மோடிக்கு ரஜினி ஸ்டைலில் "மகிழ்ச்சி" என்று கூறிய பில்கேட்ஸ்: எதற்கு தெரியுமா?
இந்திய அரசாங்கத்திற்கும் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்திற்கும் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் 100 நாள் சாதனையை பாராட்டி இந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்
ஏழைக் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு சுமார் ரூபாய் 5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு உதவித் தொகை கிடைக்கும் விதத்தில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 2018, செப்டம்பர் 23 ஆம் தேதி இத்திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துவைத்தார்.

100 நாட்கள் சாதனை
இத்திட்டத்தைத் துவங்கி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. திட்டம் துவக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை சுமார் 6,85,000 பேர் இத்திட்டனின் கீழ் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பிரதமரைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினால் இதுவரை 100 நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்ததை தொடர்ந்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். மக்களுக்காக துவக்கப்பட்ட திட்டம் சரியாக மக்களைச் சென்றடைந்ததற்கு இந்திய அரசாங்கத்திற்கும் தனது வாழ்த்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

மிகப்பெரிய சாதனை
இத்துடன் உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ராஸ் கெப்ரியேசஸ் தனது வாழ்த்தையும் தெரிவித்திருக்கிறார். தொலைநோக்கு பார்வையுடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்திய பிரதமர் மோடி மற்றும் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு என் பாராட்டுகள் என்றும் இது மிகப்பெரிய சாதனை என்றும் அவர் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications