ஏலத்திற்கு வரும் பில் கிளிண்டன் பயன்படுத்திய லேப்டாப்

By Karthikeyan
|
ஏலத்திற்கு வரும் பில் கிளிண்டன் பயன்படுத்திய லேப்டாப்

பிரபலமான அமெரிக்க அதிபர்களில் பில் கிளின்டனும் ஒருவர். அவர் அதிபராக இருந்த போது பயன்படுத்திய லேப்டாப் ஒன்று தற்போது விற்பனைக்கு வருகிறது. இந்த லேப்டாப் 125,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகும் என்று தெரிகிறது.

இந்த லேப்டாப்புக்கு பல பெருமைகள் உண்டு. அதாவது பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது விண்வெளியில் இருந்த விண்வெளி வீரரான ஜான் கிளனுக்கு இந்த லேப்டாப் மூலம் அதிபர் என்ற முறையில் தனது முதல் இமெயிலை அனுப்பினார்.

மேலும் இந்த லேப்டாப்பில் டாக்குமென்டேசன் பக்காவாக உள்ளது. அதோடு கிளிண்டன் கையெழுத்துடன் கூடிய அவருடைய போட்டோவும் உள்ளது. அதோடு கிளெனுக்கு அனுப்பிய இமெயில் பிரிண்ட் செய்யப்பட்டு அதில் கிளிண்டன் மற்றும் கிளன் ஆகியோர் கையெழுத்திட்ட அந்த இமெயிலும் உள்ளது.

தற்போது இந்த லேப்டாப்பை வைத்திருக்கும் தோஷிபா சேட்டிலைட் ப்ரோ கம்யூட்டர், இபே என்ற ஆன்லைன் நிறுவனம் மூலம் இந்த லேப்டாப்பை 125,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் விட இருக்கிறது.

நவம்பர் 11 அன்று ஏலம் முடிந்துவிடும். இந்த லேப்டாப்பில் கிளிண்டன் மற்றும் கிளனுக்கும் இடையே நடந்த இமெயில் உரையாடலை பார்க்கலாம். 1998, நவம்பர் 7ல் அமெரிக்கா ஏவிய ராக்கெட்டின் வெற்றிக்குப் பிறகு இந்த இருவரும் தங்கள் இமெயில் உரையாடலைப் பகிரந்து கொண்டனர்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X