ரீடுவிட் செய்த ஒவ்வொருவருக்கும் ரூ.6.55 லட்சம்: 1000 பேருக்கு இன்ப அதிர்ச்சி- யார்? எதற்கு தெரியுமா?

|

ஜப்பானை சேர்ந்த பிரபல நிறுவனமான சோசோ ஆன்லைன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் யூசகு மேசவா கடோ. கோடீஸ்வரரான யூசகு மேசவா, பணம் சேர்ப்பது மட்டுமில்லாமல் பல வித்தியாசமான அணுகுமுறையால் பலரது கவனத்தையும் ஈர்ப்பதில் வல்லவர்.

பணம் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்

பணம் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்

கலை, ஸ்போர்ட்ஸ் கார்கள் என பல விஷயாங்களில் ஆர்வம் கொண்ட யூசகு பணம் இல்லாத உலகம் எப்படி இருக்கும் எனவும் அவ்வப்போது கள ஆய்வுகளை மேற்கொள்வார். பணம் குறித்த முக்கியத்துவத்தையும், அது தனி மனிதனின் வாழ்வில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ள தனக்கே உரித்தான பாணியை கையாண்டு ஆச்சரியப்படுத்துவார்.

நிலவுக்கு செல்ல முன்பதிவு

நிலவுக்கு செல்ல முன்பதிவு

இதில் குறிப்பாக ஒன்றை சுட்டிக்காட்டலாம் பொதுவாக பணக்காரர்கள் உலகை சுற்றி வந்த நேரத்தில் நிலவுக்கு செல்ல முன்பதிவு செய்தவர் தான் இந்த யூசகு. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நிலவுக்கு செல்ல இருக்கிறார் யூசகு. இதுபோன்ற வித்தியாசமான அணுகுமுறையாலும் ஆர்வத்தினாலும் அனைத்து தரப்பினரையும் கவனம் ஈர்க்கும் யூசகு தற்போது மீண்டும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ரீடுவிட் செய்த 1000 பேரை உற்சாகப்படுத்த திட்டம்

ரீடுவிட் செய்த 1000 பேரை உற்சாகப்படுத்த திட்டம்

இந்த நிலையில் யூசகு, ஜனவரி 1 ஆம் தேதி தான் செய்த டுவீட்டை ரீடுவிட் செய்த 1000 பேரை உற்சாகப்படுத்தும் விதமாக யூசகு, அவர்களுக்கு பணத்தை அள்ளி கொடுத்துள்ளார். மொத்தமாக ரூ.65.5 கோடியை வழங்கியிருக்கிறார்.

சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஸ்மார்ட் போன் போதும்: தலைமை தேர்தல் அதிகாரிசட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஸ்மார்ட் போன் போதும்: தலைமை தேர்தல் அதிகாரி

தாக்கத்தை ஆய்வு செய்ய திட்டம்

தாக்கத்தை ஆய்வு செய்ய திட்டம்

இது சமூகம் தொடர்பான சோதனை எந கூறும் அவர், இந்த பணம் அந்த குறிப்பிட்ட நபர்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக்கிறது என்பதை அறியும் முயற்சியாக இந்த பணத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்த பணத்தின் தாக்கம் அவர்களுக்கு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Billionaire to give rs.65.5 crore to twitter followers: Do you know why

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X