எப்போது உலகம் சகஜ நிலைக்கும் திரும்பும்? பில் கேட்ஸ் முக்கிய தகவல்.!
சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா., உலகின் 212 நாடுகளில் பரவித் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது, கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதேபோல் கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் படிப்படியாக நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனா பாதிப்பு நிலவரம்
நேற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த ஒரு அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சம் வெளியிட்டது. அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,17,87,534 உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு இந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கொரோனா வைரஸ் முதலில் ஜலதோஷம், உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி கடைசியில் மரணம் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இது லேசான காய்ச்சலில்தான் இது துவங்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த கொரோனாவினால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியிருந்தன. குறிப்பாக கூகுள் நிறுவனமும் கொரோனா பரவல் காரணமாக தனது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்யும்படி பணித்திருந்தது.

அதேபோல் COVID-19 2020 தடுப்பூசி தொடர்பாக அனைத்து குடிமக்களுக்கும் அதன் விஷயங்களை எளிதாக தெரிவிக்க மத்திய சுகாதார அமைச்சகம் கோவின் (coWIN App) டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கோவின் பயன்பாடு தளம் தடுப்பூசியை சுயமாக பதிவு செய்ய அனுமதிக்கிறது.

உலகம் சகஜ நிலைக்கு திரும்பும்
இந்நிலையில் பில் கேட்ஸ் அவர்கள் வரும் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் சகஜ நிலைக்கு திரும்பும் என்று தெரிவித்துள்ளார். அதாவது அவர் அண்மையில் பங்கேற்ற ஒரு நேர்காணிலில் இதனை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த நேர்காணலில் பில் கேட்ஸ் தெரிவித்தது என்னவென்றால், இந்த பெருந்தொற்று நோய் நமது மனதில் பதிந்துள்ள ஆறாத ரணம். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் கொரோனாவை தடுக்கும் வல்லமை கொண்ட தடுப்பு மருந்துகள் வந்திருப்பது தான்என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது இன்னிங்ஸை தற்போது தொடங்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். கடந்த சிலநாட்களாக இந்த கொரோனா தொற்று நோய் பாதிப்பு பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications