Home
News

90 வயது பாட்டி என்று கூட பார்க்காமல் தம்பி செய்த வேலையை பாருங்க.! மிகப்பெரிய திருட்டு.!

ஹாங்காங்கைச் சேர்ந்த 90 வயதான பெண், "இதுவரை இல்லாத மிகப்பெரிய தொலைப்பேசி மோசடி" என்று அழைக்கப்படும் மிகப்பெரிய மோசடியில் சிக்கி, சுமார் 32 மில்லியன் அமெரிக்க டாலர் போன் ஸ்காமிங் மூலமாக இழந்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மோசடி செய்த நபர் வெறும் 19 வயது மட்டுமே நிரம்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

90 வயது பாட்டி என்று கூட பார்க்காமல் தம்பி செய்த வேலை

90 வயது பாட்டி என்று கூட பார்க்காமல் தம்பி செய்த வேலை

இந்த பெண் எப்படி தனது பணத்தை இழந்தார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கும் இப்படி ஒரு சூழல் உருவாக்கப்பட்டால் எப்படித் தப்பிப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பெயரிடப்படாத அந்த 90 வயது பெண்ணை கடந்த ஆண்டு ஆகஸ்டில் சீனாவின் பிரதான நிலப்பரப்பில் சட்ட அமலாக்கத்தில் பணிபுரிவதாகக் கூறிய ஒருவர் தொடர்பு கொண்டிருக்கிறார். சீனாவின் பிரதான நிலப்பகுதியில் பணமோசடி திட்டத்தில் அவரது அடையாளம் பயன்படுத்தப்படுவதாக அவரிடம் அந்த நபர் தெரிவித்திருக்கிறார்.

பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட செல்போன்

பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட செல்போன்

பதட்டம் அடைந்த அந்த பெண்ணிடம் எல்லாம் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதிகாரிகள் அதை விசாரித்து வருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். அந்த நபர் கொடுத்த வாக்குறுதியை நம்பி, அந்த பெண் உறுதியாக இருந்திருக்கிறார்.

சீன அதிகாரியாகக் காட்டிக்கொண்ட அந்த நபர் அவரது வீட்டிற்குச் சென்று நேரடியாகப் பார்த்துப் பேசி இருக்கிறார். அந்த பெண்ணுடன் பாதுகாப்பாகத் தொடர்புகொள்வதற்காக ஒரு செல்போனையும் கொடுத்திருக்கிறார்.

32 மில்லியன் திருட்டு

32 மில்லியன் திருட்டு

பணத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சி என்ற பெயரில் தொடர்ச்சியான பல பரிவர்த்தனைகளைச் செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மார்ச் 2021 இறுதிக்குள் மொத்தம் 32 மில்லியன் பரிமாற்றப்பட்டுள்ளது.

இவையெல்லாம் நடந்து முடிந்த பின்னர், அந்த பெண்ணின் ஊழியர்களில் ஒருவர் சந்தேகம் அடைந்தபோது, ​​அவர் அந்தப் பெண்ணின் மகளைத் தொடர்புகொண்டு என்ன நடக்கிறது என்பதைத் தெரிவித்திருக்கிறார். மார்ச் 2 ஆம் தேதி அந்தப் பெண்ணின் மகள் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

19 வயது இளைஞர் கைது

19 வயது இளைஞர் கைது

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மொத்தம் 10 பணப் பரிவர்த்தனைகளைச் செலுத்தியதாக அந்த பெண் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மார்ச் 25 ஆம் தேதி, 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். அந்த பெண் ஹாங்காங்கின் மிகவும் விலையுயர்ந்த பகுதியான 'தி பீக்' என்ற பகுதியில் வசிக்கிறார் என்று தென் சீன மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இவர்களின் இலக்கே இந்த வயது பெண்கள் தான்

இவர்களின் இலக்கே இந்த வயது பெண்கள் தான்

தெரிவித்துள்ளது. இந்த மோசடிக்காரர்களின் முக்கிய குறியே பணக்கார பெண்கள் தான் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக 50 வயதிற்கு மேல் உள்ளவர்களைத் தான் இந்த கும்பல் குறிவைத்து மோசடி செய்து வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். மேலும், விசாரணை தொடர்ந்து வருவதால் ஜெமினியின் வெளியாகிய நபர் மீண்டும் கைது செய்யப்படலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மாத இறுதியில் போலீசில் மீண்டும் புகார் செய்ய உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிஸ்டில் மற்றொரு பெண்

லிஸ்டில் மற்றொரு பெண்

இதுபோல், சமீபத்தில் 65 வயதான சீனாவின் பிரதான பகுதியில் வசிக்கும் ஒரு பெண் பண மோசடிக்கு ஆளாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரிடம் இருந்து 8.9 மில்லியன் திருடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அடையாளம் தெரியாத நபர் உங்களை நேரில் அல்லது போனில் தொடர்பு கொண்டால் உடனே அவர்களை நிராகரிப்பது உங்களுக்கு நல்லது.

Best Mobiles in India

English summary
Biggest Phone Scam Ever 90 Year Old Hong Kong Woman Loses $32 Million : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X