ஸ்மார்ட்போன் புரளிகள் நம்பாதீங்க.!!

Written By: Aruna Saravanan

நம்ம ஊர்களில் ஒன்னுமே இல்லாத விடயங்களையும் பெரிதாக சொல்வதையே பெரும்பாலானோரும் செய்து வருகின்றனர். நமக்கு தெரிந்த விடயங்களில் ஏதேனும் பொய் இருந்தால் நம்மால் எளிதாக கண்டறிய முடியும். ஆனால் நமக்கு எதுவும் தெரிந்திராத விடயங்களில் உண்மை எது பொய் எது என்பதை கண்டறிவது கடினமான காரியமே.

அந்த வகையில் மொபைல் எனப்படும் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்தும் பல்வேறு புரளிகள் மற்றும் பொய் கதைகள் பரப்பப்பட்டு வருகின்றது. மொபைல் போன் பயன்பாட்டுகளில் பல்வேறு கட்டுகதைகள் பரவி வருகின்றன. அவை வாட்ஸ்ஆப், மின்னஞ்சல் போன்ற சேவைகளில் பெரும்பாலும் இவை வெளிவருகின்றன. அது எந்த அளவுக்கு உண்மை என்பதை பற்றி விரிவாக இங்கு காண்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கட்டுகதைகள்:

ஸ்மார்ட்போன்

மொபைல் போன்கள் விமானத்தில் பயன்படுத்தப்படுவது தொடர்புகளை பாதிக்கும். ஆகையால் விமானத்தில் போன் பயன்பாடு பாதுகாப்பற்றது.

உண்மை:

ஸ்மார்ட்போன்

நாகரிக விமான நிலையம் தகவல் தொடர்பில் சிறந்து விளங்கக் கூடியது. விமானத்தில் மொபைல் பயன்பாடு பாதுகாப்பற்றது என்றால் அதை முற்றிலும் தடை செய்து இருப்பார்கள். ஆகையால் மொபைல் போன் பயன்பாட்டை விமானத்தில் தவிர்ப்பது கூட்டத்தை கட்டுபடுத்தவும், பாதுகாப்புக்கும் தான்.

கட்டுக்கதை:

ஸ்மார்ட்போன்

பெட்ரோல் நிரப்பும் இடத்தில் மொபைல் பயன்படுத்தினால் தீ பிடிக்கும்.

உண்மை:

ஸ்மார்ட்போன்

பெட்ரோலியம் வாயு எரியக் கூடியது. தீ பட்டால் இது எரியும். ஆனால் அது தீகுச்சியில் இருந்து வரும் நெருப்பு, மின்சாரம் போன்றவையால் தான் தவிர மொபைல்போனால் அல்ல. போலியான பேட்டரி கொண்ட போனை பெட்ரோல் நிலையத்தில் பயன்படுத்தினால் நெருப்பு வரும் என்பது வதந்தி.

கட்டுகதை:

ஸ்மார்ட்போன்

இரவு முழுவதும் மொபைலை சார்ஜில் வைக்க கூடாது. இதனால் கருவி பழுதாகும்.

உண்மை:

ஸ்மார்ட்போன்

ரீசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி கொண்ட எந்த போனும் பாதுகாப்பான சர்க்யூட்ஸ் கொண்டது. ஆகையால் இரவு முழுவதும் சார்ஜ் செய்தாலும் எந்த பாதிப்பும் போனுக்கு இல்லை. பேட்டரி முழுவதும் சார்ஜ் ஏரியவுடன் சார்ஜ் செய்வது தானாகவே நின்று விடும். பவர் அடாப்டர் சில நேரங்களில் பவர் இழுக்கக் கூடும்.

கட்டுகதை:

ஸ்மார்ட்போன்

பெரிய பேட்டரி அதிக நாட்களுக்கு உழைக்கும்.

உண்மை:

ஸ்மார்ட்போன்

செல்போனோ, டேப்ளெட் கருவியோ, மடி கணினியோ எதுவாக இருந்தாலும் அதன் பேட்டரி எவ்வளவு பவர் இழுக்கின்றது என்பதை பொருத்து தான் அதன் ஆயுள் நிர்ணயம் செய்யப்படுகின்றதே தவிர அதன் அளவுகளால் அல்ல.

கட்டுகதை:

ஸ்மார்ட்போன்

தனிப்பட்ட பிரவுஸிங்கால் உங்களது ரகசியங்கள் காக்கப்படுகின்றது.

உண்மை:

ஸ்மார்ட்போன்

பல மொபைல் போன்களில் ரகசியங்கள் காக்கப்படுவதற்கும், தேவையில்லாத குக்கீஸ் தலையிடுதலையும் நிறுத்தும் மோட் உள்ளது. ஆனால் இது உங்கள் இருப்பிடத்தையும், செயல்களையும், நெட்டில் நீங்கள் பார்க்கும் சைட்கள் பற்றிய விவரத்தையும் மறைப்பதில்லை.

கட்டுகதை:

ஸ்மார்ட்போன்

சார்ஜில் இருக்கும் போது போனை பயன்படுத்தினால் போன் வெடிக்கும் அபாயம் உள்ளது.

உண்மை:

ஸ்மார்ட்போன்

இது ஒரு விதத்தில் உண்மைதான். சில இடங்களில் இது போல் நிகழ்ந்துள்ளது தான். ஆனால் இந்த விபத்துக்கு காரணம் பேட்டரியே தவிர கருவி இல்லை. இது தரமற்ற போலியான பேட்டரியால் நிகழ்கின்றது. தரமான தேவையான வோல்ட்களில் செயல் புரியும் எந்த பேட்டரியும் இது போல் வெடிப்பது இல்லை.

கட்டுக்கதை:

ஸ்மார்ட்போன்

மொபைல் போன்கள் கதிர்வீச்சுகளை எமிட் செய்யும் ஆகையால் முக்கிய இடங்களிலும், ஜீன்ஸ், டி ஷேர்ட்களிலும் போனை வைக்க கூடாது.

உண்மை:

ஸ்மார்ட்போன்

நல்ல பெயர் கொண்ட நிறுவனத்தில் இருந்து வரும் எந்த தரமான போனும் SAR அதாவது Specific Absorption Rating என்ற சோதனையில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த சோதனையில் தேர்ச்சி பெற்ற எந்த போனும் அளவுக்கு அதிகமான கதிர்வீச்சை வெளியிடுவதில்லை. மொபைல் போன் பயன்பாட்டுக்கும் நோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
biggest smartphone myths busted Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot