தம்பி நீங்க வாங்க ப்ளீஸ்.,சோ சாரி முடியாது., NASA அழைப்பையே நிராகரித்த இந்திய மாணவன்-காரணம் தெரியுமா

|

தம்பி பெரிய ஆளாகி என்ன ஆவிங்க., என்ற கேள்வி நாம் வளர ஆரம்பிக்கும் பருவத்தின் போதே பின் தொடர்கிறது. சிறு வயதில் ஒரு கனவு, ஏதாவது படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால்., ஹீரோ கதாபாத்திரத்தின் பணியில் சேர வேண்டும் என்ற ஆசை அவ்வப்போதே மாறிக் கொண்டே இருக்கும்.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கனவு

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கனவு

பெரும்பாலானோருக்கு சின்ன வயதில் போலீஸ் ஆக வேண்டும் என்று ஆசைதான் இருக்கும். அல்லது அப்பா இருக்கும் துறையில் அவரை விட சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அனைத்துக் கட்டங்களை கடந்து வர நாம் எடுக்கும் கல்லூரிப் படிப்பு மிக முக்கியமாக நமது வாழ்க்கையை தீர்மாணிக்கிறது.

டிகிரியை முடிப்பது தான் கனவு

டிகிரியை முடிப்பது தான் கனவு

கல்லூரி படிப்பு நமது வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இன்ஜினியரிங் படிக்கும் சில மாணவர்களிடம் ஆரம்பத்தில் சென்று உங்கள் கனவு என்னவென்று கேட்டால் அமெரிக்கா போவேன் என்பார்கள். நான்காவது ஆண்டில் முதலில் டிகிரியை முடிப்பது தான் எனது கனவு என ஒரு அந்தர் பல்டி இருக்கும்.

சத்தமின்றி கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!சத்தமின்றி கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!

நாசா அழைப்பையும் உதறி தள்ளிய மாணவன்

நாசா அழைப்பையும் உதறி தள்ளிய மாணவன்

ஒரு சிலர் மட்டும் தங்களது கனவையே இலக்காக நினைத்து ஒவ்வொரு நிமிடமும் அதற்கான அடியாய் எடுத்து வைப்பார்கள். அப்படி ஒரு மாணவன் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு வந்த நாசா அழைப்பையும் உதறி தள்ளிவிட்டார்.

ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்

ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்

இந்த நிலையில், பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கோபால்ஜி (வயது 19). இவரது தந்தை பிரேம் ரஞ்சன் குன்வார் விவசாய தொழில் செய்து வருகிறார். ஏழை குடும்பத்தில் பிறந்த கோபாலுக்கு ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பம் முதலே இருந்தது. அரசு பள்ளியில் படித்த அவர் புதிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை

தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை

அதுமட்டுமின்றி கோபால்ஜி 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தனது முயற்சி பற்றி கூறினார். இதைத்தொடர்ந்து அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும், பின்னர் ஆமதாபாத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளைக்கும் (என்.ஐ.எப்.) அனுப்பப்பட்டார். இங்கு கோபால்ஜி 4 புதிய கண்டுபிடிப்புகளை செய்து காட்டினார்.

4 புதிய கண்டுபிடிப்புகள்

4 புதிய கண்டுபிடிப்புகள்

அதுமட்டுமின்றி கோபால்ஜி 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தனது முயற்சி பற்றி கூறினார். இதைத்தொடர்ந்து அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும், பின்னர் ஆமதாபாத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளைக்கும் (என்.ஐ.எப்.) அனுப்பப்பட்டார். இங்கு கோபால்ஜி 4 புதிய கண்டுபிடிப்புகளை செய்து காட்டினார்.

Google அடித்த அபாய மணி: சீனாவிலிருந்து அடுத்த பிரச்னை., யோசிக்காம இதையெல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும்Google அடித்த அபாய மணி: சீனாவிலிருந்து அடுத்த பிரச்னை., யோசிக்காம இதையெல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும்

வாழை மற்றும் காகித உயிர் கலங்கள்

வாழை மற்றும் காகித உயிர் கலங்கள்

கோபால்ஜி வாழை மற்றும் காகித உயிர் கலங்களுக்கு காப்புரிமைகளை பெற்றுள்ளார். நீர் மின் உயிர் செல், கோபா அலாஸ்கா, போலி பிளாஸ்டிக், லிச்சி ஒயின் போன்ற மற்ற சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் வாழை இலை கழிவில் இருந்து வாழை உயிர் செல், காகித உயிர் செல், அதிக வெப்பத்தை தாங்கக்கூடிய கோபோனியம் அலாய் ஆகியவற்றை உருவாக்கி இருந்தார். தனது 10-ம் வகுப்பின்போது இன்ஸ்பயர் என்ற விருதையும் பெற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள் வரத்தொடங்கியது.

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கோபால்ஜிக்கு அழைப்பு விடுத்தது. துபாய், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவையும் அழைப்புவிடுத்தன. இதையெல்லாம் அவர் கண்டுகொள்ளாமல், இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்.

கோபால்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில்

கோபால்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில்

இதுகுறித்து கோபால்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், வாழை இலை கண்டுபிடிப்புக்கு பிறகு, வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள் வரத்தொடங்கியது. எனது முயற்சிகளுக்கு என்னுடைய தந்தை உதவியாக இருந்தார். கோபோனியம் அலாய் கண்டுபிடிப்புக்கு நாசா அழைப்புவிடுத்தது, ஆனால் அதை நிராகரித்துவிட்டேன்.

இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும்

இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும்

அமெரிக்க விஞ்ஞானிகளும் என்னை சந்திக்க வந்தார்கள். இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தை அவர்களிடம் தெரிவித்துவிட்டேன். இந்திய அறிவியல் மற்றும் புதுமைகளுக்காக 12-ம் வகுப்புக்கு கீழ் உள்ள மாணவர்களை ஊக்குவிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன்.

முக்கிய நோக்கம்

முக்கிய நோக்கம்

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனநிலையை வளர்ப்பதே எனது முக்கிய திட்டம். தற்போது டேராடூனில் உள்ள கிராபிக் எரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பில் சேர்ந்து ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வருகிறேன். எனது முக்கிய நோக்கம் 100 ஆராய்ச்சி மாணவர்களை கண்டுபிடிப்பது ஆகும். நாடு முழுவதும் ஒரு குழுவாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Bihar student declined NASA offer to work for his country

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X