Home
News

விபத்தில் உடலுறுப்புகளை இழந்த பெண் டெக்னாலஜி மூலம் நார்மலான அதிசயம்!

ஒரு அமெரிக்க பொறியாளர் சமீபத்தில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி முதுகு, கணுக்கால் மற்றும் முழங்கால்களில் பலத்த காயம் அடைந்தார். அவரது உடலை சரிசெய்ய பல்வேறு டெக்னாலஜி உதவியதால் அவர் தற்போது ஒரு நார்மலான மனிதர் போல் நடமாடி வருகிறார்.

மிண்டர் மிர்ஸ்

மிண்டர் மிர்ஸ்

மிண்டர் மிர்ஸ் என்ற 31 வயதான இந்த பெண்ணின் உடலில் வைக்கப்பட்டுள்ள சில விஷயங்கள் அவரது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுவதாக கூறினார். கதவுகளைத் திறக்கவும், தகவல்களை அனுப்பவும் அவருக்கு கைகள் தேவையில்லை. அவரது உடலில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு மைக்ரோசிப்கள் போதுமானது. அதேபோல் அவரது கையில் எல்.ஈ.டி விளக்குகளும் கைவிரல்களில் காந்தங்களும் பொருத்தப்படுள்ளது.

 எலக்ட்ரானிக் பொருள்

எலக்ட்ரானிக் பொருள்

கிட்டத்தட்ட ஒரு பயோனிக் பெண்ணாக மாறியுள்ள இந்த பெண் விபத்துக்கு பின் தனக்குள் பொருத்தப்பட்டிருக்கும் இவ்வகை பொருட்களால் அவரால் தற்போது யாருடைய துணையும் இல்லாமல் சுயமாக இயங்க முடிகிறது என்று கூறியுள்ளார். 'எனது முழங்கால்களில் ஒன்று மருத்துவ ரீதியாக 3D அச்சிடப்பட்டுள்ளது என்றும் அதன் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் எலக்ட்ரானிக் பொருள் தனக்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே தனக்கு மனரீதியாக எந்தவித பிரச்சனையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

சிறிய மைக்ரோசிப்

சிறிய மைக்ரோசிப்

இந்த பெண்ணின் இடது கையில் வைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய மைக்ரோசிப்பைப் அவரது வீட்டின் கதவைத் திறக்க உதவுகிறது. அவர் கதவை திறக்க சாவியை தேட வேண்டிய அவசியம் இல்லை. மைக்ரோசிப்பில் வைக்கப்பட்டுள்ள டெக்னாலஜி கதவில் உள்ள டெக்னாலஜியை இயங்க வைத்து தானியங்கி கதவினை திறக்கின்றது. அதாவது அவருக்கு ஒரு ஊழியர் போல் மைக்ரோசிப் செயல்படுகிறது.

எல்.ஈ.டி விளக்குகள்

எல்.ஈ.டி விளக்குகள்

இந்த பெண்ணின் வலது கையில் வைக்கப்பட்டுள்ள மற்றொரு மைக்ரோசிப், அவரது வணிக அட்டை தகவல்களைக் கொண்டுள்ளது. இந்த விபரங்கள் ஒரு ஸ்மார்ட்போனுடன் இணைத்தால் உடனே அது ஸ்கேன் மூலம் நெட்வொர்க்கைப் பார்க்கும் வசதியை செய்து கொடுக்கும். அதேபோல் இந்த பெண்ணின் விரல் நுனியில் உள்ள காந்தங்கள் மற்றும் அவளது முன்கையில் பதிக்கப்பட்ட எல்.ஈ.டி விளக்குகள் அவரது அன்றாட வேலை செய்ய உதவுகிறது.

வீட்டு சாவி

வீட்டு சாவி

என் உடலில் வைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் செயல்திறன் மிக்கவை மற்றும் எதிர்வினை ஆற்றுபவை. 'எனக்கு ஒரு மோசமான சம்பவம் நடந்ததால் அதை சரி செய்ய மருத்துவ ரீதியாக நான் காத்திருப்பதற்கு பதிலாக, நான் இந்த முறையை கையாண்டதால் இப்போது கவலையின்றி எல்லோரும் போல் இருக்கின்றேன். நான் என் வீட்டு சாவியை மறந்துவிடவே முடியாது. ஏனெனில் அது கையிலேயே உள்ளது. என் கையில் உள்ள எல்.ஈ.டிக்கள் என் வாழ்க்கையில் பிரகாசிக்க செய்கின்றன, என் கையில் பொருத்தப்பட்டுள்ள காந்தம் தான் எனக்கு துணை என்று அவர் தன்னம்பிக்கையுடன் கூறியது அனைவரையும் கவர்ந்தது.

Best Mobiles in India

English summary
Bionic American engineer 31 got microchip implants near death experience: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X