22 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம்..!!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் அமெரிக்காவின் பணக்காரர்களின் பட்டியலில் தொடர்ச்சியாக 22 ஆண்டுகளாக முதலிடம் பிடித்திருக்கின்றார். ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அமெரிக்காவின் 400 பணக்காரர்களில் பில் கேட்ஸ் முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டெக் உலகின் டாப் 10 இந்திய பணக்காரர்கள்..!!

பில் கேட்ஸ் சொத்து மதிப்பு $76 பில்லியன் ஆகும். இது முந்தைய ஆண்டை விட $5 பில்லியன் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப உலகில் பிரபலமானவரான வாரன் பஃப்பெட் இந்த பட்டியலில் $62 பில்லியன் சொத்து மதிப்பு கொண்டு இரண்டாவது இடத்தில் இருக்கின்றார். மூன்றாம் இடத்தை ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லார்ரி எல்லிஸன் பிடித்துள்ளார், இவரது சொத்து மதிப்பு $47.5 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
ட்விட்டரில் எட்வர்டு ஸ்னோடன்..!!
இந்தாண்டின் டாப் 10 பட்டியலில் இணையம் சார்ந்த மூன்று தொழில் அதிபர்கள் இடம் பிடித்திருப்பதோடு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் 11 வது இடத்தில் இருந்து ஏழாம் இடத்திற்கு முன்னேறி இருப்பதோடு, கூகுள் நிறுவனத்தின் லார்ரி பேஜ் 13 ஆம் இடத்தில் இருந்து 10வது இடத்திற்கு முன்னேறி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications