Home
News

போனா வராது.. திரும்ப கிடைக்காது.. முழுசா ரூ.30000 விலை குறைப்பு.. ஆர்டர் மழையில் நனையும் Motorola போன்!

"இப்படி ஒரு ஆஃபர் இனி கிடைக்குமானு தெரியலயே!" என்று கூறவைக்கும்படியான அதிரடி சலுகை ஒன்று, அமேசான் இந்தியா (Amazon India) வழியாக அணுக கிடைகிறது. மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது முழுதாக ரூ.30,000 நேரடி தள்ளுபடி (Flat Discount) அறிவிக்கப்பட்டுள்ளது!

அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் பழைய விலை என்ன? ரூ.30000 என்கிற ஃபிளாட் டிஸ்கவுண்ட்டிற்கு பிறகு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய விலை என்ன? குறிப்பிட்ட மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் என்னனென்ன? இப்போதைக்கு இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா, வேண்டாமா? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இதோ:

முழுசா ரூ.30000 விலை குறைப்பு.. ஆர்டர் மழையில் நனையும் Motorola போன்!

ரூ.30,000 என்கிற விலை குறைப்பை பெற்றுள்ளது மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா (Motorola razr 40 Ultra) ஸ்மார்ட்போன் தான். இது மோட்டோரோலா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஃபிளிப் போன் (Flip Phone) ஆகும். அதுமட்டுமல்ல இது மிகவும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் மொபைல் பிளாட்ஃபாரமையும் (Snapdragon 8+ Gen 1 Mobile Platform) கொண்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஓஓஎல்இடி (FHD+ poOLED) மெயின் டிஸ்பிளே மற்றும் 3.6-இன்ச் பிஓஓஎல்இடி எக்ஸ்டெர்னல் டிஸ்பிளேவை (External Display) கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது 12எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா-வைட் கேமராவை கொண்டுள்ளது. இதன் கேமரா செட்டப்பில் மேக்ரோ மற்றும் ஃபீல்ட் ஆஃப் வியூ 108°, சிங்கிள் எல்இடி ஃபிளாஷ் போன்றவைகளும் உள்ளன. செல்பீக்ககாக 32எம்பி கேமரா உள்ளது.

சார்ஜிங்கை பொறுத்தவரை இது 3800mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 30W வயர்டு மற்றும் 5W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் (Wireless Charging Support) வருகிறது. பெர்பார்மென்ஸ் மற்றும் டிஸ்பிளேவில் எந்த குறையம் வைக்காத மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ராவில் சில குறைகளும் உள்ளன.

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள முக்கியான 2 குறைகளை பற்றி பேசுகையில், இதன் கேமரா செட்டப் ஆனது நல்ல-நல்ல சென்சார்களை கொண்டிருக்கின்றன; இருப்பினும் அது விலைக்கு ஏற்ற சென்சார்களாக இல்லை; அவைகள் இன்னும், கொஞ்சம் மேம்படுத்தப்பட்டு இருக்கலாம். அடுத்ததாக இதன் சார்ஜ்ங் ஸ்பீட் இன்னும் கொஞ்சம் வேகமானதாக இருந்திருக்கலாம்.

விவா மெஜந்தா (Viva Magenta) மற்றும் இன்ஃபினைட் பிளாக் (Infinite Black) என்கிற என இரண்டு கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.1,19,999 ஆகும். இருப்பினும் அமேசான் வலைத்தளமானது இதன் மீது 25 சதவீத நேரடி தள்ளுபடியை (அதாவது ரூ.30,000 தள்ளுபடியை) வழங்குகிறது. இதன் கீழ் மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ராவானது ரூ.89,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஃபிளாட் டிஸ்கவுண்ட் மட்டுமல்ல மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா மீது எக்ஸ்சேஞ்ச் மற்றும் பேங்க் ஆஃபர்களும் (Exchange and Bank Offers) அணுக கிடைக்கிறது. இவைகளை சரியாக பயன்படுத்தும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலையை மேலும் குறைக்க முடியும்.

எக்ஸ்சேஞ்ச் சலுகையை பொறுத்தவரை, அமேசான் வலைத்தளமானது அதிகபட்சமாக ரூ.76200 வரையிலான தள்ளுபடியை வழங்குகிறது. இதற்காக நீங்கள் உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்ய வேண்டியிருக்கும். உங்களுக்கு கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் வேல்யூவானது (Exchange Value) நீங்கள் கொடுக்கும் ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் அதன் நிலைமையை பொறுத்து வேறுபடும்.

வங்கி சலுகைகளை பொறுத்தவரை, அமேசானில் நீங்கள் பல்வேறு வகையான வங்கி சலுகைகளை பெறுவீர்கள். ஐசிஐசிஐ (ICICI) வங்கி கிரெடிட் கார்டுகளில் ரூ.7000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். 12 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட இஎம்ஐ பரிவர்த்தனையில் இன்டஸ்லேண்ட் (Indusland) பேங்க் கிரெடிட் கார்டு வழியாக ரூ.250 உடனடி தள்ளுபடி கிடைக்கும். எச்எஸ்பிசி (HSBC) கேஷ்பேக் கார்டு கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ.250 தள்ளுபடி கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Biggest Ever Initial Offer on Motorola Razr 40 Ultra Flip Phone Gets Rs 30000 Offer via Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X