சிறந்த முன்னேற்றம் கண்டுள்ள நாடு இந்தியா., இந்தியாவை கூர்ந்து கவனிக்க வேண்டும்: புகழ்ந்து தள்ளிய பில்கேட்ஸ்!
இந்தியாவில் டிஜிட்டல் தொடர்பான விஷயங்கள் துரிதமாக முன்னேற்றம் அடைந்து வருகின்றன எனவும் சீனாவை தவிர டிஜிட்டல் துறையில் முன்னேற்றம் கண்டுள்ள அடுத்த நாடு இந்தியாதான் எனவும் பில்கேட்ஸ் கூறினார்.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை
இந்தியாவில் டிஜிட்டல் கட்டண முறை பெருமளவு அதிகரித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியா திட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த முக்கிய திட்டங்களில் டிஜிட்டல் இந்தியா திட்டம் ஒன்று. டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. குறைவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வழங்கும் சலுகை விலை இணைய சேவைகளும் இதற்கு முக்கிய காரணம்.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸ்
இந்தநிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸ், சினாவிற்கு அடுத்து டிஜிட்டல் துறையில் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ள ஒரு நாடு இந்தியாதான் என புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து பில்கேட்ஸ் கூறியுள்ள முழு தகவல்களை பார்க்கலாம்.

இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் கொள்கை
சிங்கப்பூர் ஃபிண்டெக் விழாவில் பங்கேற்று பில்கேட்ஸ் தெரிவித்துள்ள கருத்துகளை பார்க்கலாம், இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் கொள்கைகளை பாராட்டி கூறினார். அதோடு அனைத்து வங்கிகளுக்கும், ஸ்மார்ட்போன் செயலிக்கும் இடையே பணத்தை அனுப்புவது உட்பட பண பரிவர்த்தனை தளத்தை இந்தியா உருவாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பண தேக்கத்தை குறைக்கும் நடவடிக்கை
இந்தியாவின் திறம்பட்ட செயல்பாடானது பண விநியோகத்திற்கான செலவு மற்றும் பண தேக்கத்தை குறைக்கும் எனவும் இந்தியாவின் நிதி பரிமாற்றக் கொள்கைகள் மற்றும் அடையாளங்களாக இருக்கும் லட்சிய தளங்களை பில்கேட்ஸ் பாராட்டினார்.

நவீனத்துவமான தனித்துவ அம்சங்கள்
இந்தியாவில் விஷயங்கள் துரிதமாக முன்னேற்றம் அடைந்து வருகின்றன. அந்த அமைப்புகளில் இருக்கும் நவீனத்துவம் தனித்துவமானது எனவும் சீனாவைத் தவிர அடுத்து ஒரு நாட்டை கூர்மையாக கவனிக்க வேண்டும் என்றால் அது இந்தியாவாகத் தான் இருக்கமுடியும் என தான் கூறுவதாக பில்கேட்ஸ் குறிப்பிட்டார்.

நம்பகமான பயன்பாடுகளுடன் லட்சியத் தளங்கள்
இந்தியாவின் திறந்த மூல தொழில்நுட்பங்களுடன் பிற நாடுகள் இணைந்த செயல்படுகறது. உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் தரவுத்தளம் மற்றும் அனைத்து வங்கிகள் மற்றும் செயலிகளுக்கு இடையேயான பணம் அனுப்பும் சேவை உள்ளிட்ட நம்பகமான பயன்பாடுகள் உடன் இந்தியா லட்சியத் தளங்களை உருவாக்கியுள்ளது என பில்கேட்ஸ் குறிப்பிட்டார்.
file images
source: ndtv.com


Click it and Unblock the Notifications








