"மாரி" தனுஷ்க்கே குருவா இருப்பார் போல.. பாத்ரூம் கோப்பை உடன் ட்விட்டர் ஆஃபிஸ் வந்த மஸ்க்!

|

மஸ்க் ட்விட்டரை விரைவில் வாங்கிவிடுவார், இந்த ஒப்பந்தம் நிறைவேறும் பட்சத்தில் மஸ்க் 75 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்வார் போன்ற பல தகவல்கள் உலா வரத் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் மஸ்க், வித்தியாசமான ஒரு பொருளுடன் ட்விட்டர் அலுவலகத்துக்குள் நுழைந்திருக்கிறார். இதை இங்கே கொண்டு வரக் காரணம் என்ன என்ற விவாதங்களுக்கு மத்தியில் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே பதிவேற்றியும் இருக்கிறார்.

ட்விட்டரை வாங்குவாரா மஸ்க்?

ட்விட்டரை வாங்குவாரா மஸ்க்?

டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இன் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான ட்விட்டர் ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்துவதற்கு ஆதரவாக வங்கிகள் 13 பில்லியன் டாலர்கள் வரை அனுப்பி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. எனவே ட்விட்டர் ஒப்பந்தம் எப்படியும் இந்த வார இறுதிக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மஸ்க் ட்விட்டர் அலுவலகத்துக்குள் நுழைந்த முறை இணையத்தில் வைரலாகத் தொடங்கி இருக்கிறது.

ட்விட்டர் அலுவலகம் சென்ற மஸ்க்

ட்விட்டர் அலுவலகம் சென்ற மஸ்க்

கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்துக்கு எலான் மஸ்க் சென்றிருக்கிறார். 44 பில்லியன் ட்விட்டர் ஒப்பந்தம் நிறைவடையும் நிலையில் மஸ்க் இந்த அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் மஸ்க் செல்லும் போது வெறும் கையுடன் செல்லவில்லை. கையில் வைத்திருந்த பொருள் தான் இங்கு கேள்விக் குறி.

பாத்ரூம் சிங்க் உடன் சென்ற மஸ்க்

பாத்ரூம் சிங்க் உடன் சென்ற மஸ்க்

மாரி திரைப்படத்தில் தனுஷ் செய்யும் சின்னச்சின்ன ஜாலியான சேட்டை போல் மஸ்க்-ம் அவ்வப்போது ஜாலியாக ஏதாவது செய்வார். அதன்படியான ஒரு செயலை தான் தற்போதும் செய்திருக்கிறார்.

ஒரு இடத்திற்கு ஒருவரை சந்திக்க சென்றால் அந்த இடத்துக்கும் சூழ்நிலைக்கும் தகுந்த ஒரு பொருளை எடுத்து செல்வது வழக்கம். ஆனால் எதிலும் வித்தியாசமாக செய்யும் இந்த உலகப் பணக்காரர் எலான் மஸ்க், ட்விட்டர் அலுவலகத்திற்கு வித்தியாசமான ஒரு பொருளை எடுத்துச் சென்றிருக்கிறார்.

அதாவது ட்விட்டர் அலுவலகத்திற்கு மஸ்க் கழிப்பறை கோப்பை (toilet sink) உடன் சென்றிருக்கிறார். ட்விட்டருக்கும் கழிப்பறை மடுவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லையா? இதற்கான விளக்கத்தை மஸ்க்கே தெரிவித்திருக்கிறார் வாங்க பார்க்கலாம்.

பாத்ரூம் சிங்க் எடுத்து செல்ல காரணம் என்ன?

பாத்ரூம் சிங்க் எடுத்து செல்ல காரணம் என்ன?

ட்விட்டர் அலுவலகத்துக்குள் பாத்ரூம் சிங்க் உடன் மஸ்க் சென்ற காட்சியை அவரே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் "ட்விட்டர் தலைமையகத்தில் நுழைகிறேன்- அது மூழ்கட்டும்" என்ற தலைப்பில் இந்த வீடியோவை பதிவேற்றி இருக்கிறார். அதோடு இந்த ட்வீட் அவரது ட்விட்டர் பக்கத்தில் பின் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இந்த ட்வீட் தான் அவரது ட்விட்டர் பக்கத்தில் தலைமை ட்வீட்டாக மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த ட்வீட்டின் மூலம் இந்த முறை ட்விட்டர் ஒப்பந்தம் நிறைவேறும் என்பது ஏறத்தாழ உறுதியாகி விட்டதாக என கூறப்படுகிறது.

ட்விட்டரை வாங்குவாரா எலான் மஸ்க்?

இதற்கு முன்னதாக மஸ்க் மார்ச் மாதத்தில் ட்விட்டரை வாங்குவதாக இருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து ஜூன் மாதம் மஸ்க் பின் வாங்கினார். மஸ்க் ட்விட்டரை வாங்குவதாக அறிவித்துவிட்டு பிறகு பின்வாங்கியதை அடுத்து, அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் இதற்கிடையில் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கு மீண்டும் விருப்பம் தெரிவித்தார்.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மீண்டும் மஸ்க் இதை வாங்க விருப்பம் தெரிவிக்க காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் மறுபுறம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மொத்த நிதியும் விரைவில் மஸ்க் கையில்

மொத்த நிதியும் விரைவில் மஸ்க் கையில்

இதுகுறித்து வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இல் வெளியான தகவலை பார்க்கையில், மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்துவதற்கு ஆதரவாக வங்கிகள் 13 பில்லியன் டாலர்களை அனுப்பத் தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மஸ்க் ட்விட்டரை வாங்குவது ஏறத்தாழ முடிவாகிவிட்டது. வார இறுதிக்குள் இந்த ஒப்பந்தம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கான மொத்த நிதியும் வெள்ளிக்கிழமைக்குள் கிடைக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

ட்விட்டரில் பல மாற்றங்களுக்கு வாய்ப்பு

ட்விட்டரில் பல மாற்றங்களுக்கு வாய்ப்பு

ட்வீட்டர் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கிய மஸ்க் மீண்டும் வாங்க விருப்பம் தெரிவிப்பதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. வெளியான தகவலின்படி மஸ்க் விரைவில் ட்விட்டரை வாங்கும்பட்சத்தில் அதில் பல மாற்றங்கள் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Biggest mischievous by Elon Musk: Musk Enters Twitter Office With Bathroom Sink

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X