புது Xmail வருது.. குறிச்சாச்சு எலான் மக்ஸ்.. இனி Gmail-க்கு ஈஸியா இருக்காது.. Google கிட்ட இது பலிக்குமா?
ட்விட்டரை வாங்க போறேனு விளையாட்டாக சொன்ன எலான் மஸ்க் (Elon Musk), அதற்காக 44 பில்லியன் அமெரிக்க டாலரை செலவு செய்தார். அப்போது, ஒன்று மட்டும் புரிந்தது இவர் விளையாட்டாக எதையும் சொல்வது கிடையாது. இது சாத்தியமாகுமா என்று நாம் நினைத்து பார்க்கும் நேரத்தில் எலான் மஸ்க் அதை செய்துகாட்டிவிடுகிறார். இப்போது, அவரது குறி கோடிக்காணக்கான மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத சக்தியாக இருக்கும் ஜிமெயில் (Gmail) பக்கம் திரும்பி இருக்கிறது. இதையும் விளையாட்டாக எண்ணிவிடவும் முடியவில்லை.
ஜிமெயில் அக்கவுண்ட்டுக்கு (Gmai Account) மாற்றாக எதையும் வைத்து பார்க்க முடியாது. மைக்ரோசாப்ட் அவுட்லுக் (Microsoft Outlook), யாஹூ மெயில் (Yahoo Mail) போன்ற எந்த போட்டியாளர்களும் நெருங்க முடியாக உச்சத்தில் இப்போது ஜிமெயில் இருக்கிறது. ஆனால், விடாக்கண்டனுக்கு கொடாக்கண்டன் இருப்பான் என்பது இப்போது உண்மையாகிவிட்டது.

447 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் உலகில் எந்தவொரு பில்லியனரும் எட்டாத உயரத்துக்கு சென்ற எலான் மஸ்க், ஜிமெயில் அக்கவுண்ட்டுக்கு போட்டியாக எக்ஸ்மெயில் (Xmail) அக்கவுண்ட்டை கொண்டுவர இருக்கிறார். ஜிமெயில் போலவே மின்னஞ்சல் சேவையை (Email Service) இந்த எக்ஸ்மெயில் வழங்க இருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகுதான் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டாலர்களை தொட்டது. இதனால், டோனால்ட் டிரம்ப்பின் ஆதரவை எலான் மஸ்க் பெற்றிருப்பது உறுதியாகியது. டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்களின் திட்டங்களுக்கு கிரீன் சிக்னல் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாகவே எலான் மஸ்க் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி டெக் உலகில் இருந்தது. இதனிடையே ட்விட்டர் தளத்தில் பல யூசர்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டுக்கு போட்டியாகவும், அதைவிட எளிமையான டிசைனிலும் எக்ஸ்மெயில் அக்கவுண்ட்டை எலான் மஸ்க் கொண்டுவர இருப்பதாக ட்வீட்களை பதிவிட தொடங்கினர்.
180 கோடிக்கும் அதிகமான ஜிமெயில் அக்கவுண்ட்களை வைத்திருக்கும் கூகுள் நிறுவனத்திடம், புதிதாக வரும் எக்ஸ்மெயிலை வைத்து எலான் மஸ்க் போட்டி போடுவாறா என்ன? என்று கேள்வியும் ட்விட்டரில் எழுந்தது. ஆனால், எலான் மக்ஸ் இதை எளிதாக விடவில்லை. அவரே சில ட்வீட்களுக்கு பதில் மூலம் அதை உறுதி செய்துவிட்டார்.

ஆமாம், எங்களது திட்டங்களில் அதுவும் இருக்கிறது என்று பதிவிட்டு கூகுள் நிறுவனத்தை மட்டுமல்லாமல், ஜிமெயில் யூசர்களின் வயிற்றிலும் புளியை கரைத்து இருக்கிறார். இதனால், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு ஜிமெயில் சேவை வழங்குவதில் முதல்முறையாக போட்டி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எக்ஸ்மெயில் அதற்கு மாற்றாக இருக்க வாய்ப்பில்லை.
ஏனென்றால், கூகுள் நிறுவனமே நினைத்தாலும் ஜிமெயில் அக்கவுண்ட்டை எளிதாக மாற்றிவிட முடியாது. 180 கோடிக்கும் அதிகமான ஜிமெயில் அக்கவுண்ட்கள் இருக்கின்றன. இது வெறும் ஈமெயில் அனுப்பும் சேவையை மட்டும் வழங்கவில்லை. அந்த அக்கவுண்ட் மூலம் யூடியூப் முதல் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஆப்கள் வரையில் பயன்படுத்தப்படுகிறது.
சொல்லப்போனால், ஜிமெயில் அக்கவுண்ட் இல்லாத ஸ்மார்ட்போன் இல்லையென்றே சொல்ல முடியும். இனிமேல் புதிதாக உருவாக்கப்படும் ஈமெயில் அக்கவுண்ட்களில் வேண்டுமானால், எக்ஸ்மெயில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால், ஏற்கனவே இருக்கும், அக்கவுண்ட்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது சுலபம் கிடையாது.
ஜிமெயில் அக்கவுண்ட் மூலம் யூடியூப் மட்டுமல்லாமல், கூகுள் பிளோ ஸ்டோர், கூகுள் மேப்ஸ், கூகுள் சீட்ஸ், கூகுள் போட்டோஸ், கூகுள் பைல்ஸ் போன்ற பல்வேறு சேவைகள் கிடைக்கின்றன. அதுவும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதுகிட்டத்தட்ட மாற்று இல்லாத சக்தியாகவே இருக்கிறது. ஆகவே, கூகுள் நிறுவனத்தை வாங்கினால் மட்டுமே எலான் மஸ்க் ஏதாவது செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








