Home
News

இனி மெசேஜ் அனுப்ப இன்டெர்நெட் தேவையில்லை.. Bitchat செயலி ஐபோனில் அறிமுகம்.. இதோ முழு விபரம்..

எக்ஸ் (X) நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி 'பிட்சாட்' (Bitchat) என்ற செயலியை தற்போது ஐபோன்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். அதுவும் ஐபோன் பயனர்கள் இந்த செயலியை ஆப் ஸ்டோரில் (App Store) பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஆனால் இந்த புதிய பிட்சாட் செயலி பிளே ஸ்டோரில் எப்போது அறிமுகமாகும் என்று இன்னும் அறிவிக்கவில்லை.

நாம் இப்போது அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற பிரபலமான செயலிகளுக்கு இணைய இணைப்பு என்பது கட்டாயம் என்ற நிலையில் பிட்சாட் அதிலிருந்து மாறுபட்டு இணைய வசதி இல்லாமலேயே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இனி மெசேஜ் அனுப்ப இனி இன்டெர்நெட் தேவையில்லை.. Bitchat செயலி அறிமுகம்.

அதேபோல் பிட்சாட் ஆனது புளூடூத் மெஷ் (Bluetooth mesh) நெட்வொர்க்கிங்கில் இயங்குகிறது. அதேபோல் இந்த செயலி மூலம் பயனர்கள் இணைய அணுகல் இல்லாத பகுதிகளிலும் (அ) இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட சூழ்நிலைகளிலும் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலி மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் பயனுள்ள வகையில் இருக்கும். அதாவது பேரிடர் காலங்கள் அல்லது தொலைதூர கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஜாக் டோர்சியின் மற்றொரு புதிய தளமான ப்ளூஸ்கை (Bluesky) போலவே, பிட்சாட்டும் decentralised தளமாகச் செயல்படுகிறது.

இந்த பிட்சாட் செயலிக்கு எந்தவிதமான central servers கிடையாது என்று கூறப்படுகிறது. அதுவும் இது பயனர்களின் தரவு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்துகிறது. அதாவது செய்திகள் எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷன் (end-to-end encryption) செய்யப்பட்டு, பயனர்களின் சாதனங்களில் மட்டுமே தற்காலிகமாகச் சேமிக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு செய்திகள் தானாக அழிக்கப்படுகின்றன

வாட்ஸ்அப் அல்லது மெசஞ்சர் போன்ற பாரம்பரிய செயலிகளைப் போல இல்லாமல் பிட்சாட்டிற்கு மொபைல் எண், மின்னஞ்சல் அல்லது ஒரு கணக்கு கூட தேவையில்லை. அதாவது இது இது புளூடூத் லோ எனர்ஜி (BLE) வழியாக அருகிலுள்ள செய்திகளை அனுப்ப அனுமதிக்கிறது.

இந்த பிட்சாட் செயலி 2019 ஹாங்காங் போராட்டங்களில் (2019 Hong Kong protests) பயன்படுத்தப்பட்ட புளூடூத் அடிப்படையிலான செயலிகளைப் போல் ஒத்துப்போகும். இது இணைய முடக்கங்கள் அல்லது கண்காணிப்பு நிலவும் சூழல்களில் பயனுள்ளதாக இருக்கும். முன்பு கூறியது போல் பேரிடர் மீட்பு, போராட்டங்கள், தொலைதூர பகுதிகள் மற்றும் தனியுரிமையை விரும்பும் பயனர்களுக்கு ஏற்றபடி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலியில் ரூம்ஸ் எனப்படும் குழு அரட்டைகளை உருவாக்கலாம். பின்பு இவை ஹேஷ்டேக் மூலம் பெயரிடப்பட்டு கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படலாம். மேலும் ஸ்டோர்-அண்ட்-ஃபார்வர்டு அம்சம் மூலம் ஆஃப்லைனில் இருக்கும் பயனர்களுக்குச் செய்திகள் பின்னர் வழங்கப்படும்.

அதுவும் ஐபோன், மேக், ஐபேட் அல்லது ஆப்பிள் விஷன் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களில் இந்த புதிய பிட்சாட் செயலியை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிட்சாட் செயலி ஆனது தகவல்தொடர்பு உலகில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. அதுவும் இணையச் சார்பற்ற மற்றும் தனியுரிமையை மையமாகக் கொண்ட இந்த செயலி, எதிர்காலத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BitChat app launched on iPhones that works without internet access: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X