Just In
- 4 min ago
"நேற்று வந்த பையன்" வரலாறு படைக்கும் ChatGPT! அடுத்தடுத்து உடைக்கப்படும் சாதனைகள்!
- 1 hr ago
முன்பை விட மிக குறைந்த விலையில் iPhone 14.! அடேங்கப்பா.! எடுத்தவுடனே ரூ.11,400 தள்ளுபடியா?
- 1 hr ago
50எம்பி செல்பி கேமரா கொண்ட புதிய 5G போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! முழு விவரம்.!
- 2 hrs ago
சியர்ஸ் சொல்லுங்க! Coca-Cola ஸ்மார்ட்போன் அறிமுக தேதி அறிவிப்பு! விலை என்ன?
Don't Miss
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வீடு வீடாக திண்ணை பிரச்சாரம்.. திமுக சாதனைகளை கூறும் மா.சுப்பிரமணியன்!
- Movies
ஏகே 62 இயக்குநர் லிஸ்டில் வெங்கட் பிரபு..? பைனல் பண்ண முடியாமல் திணறும் அஜித்..?
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Sports
தொடக்க வீரராக யாருக்கு இடம்.. கேஎல் ராகுல், சுப்மன் கில் இடையே கடும் போட்டி.. குழப்பத்தில் ரோகித்
- Finance
அதானி, அம்பானி வெளியேற்றம்.. உலக டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஒரு இந்தியர் கூட இல்லை..!
- Automobiles
இதுவரையில் இல்லாத உச்சம்... ஒரே மாதத்தில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! ஹூண்டாயை கையில் பிடிக்க முடியாதே
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மொத்த சொத்தையும் தானமாக கொடுக்கும் Bill Gates: பணக்காரராக இருக்க பிடிக்கலயாம்- சாருக்கு என்ன ஆச்சு?
இனி பணக்காரராக இருக்க விரும்பவில்லை எனவும் தனது அனைத்து செல்வத்தை கொடுக்கப் போவதாகவும் உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் சபதம் எடுத்துக் கொண்டார். திடீரென Bill Gates இப்படி சொல்ல காரணம் என்ன என்று சந்தேகம் வருகிறதா?. வாருங்கள் தகவலை விரிவாக பார்க்கலாம்.

பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் பிடித்த இடம்
உலகப் பணக்காரர்கள் பட்டியலை பொறுத்தவரை, பில் கேட்ஸ் 1995 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் முதலிடத்தில் இருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் முதலிடத்தை பிடித்து வந்தனர். தற்போது முதலிடத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இருக்கிறார். பில் கேட்ஸ் 102.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

உலகிற்கே மாபெரும் சோகங்கள் இது: பில் கேட்ஸ்
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் ஆகியவை "முழு உலகிற்கும் மாபெரும் சோகங்கள்" என பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கேட்ஸ் அறக்கட்டளை மூலம் செய்யப்படும் செலவுகளை அதிகரிக்கவும் திட்டமிட்டிருக்கிறார். மேலும் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விலகுவதாக சபதம் எடுத்துக் கொண்டார்.

பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விலக என்ன காரணம்?
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தனது செல்வத்தை முழுவதுமாக விட்டுக் கொடுத்து உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விலகுவதாக சபதம் எடுத்துக் கொண்டார். ட்விட்டரின் தொடர்ச்சியான பதிவுகளின் மூலம் பில்கேட்ஸ் இந்த தகவல்களை தெரிவித்தார்.

இதை செய்வதற்கு எனக்கு கடமை இருக்கிறது: கேட்ஸ்
இது குறித்து அவர் கூறிய தகவலை விரிவாக பார்க்கலாம். "துன்பங்களை குறைப்பதற்கும் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தனது வளங்களை சமூகத்திற்குத் திருப்பித் தர வேண்டிய "கடமை" இருக்கிறது" என பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை அதிகரிக்கும் அவர் திட்டமிட்டிருக்கிறார்.

எனது மொத்த சொத்தும் அறக்கட்டளைக்கு தானம்
அதாவது தனது சொத்துகளை அறக்கட்டளைக்கு தானமாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் கேட்ஸ் அறக்கட்டளையில் செய்யப்படும் நன்கொடைகளை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளார். உலகின் பல்வேறு பின்னடைவுகளை கண்டு உலக மக்கள் ஊக்கம் இழந்து இருக்கின்றனர். எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது மொத்த சொத்தையும் அறக்கட்டளைக்கு வழங்க திட்டமிட்டுள்ளேன் என கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவும் பின்னோக்கி சென்றுள்ளது என்ற கேட்ஸ்
கேட்ஸ் தனது ட்வீட்களில், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவை "முழு உலகிற்கும் மாபெரும் சோகங்கள்" என்பதை எடுத்துக்காட்டுகிறது என குறிப்பிட்டார். அதேபோல் புதிய கருக்கலைப்புச் சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் நவீன சமுதாயத்திலிருந்து அமெரிக்காவும் ஒரு படி பின்னோக்கிச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 9 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க திட்டம்
இதையடுத்து, சமத்துவத்தை எதிர்த்துப் போராட, தனது அறக்கட்டளையின் குழு உறுப்பினர்கள் ஆதரவோடு 2026 ஆம் ஆண்டுக்குள் கேட்ஸ் அறக்கட்டளையின் நன்கொடை செலவை ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர்களிலிருந்து, ஆண்டுக்கு 9 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.

பலருக்கு பாராட்டு தெரிவித்த பில் கேட்ஸ்
குழந்தைப் பருவ இறப்புகளை குறைத்தல், நோய்களை ஒழித்தல், உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை மேம்படுத்துதல், பாலின சமத்துவத்தை அடைதல் மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்துதல் என அனைத்திலும் கேட்ஸ் அறக்கட்டளை பங்காற்றும் விதம் குறித்து அவர் பாராட்டினார். தொடர்ந்து கேட்ஸ் அறக்கட்டளை COVID-19 தொற்றுநோயை எதிர்த்து போராடியதில் பெரும்பங்கு வகித்தது. அறக்கட்டளையின் வளங்களை அதிகரிக்கும் வகையில் பெரும் தொகை அளித்த வாரன் பஃபெட்டை அவர் பாராட்டினார். வாரன் பஃபெட் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

யார் இந்த வாரன் பஃபெட்?
பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அனைவரும் வாரன் பஃபெட் என்ற வார்த்தையை கடந்த பயணித்திருக்க முடியாது. பங்குச் சந்தையின் ஜாம்பவானாக திகழ்பவர் வாரன் பஃபெட். உலகப் பணக்காரர்களில் பிரதான ஒருவராக வாரன் பஃபெட் இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் நற்பணிகள்
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை ஆரம்பித்து உலகில் பல சமுதாய நற்காரியங்களை பில் கேட்ஸ் செய்து வருகிறார். இதில் பில் என்பது பில்கேட்ஸையும் மெலிண்டா என்பது அவரது மனைவி மெலிண்டா கேட்ஸையும் குறிக்கிறது. ஆனால் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியோர் சரியாக 27 ஆண்டுகளுக்கு பின்பு சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டனர்.

விவாகரத்து செய்தாலும் நற்பணிகள் தொடரும்
இவர்கள் விவாகரத்து முடிவை அறிவித்தாலும், உலகளாவிய சுகாதாரம், பாலின சமத்துவம், கல்வி மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு நிதியளிக்கும் கேட்ஸ் அறக்கட்டளையில் தங்களது கூட்டுப் பணிகளை தொடரப் போவதாக பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் அறிவித்தனர். இதையடுத்து கேட்ஸ் அறக்கட்டளை எப்போதும் போல் தொடர்ந்து பல சமூக நலப் பணிகளை செய்து வருகிறது.

அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரத்துடன் வாழ வேண்டும்
இதுகுறித்து பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் கூறுகையில், கடந்த 27 ஆண்டுகளில் 3 குழுந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதன்மூலம் அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரத்துடன் வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இதே பணியில் நாங்கள் இருவரும் தொடர இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470