Home
News

2015ல் கொரோனாவை கணித்த பில்கேட்ஸ் மீண்டும் எச்சரிக்கை:அடுத்தடுத்து இன்னும் 2 பேரழிவுகள் இருக்கு-என்ன தெரியுமா?

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 2015 ஆம் ஆண்டே வைரஸ் பெயரை குறிப்பிடாமல் தற்போது நடக்கும் விளைவு குறித்து பேசியிருந்தார். மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் மசாசூட்ஸ் மருத்துவ சங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அதில், விரைவாக பரவுகின்ற சூப்பர் வைரசால் இந்த உலகம் பெரிதும் பாதிக்கப்பட உள்ளது.

நாம் தயாராக வேண்டும்

அந்த வைரசால் முதல் 6 மாதத்தில் கோடிக்கணக்கானோர் இறக்க கூடும். அந்த வைரசால் உலகப் போர் ஏற்பட வாய்ப்பிருக்கும் என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு, அந்த வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்கு நாம் தயாராக வேண்டும் என குறிப்பிட்டார். பில்கேட்ஸ் கணிப்பு, இந்த கொரோனா குறித்த என்பது துல்லியமாக தெரியவில்லை என்றாலும், கொரோனா தாக்கம் அவர் வார்த்தைக்கு ஏற்ப பரவியது.

இறப்புகள் அதிகமாக இருக்கும்

பில்கேட்ஸ் 2015 ஆம் ஆண்டே பெயர் குறிப்பிடாமல் இதுபோன்ற ஒரு வைரஸ் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்திருந்தார். இதுகுறித்து பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இணைத் தலைவர் பில் கேட்ஸ் கூறுகையில், 2015 ஆம் ஆண்டு தான் எச்சரித்தபோது இறப்புகள் அதிகமாக இருக்கும் என கூறினேன் என தெரிவித்தார்.

தான் எச்சரித்ததைவிட இந்த வைரஸ் ஆபத்தானது

மேலும் கூறுகையில், தான் எச்சரித்ததைவிட இந்த வைரஸ் ஆபத்தானது எனவும் அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள பொருளாதார தாக்கம் குறித்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் கணித்ததை விட அதிகமாக உள்ளது என குறிப்பிட்டார்.

பிரபல யூடியூப் சேனலுக்கு பில்கேட்ஸ் பேட்டி

பிரபல யூடியூப் சேனலுக்கு பில்கேட்ஸ் பேட்டி

இந்த நிலையில் வெரிட்டேசியம் (Veritasium) என்ற பிரபல யூடியூப் சேனலுக்கு பில்கேட்ஸ் பேட்டியளித்தார். இதில் பில்கேட்ஸ் டெரிக் முல்லருடன் கலந்துரையாடல் மேற்கொண்டார். அப்போது பேசிய பில்கேட்ஸ், இதுபோன்ற நல்ல உணர்வுகள் ஏதுமில்லை என்று குறிப்பிட்டு பேச்சை தொடங்கினார்.

சிகிச்சை பெறும் போதே பிறருக்கும் பரவும்

சிகிச்சை பெறும் போதே பிறருக்கும் பரவும்

மேலும் பேசுகையில் சுவாச வைரஸ்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக தோன்றுகின்றன. எபோலா வைரஸ் தொற்றுக்கு நீங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போதே பிறருக்கும் பரவி விடும். இதுபோன்ற வைரஸ்கள் மிகவும் ஆபத்தானது என குறிப்பிட்டார்.

அதேபோல் வேறு ஏதும் பேரழிவுகள் உள்ளதா என டெரிக் முல்லர் பில்கேட்ஸிடம் கேள்வி கேட்டார். அதற்கு என்னுடைய கணிப்புகள் சரியாக இருக்கும் என்பது தெரியவில்லை என கூறிய பில்கேட்ஸ் இரண்டு பேரழிவுகள் இருப்பதாக கூறினார். முதலாவது பருவநிலை மாற்றம். கொரோனாவால் இறந்தவர்களைவிட ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை மாற்றத்தால் அதிகமானோர் உயிரிழப்பார்கள் என கூறினார்.

பயோ தீவிரவாதம்

இரண்டாவது குறித்து பேசுவதற்கு மக்கள் விரும்ப மாட்டார்கள் எனவும் அதோ பயோ தீவிரவாதம் எனவும் குறிப்பிட்டார். பாதிப்பை ஏற்படுத்துவதற்கு ஒரு வைரஸை உருவாக்கலாம் எனவும் இயற்கையாக உருவாகும் வைரஸை காட்டிலும் இதனால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும் பில்கேட்ஸ் கூறினார்.

Source: timesnownews.com

Best Mobiles in India

English summary
Bill Gates Warns About Two More Disasters Climate Change and Bio Terrorism
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X