பில் கேட்ஸ் தன் மொத்த சொத்துக்களை செலவு செய்ய 218 ஆண்டுகளாகும், மெய்யாலுமா?
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தன் மொத்த சொத்துக்களை செலவு செய்ய 218 ஆண்டுகள் ஆகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆக்ஸ்பாம் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் செலவு செய்தால் பில் கேட்ஸ் தன் மொத்த சொத்துக்களை செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகும் என தெரியவந்துள்ளது.

பில்கேட்ஸ் போன்று உலக செல்வந்தர்களுள் ஒருவரான கார்லோஸ் ஸ்லிம், ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர் என்ற கணக்கில் செலவிட்டால் அவரது சொத்துக்களை 220 ஆண்டுகளில் செலவிடமுடியும் என்றும் வாரென் பப்பெட் இதே முறையில் 169 ஆண்டுகளில் அவரது செல்வத்தை செலவிட முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆக்ஸ்பாம் நடத்திய ஆய்வில், பொருளாதார மந்த நிலையின் போது உலகளவிலான செல்வந்தர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் 2009 ஆம் ஆண்டு 794 ஆக இருந்த உலக பில்லியனர்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டு 1,645 ஆக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications