அப்பவே சொன்ன பில்கேட்ஸ்., முன்னரே வீட்டு அடித்தளத்தில் உணவை சேமித்த பில்கேட்ஸ் மனைவி!

|

தற்போதைய சூழ்நிலை குறித்து முன்னதே விவாதித்த காரணமாக தற்போதைய தேவையான உணவை முன்பே சேமித்து வைத்து விட்டதாக பில்கேட்ஸ் மனைவி மெலிண்டா கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூலம் இதுவரை உலகம் முழுவதும் 24 லட்சத்து 14 ஆயிரத்து 612 பேருக்கு தொற்று பரவி இருக்கிறதாக தெரிவிக்கப்படுகிறது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,63,834 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு கோரத் தாண்டவம்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு கோரத் தாண்டவம்

குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் மட்டும் 7 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேபோல் உயிரிழப்பும் 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் 6 லட்சத்து 29, 441 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jiolink plans: தினசரி 5 ஜிபி டேட்டா, 196 நாட்கள் வேலிடிட்டி., இதோ அட்டகாச திட்டம்!Jiolink plans: தினசரி 5 ஜிபி டேட்டா, 196 நாட்கள் வேலிடிட்டி., இதோ அட்டகாச திட்டம்!

80 சதவீகிதம் பேருக்கு அறிகுறிகள் இன்றி கொரோனா

80 சதவீகிதம் பேருக்கு அறிகுறிகள் இன்றி கொரோனா

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 80 சதவீகிதம் பேருக்கு அறிகுறிகள் இன்றி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,265 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 543 ஆகவும் உயர்ந்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு ஆண்டுக்கு முன்பே வைரஸ் பெயரை குறிப்பிடாமல் தற்போது நடக்கும் விளைவு குறித்து பேசியிருந்தார். மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் கடந்த ஆண்டு மசாசூட்ஸ் மருத்துவ சங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசுகையில், விரைவாக பரவுகின்ற சூப்பர் வைரசால் இந்த உலகம் பெரிதும் பாதிக்கப்பட உள்ளது.

நாம் தயாராக வேண்டும்

நாம் தயாராக வேண்டும்

அந்த வைரசால் முதல் 6 மாதத்தில் கோடிக்கணக்கானோர் இறக்க கூடும். அந்த வைரசால் உலகப் போர் ஏற்பட வாய்ப்பிருக்கும் என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு, அந்த வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்கு நாம் தயாராக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பில்கேட்ஸ் கணிப்பு, இந்த கொரோனா குறித்த என்பது துல்லியமாக தெரியவில்லை என்றாலும், கொரோனா தாக்கம் அவர் வார்த்தைக்கு ஏற்ப பரவி வருகிறது.

பில்கேட்ஸ் மனைவி மெலிண்டா பில்கேட்ஸ்

பில்கேட்ஸ் மனைவி மெலிண்டா பில்கேட்ஸ்

இந்த பில்கேட்ஸ் மனைவி மெலிண்டா பில்கேட்ஸ் பிபிசி ரேடியோவுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் பேசுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பே நானும் பில்கேட்ஸ்-ம் இதுபோன்ற விளைவு வந்தால் என்ன செய்வது என்று குறித்து விவாதித்தோம். ஒருவேளை சுத்தமான நீர் கிடைக்காவிட்டால் என்ன செய்வது, போதுமான உணவு இல்லாத சூழ்நிலை தொடர்ந்தால் என்ன நிலை ஏற்படும் போன்று விவாதித்தோம்.

முதலில் நாம் ஒரு குடும்பமாக என்ன செய்வது

முதலில் நாம் ஒரு குடும்பமாக என்ன செய்வது

அதேபோல் நாங்கள் வேறு இடத்துக்கு செல்ல வேண்டுமென்றால் எங்கு செல்வது போன்ற கேள்விகளும் இடம்பெற்றிருந்ததாக அதில் கூறியிருந்தார். இதுபோன்ற நிலை ஏற்படும் போது முதலில் நாம் ஒரு குடும்பமாக என்ன செய்வது உள்ளிட்ட கேள்விகளோடு விவாதம் இருந்ததாக கூறினார்.

மே 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு: சொமேட்டோ, ஸ்விக்கி செயல்படாது- அதிரடி உத்தரவு!மே 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு: சொமேட்டோ, ஸ்விக்கி செயல்படாது- அதிரடி உத்தரவு!

சூழலை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்

சூழலை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்

இதையடுத்து இதுபோன்ற சூழலை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்பதற்கு தங்கள் வீட்டு அடித்தளத்தில் சிறிது உணவை சேமித்து வைத்துள்ளதாக கூறினார். மேலும் கொரோனா வைரஸ் குறித்து அவர் பேசுகையில், தற்போதைய சூழ்நிலையில் கொரோனா மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முறையான உபகரணங்கள் இல்லாததால் சிரமமாக இருக்கிறது. இந்த கடினமான நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

source: cnbc.com

Best Mobiles in India

English summary
Bill and Melinda Gates began to stockpile food in their basement for years before

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X