எல்லோரும் வாரத்திற்கு 3 நாள் மட்டும் வேலை செய்தால் போதும் - பில் கேட்ஸ்.. காரணத்தை கேட்டால் ஆடிப்போய்டுவீங்க..
இதுவரை பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மனிதர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் அடுத்தகட்டமாக தற்போது உலகையே திரும்பி பார்க்க வைத்து கொண்டிருப்பது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) என்று கூறப்படும் ஏஐ (AI).
இன்றைய கூழ்நிலையில் ஏஐ பயன்படுத்தி பல விதமான செயல்பாடுகள் நிகழ்ந்து வருகிறது. சாட் ஜிபிடி (ChapGPT) போன்ற அம்சங்கள் மூலம் கல்வி மற்றும் சாஃப்ட்வேர் (Software) துறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக ஒரு புறம், வேடிக்கை மற்றும் பொழுபோக்காக ஒரு புறம், எதிர்மறையான காரயங்களில் ஒரு புறம் என்று நன்மை தீமை அனைத்தையும் கலவையாக வழங்கி வருகிறது.

இந்த ஏஐ பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். அந்த வகையில் உலக புகழ் பெற்ற பிரபல மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனர், பில்லியனர் பில் கேட்ஸ் (Bill Gates) ஏஐ பற்றிய தனது கருத்தை நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அவருடைய கருத்து இப்போது பலருடைய கவனத்தை ஈர்த்ததற்கு காரணம், ஏஐ-யின் வரவால் மனிதர்கள் வேலை செய்வது வாரத்திற்கு மூன்று நாட்களாக குறையும் என்று அவர் கூறியுள்ளார்.
பாட்காஸ்ட் நேர்காணலில் உண்மையை உடைத்த பில் கேட்ஸ் (Bill Gates):
தென் ஆப்ரிக்காவின் புகழ்பெற்ற காமெடியன் மற்றும் எழுத்தாளர் ட்ரெவர் நோவாஃ (Trevor Noah) நடத்தி வரும் பாட்காஸ்ட் (Podcast) நிகழ்ச்சி "வாட் நவ்" (What Now). இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பில்லியனர் பில் கேட்ஸிடம் அவருடைய வாழ்க்கை பயணம், பொதுப்பணி, தொழில்நுட்ப துறையில் அவருடைய பயணம், சமீபத்திய சென்ஷேஷனாகிக (sensation) ஏஐ போன்றவற்றைப் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டது.
சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் தன்னுடைய பல அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ள நிலையில் ஏஐ பற்றிய அவருடைய கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. ஏஐ-யின் வருகைக்கு பின்னர் பலர் வேலையை இழக்க நேரலாம் என்று பலரும் பயந்து வந்த நிலையில் இந்த கேள்வியை நோவாஃ பில் கேட்ஸிடம் முன்வைத்த போது அவர் கூறிய பதில்.
வாரத்திற்கு 3 நாள் மட்டும் வேலை (3 day a week work plan):
"வாழ்க்கை வேலை செய்வதற்காக மட்டுமே அல்ல. பலர் வேலை செய்து சம்பாதிப்பதை மட்டுமே தனது வாழ்க்கையின் குறிக்கோளாக நினைத்து வருகின்றனர். ஆனால் அது மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது. அதையும் தாண்டி வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும். எதிர்காலத்தில் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே மனிதர்கள் வேலை (3 days a week work plan) பார்க்கும் நிலை வந்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், "நமது தாத்தாக்கள் காலத்தில் விவசாயம் மட்டும் தான் வேலையாக பார்க்கப்பட்டது. அந்த நிலை மாறி அப்பாக்கள் விவசாயத்தைத் தாண்டி பல்வேறு வகையான வேலைகளை பார்த்து வந்தனர். இன்றைய சூழ்நிலையில் அமெரிக்காவில் 2%-த்தினர் மட்டுமே விவசாயம் செய்கின்றனர். அந்த மாற்றத்தை பழகிக்கொண்டு நாம் ஒத்துப்போனது போல இதையும் பழகிக்கொண்டு முன்னேற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
வளர்ந்து வரும் AI தொழில்நுட்பத்தை கண்டு மனிதர்கள் அஞ்ச வேண்டாம்:
அவர் முக்கியமாக மேற்கோள் காட்டி பேசியது என்னவென்றால், "ஏஐ-யின் வருகையால் மனிதர்கள் முற்றிலுமாக வேலை இழக்கும் அபாயம் வராது. மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய வேலைகள் எப்போதும் இருக்கும். ஆனால் ஏஐ-யால் மனிதர்கள் வேலை பார்க்கும் விதம் மாறும். மிதமான வேகத்தில் இந்த ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சியடையுமானல், அதனால் ஏற்படும் மாற்றங்களுக்கு மக்கள் பழகிக்கொள்ளும் வரை அரசாங்கமும் உதவி புரியுமானால், இந்த ஏஐ வருகை நாம் அச்சப்படும் அளவிற்கு ஒரு பெரிய விஷயம் இல்லை."
"ஏஐ மூலம் உணவு தயாரிப்பது, ப்ரோக்ராமிங் எழுதுவது, டெஸ்டிங் செய்வது, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் ஆவணங்கள் கையாள்வது என்று பல்வேறு வேலைகளை சுலபமாக செய்து முடிக்க முடியும். இதனால் மனிதர்கள் வேலை செய்ய வேண்டிய நாட்கள் குறையும். ஓய்வு எடுத்துகொள்வதற்கும், குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவிடுவதற்கும், நெருக்கமானவர்களை அருகில் இருந்து பார்த்துக்கொள்வதற்கும் நேரம் கிடைக்கும். இது மனிதர்களுக்கு நல்லது தானே" என்பது அவருடைய கருத்து.
"1980களில் இன்று சாதாரணமாக பார்க்கப்பட்டு வரும் க்ராஃபிக்கல் யூசர் இன்டர்ஃபேஸ் (Graphical User Interface) ஒரு பெரிய கண்டுபிடிப்பாக போற்றப்பட்டது. அதுபோல தான் எதிர்காலத்தில் ஏஐ. மக்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு மெல்ல-மெல்ல அதற்கு தங்களை பழக்கப்படுக்கொண்டால் எதிர்கால சூழ்நிலையை மிகவும் சுலபமாக கையாள முடியும்" என்பது தான் நமக்கு பில் கேட்ஸ் தரும் அறிவுரை.


Click it and Unblock the Notifications








