பில்கேட்ஸ் பிறந்தநாளில் அவரது மனைவி பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்!

|

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை ஒரு புதுமையான தொழில்முனைவோராகவும், அவரது வேலையைச் செய்துமுடிக்க எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளாத, ஒரு எழுச்சியூட்டும் நன்கொடையாளராகவும் நாம் அனைவரும் அறிவோம்.

பில் & மெலிண்டா கேட்ஸ்

பில் & மெலிண்டா கேட்ஸ்

இருப்பினும் இன்று அவரது 64வது பிறந்தநாளில் அவரின் மற்றொரு விசித்திரமான பக்கத்தை காண முடிந்தது.பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவரும், பில்கேட்ஸின் மனைவியுமான மெலிண்டா கேட்ஸ், இந்த தொழில்நுட்ப வல்லுநரின் பிறந்தநாளில் ஒரு சுவாரஸ்யமான மற்றும் வேடிக்கையான நினைவை லிங்கிடுஇன் பதிவின் மூலம் பகிர்ந்து கொண்டார்.

மழலையர் பள்ளியில் படிக்கும் சமயத்தில் நடைபெற்றது

மழலையர் பள்ளியில் படிக்கும் சமயத்தில் நடைபெற்றது

தற்போது பகிரப்பட்டுள்ள இந்த சம்பவம் அவர்களது மகள் ஜென் மழலையர் பள்ளியில் படிக்கும் சமயத்தில் நடைபெற்றது. மெலிண்டா வீட்டிற்கு கொண்டு வந்த ஒரு வேடிக்கையான தொப்பியை கண்ட பில்கேட்ஸ், அவரது பிறந்தநாளை கொண்டாட அதை அணிய விரும்பினார். பின்னர் ஜென் தனது மழலையர் பள்ளிக்கும் அந்த தொப்பியை அணிந்துவருமாறு பில்கேட்ஸ்-ஐ கேட்க, அவரும் மற்ற எல்லா தந்தைகளை போல மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

ஒடிபி (OTP)அடிப்படையில் பணத்தை திரும்பப்பெரும் வசதி: ஐஆர்சிடிசி அசத்தல்.!ஒடிபி (OTP)அடிப்படையில் பணத்தை திரும்பப்பெரும் வசதி: ஐஆர்சிடிசி அசத்தல்.!

ஒவ்வொரு குடும்ப பிறந்தநாளிலும்

அப்போதிருந்து அவர் ஒவ்வொரு குடும்ப பிறந்தநாளிலும் அந்த தொப்பியையே அவர் அணிந்திருந்தார்.

 106 பில்லியன் டாலராக உள்ளது

106 பில்லியன் டாலராக உள்ளது

பில்கேட்ஸ் சமீபத்தில் அமேசானின் ஜெஃப் பெசோஸை தோற்கடித்து, உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற தனது முதலிடத்தை மீட்டெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பில்கேட்ஸ் இந்த ஆண்டு 35 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்த பின்னரும், தனது நிகர சொத்து மதிப்பில் 17 பில்லியன் டாலர்களை சேர்த்துள்ளதாக சமீபத்திய அறிக்கைகளில் தெரியவந்துள்ளது. பில்கேட்ஸ்-ன் மொத்த சொத்துமதிப்பு இப்போது 106 பில்லியன் டாலராக உள்ளது.

டிக்டாக் இளைஞர்களுக்கு மத்தியில் மக்களுக்கு உதவும் புதிய படைப்பை உருவாக்கிய இளைஞர்!டிக்டாக் இளைஞர்களுக்கு மத்தியில் மக்களுக்கு உதவும் புதிய படைப்பை உருவாக்கிய இளைஞர்!

 60 சதவிகித பங்குகளில்

முரட்டுத்தனமான முதலீட்டு மூலோபாயத்தை பயன்படுத்துவதற்கு மாற்றாக, 60 சதவிகித பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் அவரால் இதை அடைய முடிந்தது. வழக்கமாக முதலீட்டாளர்கள் ரியல் எஸ்டேட் மற்றும் அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான விளையாட்டை விளையாடுவார்கள்.

நெட்ஃபிக்ஸ்

நெட்ஃபிக்ஸ்

நெட்ஃபிக்ஸ் சமீபத்தில் பில்கேட்ஸ் பற்றி வெளியிட்ட ஒரு ஆவணப்படத்தில், அவரது கடந்த காலம், மைக்ரோசாப்டின் ஆரம்பம், தொண்டுநிறுவன பணிகள் மற்றும் இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்ற முயற்சிக்கும் திட்டங்களில் அவர் நுழைந்தது பற்றி தெரிவிக்கப்பட்டது. இந்தத் தொடர் அந்த தொழில்நுட்ப மேதையின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், "என் மூளை வேலை செய்வதை நிறுத்துவதை நான் விரும்பவில்லை." என அவர் தனது மோசமான பயத்தையும் வெளிப்படுத்தினார் .

Best Mobiles in India

English summary
bill gates birthday wife melinda shares photo: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X