Home
News

14 வயது வரை தன் பிள்ளைகளுக்கு பில் கேட்ஸ் செய்த "கொடுமை"!

பில்லியனரான பில் கேட்ஸ் இந்த "குடும்ப உண்மையை" பல பேட்டிகளில் கூறி உள்ளார்.

புள்ளி விவரத்தின் படி யார் வேண்டுமானாலும் உலகத்தின் மாபெரும் பணக்காரராக இருக்கலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர்களின் வாயில் டக்கென்று வரும் ஒரு பெயர் - பில் கேட்ஸ். "ஆமாம் இவரு பெரிய பில் கேட்ஸூ" என்று கலாய்க்காத, கலாய்க்கப்படாத ஆளே இல்லை எனலாம். மறு கையில் "என் கிரகம் இந்த ஊருல வந்து இப்படி பிறந்திட்டேன், நான்லாம் பில் கேட்ஸிற்கு பையான / பொண்ணா பொறந்து, ஜம்ம்னு வாழ வேண்டியது" என்று புலம்பும் கூட்டமும் ஒன்று.

14 வயது வரை தன் பிள்ளைகளுக்கு பில் கேட்ஸ் செய்த

ஆனால் பில் கேட்ஸ் குடும்பம் பற்றிய சில உண்மைகளை தெரிந்து கொண்டால், ராமசாமிக்கோ, குப்புசாமிக்கோ கூட மகனாக / மகளாக பிறந்து விடலாம், பில் கேட்ஸிற்கு மட்டும் வாரிசாக பிறக்க கூடாது டா சாமி என்று வேண்டிக் கொள்வீர்கள். அப்படி என்ன "குடும்ப உண்மை"கள்?

 வியக்கத்தக்க மற்றும் கடுமையான விதி!

வியக்கத்தக்க மற்றும் கடுமையான விதி!

உலகம் மற்றும் தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில் பில் கேட்ஸின் பங்களிப்பின் மீதும், வெற்றியின் மீதும் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியான பில் கேட்ஸ், தனது குழந்தைகளுக்கு வியக்கத்தக்க மற்றும் கடுமையான விதிகளை அமைத்துள்ளார் என்பது பற்றி தெரியுமா?

மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது!

மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது!

பில்லியனரான பில் கேட்ஸ் இந்த "குடும்ப உண்மையை" பல பேட்டிகளில் கூறி உள்ளார். குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது விளக்கமாக கூறினார். "நீங்கள் எப்போதும் தொழில்நுட்ப சாதனங்கள் (மொபைல்களை) எப்படி சிறப்பாக பயன்படுகிறது - வீட்டுப்பாடம் செய்வது மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது - என்பதை பற்றி மட்டும் தான் யோசிப்போம். ஆனால் அதன் தீங்குகளை பற்றி யோசிக்கவே மாட்டோம்." என்பது தான் அவரின் அடிப்படை கருத்து.

14 வயது வரை!

14 வயது வரை!

பில் கேட்ஸிற்கு மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு வயது 15, 18, மற்றும் 21 ஆகும். இந்த மூவருக்குமே 14 வயது வரை செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்துள்ளது. உடன் சாப்பிடும் போதும் மற்றும் கட்டிலில் செல்போன் பயன்படுத்தவும் சில வரம்புகள் மற்றும் எல்லைகள் அமைக்கப்பட்டு உள்ளதாம்.

கண்டு கொள்ளவில்லை, கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளவில்லை!

கண்டு கொள்ளவில்லை, கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளவில்லை!

"தனது நண்பர்களுக்கு மிக இளமையான வயதிலேயே மொபைல்கள் கிடைக்கின்றன, எங்களுக்கும் வேண்டும்" என்று தனது பிள்ளைகளை பலமுறை புகார் செய்த போதும் கூட பில் கேட்ஸ் கண்டு கொள்ளவில்லையாம், உருவாக்கம் செய்த விதிமுறைகளையும், கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளவில்லையாம்.

அச்சத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்!

அச்சத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்!

மாட் லாயர் உடனான தனிப்பட்ட நேர்காணலில் (டூடே ஷோ) தன்னுடைய குழந்தைகளின் பேஸ்புக் கணக்குகளுக்கான கடவுச்சொற்களைக் காப்பாற்றுவதற்காக இதுவரை நான் எந்தவொரு முயற்சியும் செய்யவில்லை" என்று கூறிய பில் கேட்ஸ், "ஆன்லைன் பாதுகாப்பு என்பது இப்பொழுது பெற்றோருக்கு மிகவும் மந்தமான ஒரு பிரச்சினை ஆகும்" என்ற தனது அச்சத்தையும் வெளிப்படுத்தி கூறியுள்ளார்.

மாபெரும் சிக்கலாக உருவெடுத்து உள்ளது!

மாபெரும் சிக்கலாக உருவெடுத்து உள்ளது!

சில உளவியலாளர்களின் கருத்துப்படி அதிமுகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாடு அல்லது "அடிமைத்தனம்" ஆனது - பெற்றோர்கள், கல்வியாளர்கள், சிலிகான் வேலியில் பணியாற்றும் தொழிலாளர்கள் போன்றோர்களுக்கு மாபெரும் சிக்கலாக உருவெடுத்து உள்ளது.

ஸ்டீவ் ஜாப்ஸூம் கூட இப்படி தான்!

ஸ்டீவ் ஜாப்ஸூம் கூட இப்படி தான்!

பில் கேட்ஸை போன்றே, புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டீவ் ஜாப்ஸ், 2011 இல் தான் கண்டுபிடித்த ஐபாட்டை, அவரது குழந்தைகள் வீட்டில் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வெகுஜன மக்களுக்கு ஏன் புரிவது இல்லை?

வெகுஜன மக்களுக்கு ஏன் புரிவது இல்லை?

அதிகப்படியான தொழில்நுட்ப பயன்பாடானது பிள்ளைகளை எப்படி முட்டாளாக ஆக்குறது என்பது சார்ந்த புத்தகத்தை (ஸ்க்ரீன் ஸ்கூல்டு) எழுதிய கல்வியாளர்களின் படி, (ஜோ கிளெமென்ட் மற்றும் மாட் மைல்ஸ்), தொழில்நுட்ப பயன்பாட்டின் மீது கடுமையான விதிகளை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன. "ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் பில் கேட்ஸ் போன்ற செல்வந்த தொழில்நுட்ப நிர்வாகிகளுக்கு புரியும் இந்த விஷயம், வெகுஜன மக்களுக்கு ஏன் புரிவது இல்லை?" என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளனர்.

முட்டாள்களாக்கி, முட்டாள்களாக ஆகிக்கொண்டு இருக்கிறோம்!

முட்டாள்களாக்கி, முட்டாள்களாக ஆகிக்கொண்டு இருக்கிறோம்!

"டிஜிட்டல் தொழில்நுட்ப போதை ஆனது பயனர்களின் கவனத்தை அதிகபடியாக கைப்பற்றுகிறது. அது குறைக்கப்படும் பட்சத்தில் மக்கள் சமுதாயத்துடன் கொண்டுள்ள உறவை நிலையில் மாற்றம் கிடைக்கும். என்கிறார்" நாப்ஸ்டெர் நிறுவனர் மற்றும் முன்னாள் பேஸ்புக் தலைவர் ஆன சீன் பார்கர். நம்மை வைத்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் கூட்டம் தெளிவாகத்தான் இருக்கிறது. நாம் தான் பிள்ளைகளின் கைகளில் ஸ்மார்ட்போன்களை கொடுத்து கேம் விளைவாடு, யூட்யூப்பில் படம் பாரு, பாட்டு கேளு என்று கற்றுக்கொடுத்து, முட்டாள்களாக்கி கொண்டு இருக்கிறோம். முட்டாள்களாக ஆகிக்கொண்டு இருக்கிறோம்.

Best Mobiles in India

English summary
Bill Gates is surprisingly strict about his kids' tech use - and it should be a red flag for the rest of us: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X