மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் பில்கேட்ஸ்: காரணம் என்ன?

|

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாகி அதிகாரியுமான பில்கேட்ஸ் அவர்கள் தற்சமயம் இயக்குநர் குழுவிலிருந்து விலகியுள்ளார். மேலும் இதைப் பற்றிய விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

மைக்ரோசாஃப்ட்-பில்கேட்ஸ்

மைக்ரோசாஃப்ட்-பில்கேட்ஸ்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெள்ளா வெளியிட்டுள்ள அறிக்கையில் அடிப்படையில்,பில்கேட்ஸ் அவர்கள் விலகல் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சத்ய நாதெள்ளாவுக்கு தொழில்நுட்ப ஆலோசகராக
பில்கேட்ஸ் பங்களிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமான நேரம்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் அதிகமான நேரம் செலவிடுவற்காக இயக்குநர் குழுவிலிருந்து விலகியதாகவும் விளக்கமாக தெரிவக்கப்பட்டுள்ளது.

இந்த VPN பயன்பாடுகள் உங்கள் போனில் உள்ளதா? அப்போ உடனே Uninstall செய்யுங்கள்!இந்த VPN பயன்பாடுகள் உங்கள் போனில் உள்ளதா? அப்போ உடனே Uninstall செய்யுங்கள்!

சத்ய நாதெள்ளா

சத்ய நாதெள்ளா

மேலும் பில்கேட்ஸ் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது குறித்து மகிழ்ச்சியும் பெருமிதமும் வெளிப்படுத்தினார் சத்ய நாதெள்ளா. குறிப்பாக பில்கேட்ஸ் அவர்கள் பல்வேறு புதிய முயற்சிகளை அருமையாக செயல்படுத்தியவர் எனக் கூறினார்
சத்ய நாதெள்ளா.

 1975-ம் ஆண்டு நிறுவினார்

1975-ம் ஆண்டு நிறுவினார்

உலகம் முழுவதும் கணினிமயமாக மாற்றியுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை, தனது பால்ய கால நண்பர் பால் ஆலனுடன் இணைந்து 1975-ம் ஆண்டு நிறுவினார் பில்கேட்ஸ் அவர்கள். அதன்பின்னர் 2000-ஆவது ஆண்டு வரை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்தார்.

இயக்குநர் குழுவிலிருந்தும் அவர் விலகியுள்ளார் என்பது கு

பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு இந்த பதவிக்கு வந்த சத்ய நாதெள்ளாவுக்கு தொழில்நுட்ப ஆலோசகராக மைக்ரோசாஃப்ட்
நிறுவனத்துக்கு சேவையை தொடர்ந்தார் பில்கேட்ஸ், தற்போது மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்தும்
அவர் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பில்கேட்ஸ் அவர்கள்

அன்மையில் பில்கேட்ஸ் அவர்கள் மிக பிரமாண்டமான சொகுசு கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார். பில்கேட்ஸ் அவர்கள் சுற்றுச் சுழலை பாதுகாக்கும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தாத முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது, உலகின் ஆரோகியத்தை மேம்படுத்த செயல்படும் நிறுவனங்களுக்கு உதவுவது உள்ளிட்ட செயல்களுக்காக தொடர்ந்து தனது பணத்தை தாரளமாக செலவிட்டு வருகிறார்.

 ரூ.4,600கோடி மதிப்புடைய சூப்பர் கப்பல்

ரூ.4,600கோடி மதிப்புடைய சூப்பர் கப்பல்

அதன்படிதான் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படும் பசுமை சொகுசு கப்பல்களை வாங்குவதில் அதிக முதலீடு செய்து வருகிறார். இதன் பொருட்டு பில்கேட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.4,600கோடி மதிப்புடைய சூப்பர் கப்பல் ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 சினோட்(sinot

சினோட்(sinot

பில்கேட்ஸ் அவர்கள் வாங்கியுள்ள இந்த சொகுசு கப்பலின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், முற்றிலும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் இந்த கப்பலில் உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக சினோட்(sinot) என்ற நிறுவனத்தால் இந்த சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த கப்பல் 3,750நாட்டிகல் மைல்கள் வரம்பில், 17 knots டாப் ஸ்பீடில் இயங்கும் எனக் கூறப்படுகிறது. பின்பு இந்த கப்பலின் நீளம் 12மீட்டர் ஆகும்.

Best Mobiles in India

English summary
Bill Gates Resigns His Co-Director Designation From Microsoft Board : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X