48 ஆண்டு ஆச்சு, Bill Gates தனக்காக உருவாக்கிய Resume: உத்வேகம் அளிக்கும் புகைப்படம்!

|

வாழ்வாதாரத்தை தேடி வேலைக்கு செல்லும் ஒவ்வொருவரின் கையிலும் பிரதான ஆவணமாக ரெஸ்யூம் இருக்கும். ஒருவரின் கல்வித் தகுதி, திறமை, அனுபவம், பொழுதுபோக்கு என அனைத்து தகவலும் ரெஸ்யூமில் இருக்கும். அதேபோல் வேலைக்கு ஆள் தேர்ந்தெடுப்பவர்களும் ஒருவரின் திறமை மற்றும் அந்த வேலைக்கான தகுதியானவர்களை ரெஸ்யூம் மூலமாக தான் கண்டறிவார்கள். குறிப்பிட்டோரை தவிர பெரும்பாலானோர் ரெஸ்யூமை இணையதளத்தில் பார்த்து தான் டைப் செய்கிறார்கள்.

பில் கேட்ஸ் பகிர்ந்த ரெஸ்யூம்

பில் கேட்ஸ் பகிர்ந்த ரெஸ்யூம்

இந்த நிலையில் உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், அவரது ரெஸ்யூம் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ஏணையோரிடம் வரவேற்பை பெற்று வருகிறது. பில்கேட்ஸ் பகிர்ந்த அவரது ரெஸ்யூம் 48 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

48 ஆண்டுக்கு முந்தைய ரெஸ்யூம்

48 ஆண்டுக்கு முந்தைய ரெஸ்யூம்

66 வயதான பில்கேட்ஸ் 48 ஆண்டுக்கு முன்பு இந்த ரெஸ்யூமை உருவாக்கி இருக்கிறார். இந்த ரெஸ்யூம் டைப் ரைட்டிங் மெஷின் மூலம் டைப் செய்யப்பட்டிருக்கிறது. கணினியில் ஒரு விஷயத்தை டைப் செய்யும் போது அதில் பிழை இருந்தால் திருத்தம் செய்யலாம். ஆனால் டைப் ரைட்டரில் அது முடியாது. 48 ஆண்டுகளுக்கு முன் தனக்கென உருவாக்கிய ரெஸ்யூமை பில்கேட்ஸ் தற்போது பகிர்ந்துள்ளது பல இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் விதமாக இருக்கிறது.

"என்னோட ரெஸ்யூமை விட உங்க ரெஸ்யூம் நன்றாக இருக்கும்"

பில்கேட்ஸ் இந்த ரெஸ்யூம் புகைப்படத்தை லிங்க்ட் இன் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்துடன் சில வார்த்தைகளையும் குறிப்பிட்டுள்ளார். அதில், "நீங்கள் டிகிரி முடிச்சவராக இருக்கலாம், அல்லது கல்லூரியில் இருந்து இடைநிறுத்தம் செய்தவராக இருக்கலாம். 48 ஆண்டுகளுக்கு முன் நான் உருவாக்கிய என்னோட ரெஸ்யூமை விட உங்க ரெஸ்யூம் நன்றாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். மைக்ரோசாப்ட் இணை நிறுவனர், உலக பணக்காரர்களில் ஒருவர் இப்படி ஒரு வார்த்தை குறிப்பிட்டிருப்பது அவரின் தன்னடக்கத்தை காட்டுகிறது என பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

பில் கேட்ஸ் எதிர்பார்த்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பில் கேட்ஸ் எதிர்பார்த்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பில் கேட்ஸ் பகிர்ந்த ரெஸ்யூமில் உள்ள தகவலை விரிவாக பார்க்கலாம். வில்லியம் எச் கேட்ஸ் என்ற பெயருடன் பில் கேட்ஸ் ரெஸ்யூமை உருவாக்கி இருக்கிறார். 5 அடி 10 அங்குல உயரம், 59 எடை என சுய விவரத்தை குறிப்பிட்டிருக்கிறார். 12,000 டாலர் சம்பளம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் இதை வழங்கும்பட்சத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று பணிபுரிய தயார் என தெரிவித்துள்ளார்.

பில் கேட்ஸ் அனுபவம் மற்றும் கல்வித் தகுதி

பில் கேட்ஸ் அனுபவம் மற்றும் கல்வித் தகுதி

ரெஸ்யூமில் குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதி விவரத்தை பார்க்கலாம், ஹார்வர்ட் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் தனக்கு ஆபரேட்டிங் சிஸ்டம் அமைப்பு, டேட்டா பேஸ் மேலாண்மை மற்றும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தெரியும் என குறிப்பிட்டுள்ளார். PDB, Nova, FORTRAN, Cobalt, Alcal, BASIC உள்ளிட்ட பெரும்பாலான கம்யூட்டர் லேங்குவேஜில் அனுபவம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வாஷிங்டன் லேக்சைடு ஸ்கூல், பால் ஆலன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் தனக்கு இருக்கிறது எனவும் பில்கேட்ஸ் தனது ரெஸ்யூமில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் TRW சிஸ்டம்ஸ் குழுமத்தில் கணினி ப்ரோகிராமராக செயலாற்றிய அனுபவத்தையும் தெரிவித்துள்ளார்.

ஏணைய தகவலுடன் ஒரு பக்க ரெஸ்யூம்

ஏணைய தகவலுடன் ஒரு பக்க ரெஸ்யூம்

பில்கேட்ஸ் பகிர்ந்த அவரது ஒரு பக்க ரெஸ்யூம், சமூகவலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. ஒரு பக்கத்தில் முழுமையான கருத்துகளுடனான அருமையான ரெஸ்யூம், நீங்கள் பட்டம் பெறாமல் நிறைய திறமைகளை வைத்துள்ளீர்கள், பட்டம் விஷயமல்ல திறமை தான் விஷயம் என பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

பல இளைஞர்களின் வாழ்க்கைக்கு உத்வேகம்

பல இளைஞர்களின் வாழ்க்கைக்கு உத்வேகம்

வில்லியம் ஹென்றி கேட்ஸ் என்பது தான் பில் கேட்ஸ் முழுப்பெயர். பள்ளி படிப்பில் அத்தனை ஆர்வம் இல்லாத கேட்ஸ் கதைப் புத்தகங்கள் படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். அனுபவத்தின் மூலமாகவே ஒவ்வொரு திறனை வளர்த்துக் கொண்டவர். தனது 16 வயதில் இப்படி ஒரு ரெஸ்யூமை உருவாக்கிய கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனராக உருவெடுத்து தற்போது உலகளவில் டாப் பணக்காரராக இருக்கிறார். இந்த நிலையில் 48 ஆண்டுகளுக்கு முந்தைய அவரது ரெஸ்யூம் பல இளைஞர்களின் வாழ்க்கைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக கருத்துகள் தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Bill Gates 48 Year Old Resume: Your Resume Looks Lot Better than Mine.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X