Home
News

நல்ல தூக்கத்தால் ஏற்படும் எண்ணிலா நன்மைகள்: பில்கேட்ஸ் உணர்ந்த உண்மைகள்!

இன்றைய உலகில், ஒரு நல்ல இரவு தூக்கம் என்பது பலருக்கு கிடைக்காத ஒன்றாக உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூட வலுவாக உணரும் ஒரு விஷயம் இது. நகர வாழ்க்கையின் தொடர்ச்சியான சலசலப்பு, ஒருபோதும் முடிவடையாத பரபரப்பு ஆகியவை மன அழுத்தத்திற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இதில் இருந்து மீள வேண்டியது மிகவும் முக்கியமானது.

நாங்கள் ஏன் தூங்குகிறோம்

நாங்கள் ஏன் தூங்குகிறோம்

ஒவ்வொரு ஆண்டும் போலவே , இந்த விடுமுறையில் உங்கள் வாசிப்பு பட்டியலில் இருக்க வேண்டிய புத்தகங்களை அவர் சமீபத்திய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் எங்கள் கவனத்தை ஈர்த்த ஒரு புத்தகம் மத்தேயு வாக்கர் எழுதிய 'நாங்கள் ஏன் தூங்குகிறோம்' என்ற புத்தகம்தான்.

 எட்டு மணிநேர தூக்கத்தைப் பெறாமல்

இந்த புத்தகத்தை இந்த ஆண்டு கட்டாயம் படிக்க வேண்டிய ஐந்து புத்தகங்களில் ஒன்றாக தேர்வு செய்ததற்கான காரணத்தை விவரிக்கும் போது, "இப்போது நான் மத்தேயு வாக்கரின் 'ஏன் நாங்கள் தூங்குகிறோம் என்பதைப் படித்திருக்கிறேன், என் இரவுநேரங்கள், கிட்டத்தட்ட எட்டு மணிநேர தூக்கத்தைப் பெறாமல் இருப்பது ஒரு பெரிய பிரச்சனையை தருகிறது என்பதை நான் உணர்கிறேன்.

மன ஆரோக்கியம்

மன ஆரோக்கியம்

யு.சி. பெர்க்லி எழுதிய மனித தூக்க அறிவியல் குறித்து வாக்கர் தெளிவாக விளக்குகிறார். தூக்கத்தை புறக்கணிப்பது உங்கள் படைப்பாற்றல், சிக்கலைத் தீர்ப்பது, முடிவெடுப்பது, கற்றல், நினைவகம், இதய ஆரோக்கியம், மூளை ஆரோக்கியம், மன ஆரோக்கியம், உணர்ச்சி நல்வாழ்வு, நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் உங்கள் ஆயுட்காலம் ஆகிய அனைத்தையும் குறைக்கிறது என்று அவர் கூறுகின்றார்.

2020 ஆம் ஆண்டில்

2020 ஆம் ஆண்டில்

இந்த 2020 ஆம் ஆண்டில் உங்கள் புத்தாண்டு தீர்மானமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் படுக்கைக்கு செல்லும் நேரத்தை முடிவு செய்து கொள்ளுங்கள். உங்களால் முடிவு செய்ய முடியாவிட்டால் பில் கேட்ஸ் அவர்கள் தூக்கத்தை இழந்து கடுமையான வேலை செய்து, இரவு முழுவதும் வேலை செய்து, வேலை வாங்கியவர் தற்போது மாற்றம் கொண்டு தூக்கத்தின் அருமையை உணர்ந்துள்ளார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். தூக்கத்தின் முக்கியத்துவத்தை அவர் தற்போது உணர்ந்துள்ளதை நீங்கள் முதலிலேயே உணர்ந்து கொள்ளுங்கள்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

ஒரு சமீபத்திய ஆய்வில், உலகிலேயே தூக்கமின்மை மிகுந்த இரண்டாவது இடத்தில் இந்தியர்கள் உள்ளதாகவும், ஜப்பான் முதலிடத்தில் உள்ளதாகவும் கூறுகின்றது. பிட்பிட் என்ற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி 10.5 பில்லியன் மக்கள் இரவு தூக்கத்தை இழந்துள்ளதாக கூறுகின்றது. இந்த கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1, 2018 முதல் ஜூலை 21, 2019 வரை ஒரு வருடத்திற்கு எடுக்கப்பட்டது ஆகும்.

57 நிமிடங்கள்

இதன்படி இந்த சர்வே கூறுவதன் முக்கிய அம்சம் என்னவெனில் இந்தியர்கள் ஒவ்வொரு இரவும் 7 மணி நேரம் 1 நிமிடம் மட்டுமே தூங்குவார்கள். சராசரியாக ஒருவர் 6 மணி நேரம் 47 நிமிடங்கள் மட்டுமே தூங்கக்கூடிய ஜப்பானியர்கள் தூக்கமின்மையில் முதலிடத்தில் உள்ளனர். அதேபோல் அயர்லாந்து மக்கள் 7 மணிநேர 57 நிமிடங்கள் தூங்குபவர்களாக உள்ளனர்.

நன்றாக தூங்கினால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை பலர் உணரவில்லை

நன்றாக தூங்கினால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை பலர் உணரவில்லை

ஒரு இரவு நன்றாக தூங்கினால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை பலர் உணரவில்லை. ஒவ்வொரு இரவும் எட்டு முதல் ஒன்பது மணி நேரம் ஆழ்ந்து தூங்குவது என்பது மிகவும் முக்கியம். இந்த தூக்கம் மிகப்பெரிய வெகுமதிகளைக் கொடுக்கும். நல்ல தூக்கத்தால் மூளை புத்துணர்ச்சி கொள்வதோடு, எந்த வேலை பார்த்தாலும் அதிக கவனத்துடன் செய்வது, ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்துது, நல்ல நினைவாற்றல் ஆகிய பல நன்மைகள் கிடைக்கின்றது

மன அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது

மன அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது

அதுமட்டுமின்றி ஒரு நல்ல தூக்கம் மன அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கையுடன் உணரவும் நேர்மறையாக எதையும் சிந்திக்கவும் உதவும். மேலும் நமது உடலின்இரத்த அழுத்த அளவு மற்றும் உடல் எடை ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருக்கவும் நல்ல தூக்கம் வேண்டும்.

Best Mobiles in India

English summary
Bill Gates Thinks Not Getting Enough Sleep Is A Disease, Recommends 'Why We Sleep’ As The Cure : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X