உலகையே மாற்றியமைக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் : பில்கேட்ஸ்

தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி, ஆய்வகத்தில் வளர்ச்சியுற்ற இறைச்சி, உயிர்களை காப்பாற்றும் கழிப்பறைகள், அணியக்கூடிய எலெக்ட்ரோ கார்டியோகிராம்.

|

தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி, ஆய்வகத்தில் வளர்ச்சியுற்ற இறைச்சி, உயிர்களை காப்பாற்றும் கழிப்பறைகள், அணியக்கூடிய எலெக்ட்ரோ கார்டியோகிராம். இவை நாம் வாழும் உலகத்தையே மாற்றுவதற்கான தொழில்நுட்பங்களில் இவையும் அடக்கம் என்கிறார் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் மற்றும் பில்லியனரான பில் கேட்ஸ்.

உலகையே மாற்றியமைக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் : பில்கேட்ஸ்

எம்ஐடி கடந்த புதனன்று வெளியிடப்பட்ட பத்திரிகையின் வெளியீட்டின் படி, "நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள்" எனும் தலைப்பில் நடைபெற்ற 18வது ஆண்டு எம்ஐடி டெக்னாலஜி ரிவியூ நிகழ்வை பில்கேட்ஸ் ஒருங்கிணைத்ததாக தெரிவித்துள்ளது. மனித வரலாற்றின் பெரும்பகுதியில், கண்டுபிடிப்புகள் மனிதர்களின் வாழ்நாளை மேம்படுத்துதலின் மீது தான் கவனம் செலுத்தியுள்ளன என முன்னுரையில் பில்கேட்ஸ் எழுதியுள்ளார்.

2019 எம்ஐடி ப்ரேக்த்ரூ டெக்னாலஜி பட்டியலில் சேர்க்கப்பட்ட சிறந்த தொழில்நுட்பங்களில் சில உங்கள் பார்வைக்காக!

தனிப்பயனாக்கக்கூடிய புற்றுநோய் தடுப்பூசி

பயோஎன்டெக் மற்றும் ஜெனென்டெக் உள்ளிட்ட நிறுவனங்கள் தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசிகளை சந்தைக்கு கொண்டு வர முயன்றுவருகின்றன. இந்த தடுப்பூசி ஒவ்வொரு கட்டிக்கு குறிப்பிட்ட தனிப்பயனாக்குவதன் மூலம் அடையாளம் கண்டு உடலின் சொந்த நோயெதிர்ப்பு அமைப்பின் மூலம் அந்த புற்றுநோய் செல்களை அழிக்கும்.

"விஞ்ஞானிகள் முதல் தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசியை வணிக ரீதியாக அறிமுகப்படுத்தவுள்ளனர்," என எம்ஐடி தொழில்நுட்ப ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சரியாக செயல்பட்டால் இந்த தொழில்நுட்பம் மூலம் பல வகையான புற்றுநோய்களை தடுத்து நிறுத்த முடியும்.

நிச்சயமாக இந்த தடுப்பூசியை மொத்தமாக உற்பத்தி செய்ய பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஒவ்வொரு தடுப்பூசியும் தயாரிக்கும் முன்னர் புற்றுநோய் கட்டியை பகுப்பாய்வு செய்தல் மற்றும் டி.என்.ஏ வரிசைமுறை படுத்துதல் போன்றவை தேவைப்படும்.

உணவு சமைக்கும் மற்றும் முதியோரை கவனித்துக்கொள்ளும் ரோபோக்கள்

ரோபோ புரட்சி நடைபெற்று வருகிறது. தொழில்நுட்ப தலைவர் எலோன் மஸ்க் தனது பயங்கரமான பிரச்சனை "ரோபோக்கள் நம்மை விட எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடியும்" என்பது என கூறியுள்ளார்.

அது ஒருவேளை உண்மையாக இருக்கலாம், ஆனால் இப்போதைக்கு ரோபோக்கள் "விகாரமானவை மற்றும் நெகிழ்வற்றவை" என எம்ஐடி தொழில்நுட்ப ஆய்வு கூறுகிறது.

"ஒரு உண்மையான கிடங்கில் அல்லது தொழிற்சாலையில் தேவைப்படும் மேம்பட்ட திறன்களை கொண்ட மாஸ்டர் ரோபோக்களுக்கு இன்னும் அதிக தொழில்நுட்ப வளர்ச்சி தேவைப்படுகிறது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இந்த வகையான கற்றலை ரோபோக்களில் பயன்படுத்த முடியும் என்றால், நமது கேஜெட்களை சரிசெய்தல், பாத்திரங்கள் கழுவுதல், முதியோரை கவனித்தல் போன்றவற்றையும் ரோபோக்கள் செய்ய முடியும் " என்கிறது எம்ஐடி தொழில்நுட்ப ஆய்வு.

காற்றிலிருந்து கார்பன் டை ஆக்சைடு-ஐ பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்

"காற்றில் இருந்து கார்பன் டை ஆக்ஸைடை பிரிப்பது என்பது பொறியியல் ரீதியாக , காலநிலை மாற்றத்தை கையாள்வதில் மிகவும் கடினமான மற்றும் விலையுயர்ந்த வழிகளில் ஒன்றாகும். ஆனால் மெதுவாக நாம் கார்பன் டை ஆக்ஸைடை வெளிப்படுத்துதலை குறைப்பதே சிறந்த வழியாக இருக்கும்" என்கிறது எம்ஐடி தொழில்நுட்ப ஆய்வு.

கொல்லப்படாத, ஆனால் நிலையான இறைச்சி மற்றும் பர்கர்கள்

கொல்லப்படாத, ஆனால் நிலையான இறைச்சி மற்றும் பர்கர்கள்

பியாண்ட் மீட் மற்றும் இம்பாசிபில் புட்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆலைகளில் தயாரிக்கப்பட்ட மாமிச அடிப்படையிலான பர்கரை பிரபலபடுத்தி வருகின்றன. மெம்பிஸ் மீட்ஸ் போன்ற பிற நிறுவனங்கள், விலங்கு உயிரணுக்களிடமிருந்து இறைச்சியை ஆய்வகத்தில் வளர்க்க முயன்றுவருகின்றன.

அணியக்கூடிய எலெக்ட்ரோ கார்டியோகிராம்

அணியக்கூடிய எலெக்ட்ரோ கார்டியோகிராம்

பக்கவாதம் அல்லது மாரடைப்பிற்கு வழிவகுக்கும் நிலையை கண்டறிய உதவும் ஒரு கருவி எலெக்ட்ரோ கார்டியோகிராம் ஆகும். பெரும்பாலும் ஈகேஜி அல்லது ஈசிஜி என்று அழைக்கப்படுகிறது. இது இதயத்தின் மின்சார சமிக்ஞைகளை பதிவு செய்கிறது.

இப்போது புதிய ஒழுங்குமுறை ஒப்புதல் மற்றும் மேம்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவை காரணமாக மருத்துவ-தர நிலையில் ஈசிஜி வசதியுள்ள ஸ்மார்ட் கடிகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஆலிவ்கார் நிறுவனம் உருவாக்கிய பேண்ட்ஐ ஆப்பிள் கடிகாரத்துடன் இணைப்பதன் மூலம், ஹார்ட்அட்டாக் போன்ற அவசர நேரங்களில் விரைவாக இதய துடிப்பு தரவுகளை கண்டறிய முடிகிறது.

செல்ப் கன்டைன்டு டாய்லெட்

மலிவான இந்த செல்ப் கன்டைன்டு டாய்லெட்களுக்கு தனியாக கழிவுநீர் சுத்திகரிப்பு தேவை இல்லை. ஏனெனில் அவையே கழிவுப்பொருட்களை சுத்தகரித்து வெளியேற்றவல்லன. "இந்த கழிப்பறை மனித கழிவுகள், திரவ மற்றும் திட கழிவுகளை எடுத்து பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிரித்தும் அளிக்கிறது. நீங்கள் திட பொருட்கள் ஐ எரிக்க முடியும். திரவங்கள் வடிகட்ட முடியும்" என பில்கேட்ஸ் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Bill Gates These breakthrough technologies are going to profoundly change the world : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X