸ்க், பராக் ஒபாமா, கிம் கர்தாஷியன் மற்றும் பலரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அதிகாரபூர்வமான ட்விட்டர் கணக்குகள் ஹேக்

அதிகாரபூர்வமான ட்விட்டர் கணக்குகள் ஹேக்

அதன்படி அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி நட்சத்திரம் கிம் கர்தாஷியன்,முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபமா, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் ராப்பர் கன்யே உள்ளிட்டவர்களின் அதிகாரபூர்வமான ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

Airtel பயனரா நீங்க, அப்போ உஷார்! 12 லட்சம் வாடிக்கையாளர்கள் சத்தமில்லாமல் அப்ஸ்காண்ட்!Airtel பயனரா நீங்க, அப்போ உஷார்! 12 லட்சம் வாடிக்கையாளர்கள் சத்தமில்லாமல் அப்ஸ்காண்ட்!

உலகப் பிரபலங்களின் கணக்குகள்

உலகப் பிரபலங்களின் கணக்குகள்

மேலும் உலக அளவில் ஹேக் என்பது இணையசெயல்பாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளது, அரசின் தனிப்பட்ட இணையத்தில் கூட ஹேக்கர் ஊடுவிவிகிறார்கள். இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த மிகப் பெரும் உலகப் பிரபலங்கள் பலர் தற்போது ஹேக்கர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிட்காயினுக்கு விளம்பரட் செய்யும் வகையில் ட்வீட்

பிட்காயினுக்கு விளம்பரட் செய்யும் வகையில் ட்வீட்

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பில்கேட்ஸ், எலான் மஸ்க், கேன் வெஸ்ட், கிம் கர்டாஷின் வெஸ்ட், ஜெப் பெசோஸ், மைக் ப்ளூம்பெர்க் ஆகியோரது ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. அவர்களுடைய ட்விட்டர் பக்கங்களில் பிட்காயினுக்கு விளம்பரட் செய்யும் வகையில் ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சி

பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சி

குறிப்பாக பிட்காயின் ஸ்கேம் என்று அழைக்கப்படும் இந்த ஹேக் சம்பவத்தில் ஹேக் செய்யப்பட்ட டிவிட்டர் கணக்குகளிலிருந்து பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சிகளை நன்கொடைகள் வழங்குமாறு குறிப்பிட்டுள்ளனர்.

ஒபாமா ட்விட்டர் பக்கம்

ஒபாமா ட்விட்டர் பக்கம்

ஒபாமா ட்விட்டர் பக்கத்தில், கொரோனாவின் காரணமாக நான் என்னுடை சமூகத்துக்கு அனைத்தையும் திரும்ப வழங்கப் போகிறேன். என்னுடைய முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள எல்லா பிட்காயின்களையும் நான் இரட்டிப்பாக திரும்ப அனுப்பப் போகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹேக் குறித்து விசாரணை

ஹேக் குறித்து விசாரணை

இந்த ட்வீட்டுகள் பதியப்பட்ட சில நிமிடங்களிலேயே அழிக்கப்பட்டன. ஹேக்கர்களின் நடவடிக்கையை தடுக்க, பிரபலங்களின் வெரிஃபைட் கணக்குகள் பலவற்றை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியது. புதிய டுவீட், கடவுச்சொல் மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

கீழடி உறைகிணறு கூறும் உண்மை இதுதானா? தமிழருக்கும் சுமேரிய நாகரிகத்திற்கும் தொடர்பா?கீழடி உறைகிணறு கூறும் உண்மை இதுதானா? தமிழருக்கும் சுமேரிய நாகரிகத்திற்கும் தொடர்பா?

அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்

அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்

இருப்பினும், அதற்குள் இந்த டுவீட்டுகளை நம்பி பலர் அந்த முகவரிக்கு பிட்காயின்களை வாரி வழங்கிவிட்டனர். இதில், $116,000 (ரூ.89 லட்சம்) மதிக்கத்தக்க 12.58 பிட்காயின்களை அப்பாவி மக்கள் ஹேக்கர்களிடம் பறிக்கொடுத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உலகளவில் இணைய வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

source: indiatimes.com

Best Mobiles in India

English summary
Bitcoin scam hackers earn nearly Rs.89 lakhs: after obama, musk and more twitter accounts hack

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X