மீண்டும் எச்சரிக்கை: அடுத்த 4 முதல் 6 மாதங்களில் பாதிப்பு மிக பயங்கரமா இருக்கும்- பில் கேட்ஸ்

|

மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ்-ன் அறக்கட்டளை கோவிட்19 தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான முயற்சியில் தனது பங்கை பெருமளவு முன்னிருத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களில் மிக மோசமானதாக இருக்கலாம் என பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

விதிகளை பின்பற்றினால் பாதிப்பை குறைக்கலாம்

விதிகளை பின்பற்றினால் பாதிப்பை குறைக்கலாம்

பில்கேட்ஸ் இதுகுறித்து கூறிய கருத்துகளை பார்க்கையில், இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவல்யூஷன்(IHME) 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தாக்கத்தால் இறப்பார்கள் என கணித்து தெரிவித்துள்ளது. இருப்பினும் முகமூடிகள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிகளை பின்பற்றினால் இறப்புகளின் பெருமளவிலான சதவீதத்தை குறைக்க முடியும் என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிக அளவிலான பாதிப்பு

அமெரிக்காவில் அதிக அளவிலான பாதிப்பு

சமீப வாரங்களாக அமெரிக்கா அதிக அளவிலான பாதிப்புகளையும், இறப்புகளையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்களையும் சந்தித்து வருகிறது. அமெரிக்கா இதை கவனமாக சிறந்த முறையில் கையாளும் என தான் நினைத்ததாக அவர் கூறினார்.

2015 ஆம் ஆண்டே எச்சரிக்கை

2015 ஆம் ஆண்டே எச்சரிக்கை

பில்கேட்ஸ் 2015 ஆம் ஆண்டே பெயர் குறிப்பிடாமல் இதுபோன்ற ஒரு வைரஸ் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்திருந்தார். இதுகுறித்து பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இணைத் தலைவர் பில் கேட்ஸ் கூறுகையில், 2015 ஆம் ஆண்டு தான் எச்சரித்தபோது இறப்புகள் அதிகமாக இருக்கும் என கூறினேன் என கூறினார்.

உங்க வண்டிக்கு எவ்வளவு அபராதம் இருக்கு: ஆன்லைனில் எப்படி பார்ப்பது?., ஆர்டிஓ அலுவலக பணிகள் ஆன்லைனில்!உங்க வண்டிக்கு எவ்வளவு அபராதம் இருக்கு: ஆன்லைனில் எப்படி பார்ப்பது?., ஆர்டிஓ அலுவலக பணிகள் ஆன்லைனில்!

உலகெங்கிலும் உள்ள பொருளாதார தாக்கம்

உலகெங்கிலும் உள்ள பொருளாதார தாக்கம்

மேலும் கூறுகையில், தான் எச்சரித்ததைவிட இந்த வைரஸ் ஆபத்தானது எனவும் அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள பொருளாதார தாக்கம் குறித்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் கணித்ததை விட அதிகமாக உள்ளது என குறிப்பிட்டார்.

அமெரிக்க உதவ முன்வர வேண்டும்

அமெரிக்க உதவ முன்வர வேண்டும்

தனது அறக்கட்டளை கொரோனா தடுப்பூசி பங்களிப்பில் அதிக நிதியளித்து வருவதாக குறிப்பிட்ட அவர் மனிதகுலம் அனைவருக்கும் அமெரிக்க உதவ முன்வர வேண்டும் என கூறினார். அதிபர் டொனால்டு டிரம்ப் தடுப்பூசி விநியோகிப்பதில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார் எனவும் முன்னேற்றம் என்பதில் சுயநலம் இருக்கக்கூடாது எனவும் பில் கேட்ஸ் குறிப்பிட்டார்.

தொற்றுநோயின் மோசமான காலமாக அமையலாம்

தொற்றுநோயின் மோசமான காலமாக அமையலாம்

அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் தொற்றுநோயின் மோசமான காலமாக அமையலாம் எனவும் அனைத்து தடுப்பூசிகளின் திறனையும் அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். உலக பொருளாதாம் முன்னோக்கி செல்ல வேண்டும் எனவும் இறப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பில் கேட்ஸ் கூறினார்.

விரைவாக பரவுகின்ற சூப்பர் வைரஸ்

விரைவாக பரவுகின்ற சூப்பர் வைரஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் சில ஆண்டுகளுக்கு முன்பே வைரஸ் பெயரை குறிப்பிடாமல் தற்போது நடக்கும் விளைவு குறித்து பேசியிருந்தார். மசாசூட்ஸ் மருத்துவ சங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர், விரைவாக பரவுகின்ற சூப்பர் வைரசால் இந்த உலகம் பெரிதும் பாதிக்கப்பட உள்ளது என குறிப்பிட்டார்.

வார்த்தைக்கு ஏற்ப பரவும் வைரஸ்

வார்த்தைக்கு ஏற்ப பரவும் வைரஸ்

அந்த வைரசால் முதல் 6 மாதத்தில் கோடிக்கணக்கானோர் இறக்க கூடும். வைரஸ் பாதிப்பால் உலகப் போர் ஏற்பட வாய்ப்பிருக்கும் என குறிப்பிட்டிருந்தார். அதோடு, அந்த வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்கு நாம் தயாராக வேண்டும் என குறிப்பிட்டார். பில்கேட்ஸ் கணிப்பு, இந்த கொரோனா குறித்த என்பது துல்லியமாக தெரியவில்லை என்றாலும், கொரோனா தாக்கம் அவர் வார்த்தைக்கு ஏற்ப பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

source: thehindu.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Bill Gates Warns: Next Four to Six Months Corona Affects will be Very Bad

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X