Home
News

இனி ரூ.5000 க்குள் பணம் அனுப்ப.. UPI சேவையில் முக்கிய மாற்றம்.. PIN நம்பர் கதை முடிஞ்சது!

யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface) சேவையில் முக்கியமான மாற்றம் ஒன்று நடைமுறைக்கு வந்து உள்ளது. இந்த "மாற்றம்" இந்தியாவின் டிஜிட்டல் கட்டண சூழலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன மாற்றம்? கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ ஆப்களுக்கு போட்டியாக அமேசான் பே ஆப்பில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், தகுதியுள்ள பயனர்கள் கைரேகை அல்லது முக அங்கீகாரத்தை பயன்படுத்தி யுபிஐ கட்டணங்களை செய்ய முடியும்.

UPI சேவையில் முக்கிய மாற்றம்.. PIN நம்பர் கதை முடிஞ்சது!

அதாவது அமேசான் பே ஆப் வழியாக நடக்கும் சிறிய வகை பணப் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ பின் நம்பரை உள்ளிட வேண்டிய அவசியம் இருக்காது. இந்த நடவடிக்கை, யுபிஐ கட்டணங்களை மிகவும் தடையற்றதாகவும், பாதுகாப்பாகவும், அன்றாட ஸ்மார்ட்போன் பயன்பாட்டுடன் இணக்கமாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிய வகை பணப் பரிவர்த்தனை என்றால் எவ்வளவு லிமிட்? அமேசான் பே ஆப்பில் கைரேகை அல்லது முக அங்கீகாரத்தை பயன்படுத்தி ரூ.5000 வரையிலான கட்டணங்களை அங்கீகரிக்கலாம். அதாவது அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு, "வழக்கம் போல" பின் நமபர் அடிப்படையிலான சரிபார்ப்பு தேவைப்படும்.

ரூ.5000 என்கிற லிமிட் ஆனது பயனர் வசதிக்கும், யுபிஐ பாதுகாப்புகளுக்கும் இடையில் சமநிலையை உறுதி செய்கிறது. புதிய அம்சத்தின் கீழ், அமேசான் பே ஆண்ட்ராய்டு பயனர்கள் "வழக்கம் போல" யுபிஐ பின் நம்பரை உள்ளிட்டு பணம் அனுப்புவதற்கு பதிலாக - தங்கள் கைரேகை ஸ்கேன் அல்லது முக அங்கீகாரம் போன்ற பயோமெட்ரிக் அடையாளங்காட்டிகளை மட்டுமே பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனைகளை செய்து முடிக்க முடியும்.

குறைந்த மதிப்புள்ள யுபிஐ கட்டணங்களுக்கான பின் நம்மவர் அவசியத்தை நீக்குவது, யுபிஐ பயனர்களுக்கு மிகவும் புலப்படும் மாற்றமாக இருக்கும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கைமுறையாக பின் நம்பரை உள்ளிடுவதற்குப் பதிலாக, பயனர்கள் இப்போது விரைவான "பயோமெட்ரிக் ஸ்கேன்" மூலம் பணம் செலுத்த முடியும்.

அமேசான் பேவின் கூற்றுப்படி, ஆரம்பகால தத்தெடுப்பு குறிகாட்டிகள் வலுவாக உள்ளன. அதாவது 90 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் தகுதியான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பயோமெட்ரிக் அங்கீகாரத்தை தேர்வு செய்கிறார்கள். பயோமெட்ரிக் அடிப்படையிலான கட்டண ஒப்புதல்களை கொண்ட பயனர்களிடையே இது அதிக அளவிலான நம்பிக்கை மற்றும் ஆறுதலை குறிக்கிறது.

யுபிஐ அடிப்படையிலான இந்த பயோமெட்ரிக் அங்கீகாரம் ஆனது ஸ்மார்ட்போனின் பாதுகாப்பான பயோமெட்ரிக் கட்டமைப்பை சார்ந்துள்ளது என்பதை அமேசான் பே உறுதிப்படுத்தியுள்ளது. கைரேகைகள் அல்லது முக ஸ்கேன் போன்ற உணர்திறன் வாய்ந்த பயோமெட்ரிக் தரவு பயனரின் டிவைஸில் சேமிக்கப்படும்; அவைகள் எக்ஸ்டெர்னல் ஆக பகிரப்படாது.

மேலும் இந்த அம்சம் ஏற்கனவே உள்ள யுபிஐ பாதுகாப்பு நெறிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, கட்டணத் தரவு, வங்கி விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் தகவல்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. இந்த அறிமுகத்துடன், பயோமெட்ரிக் அடிப்படையிலான யுபிஐ அங்கீகாரத்தை செயல்படுத்தும் இந்தியாவில் முதல் கட்டண சேவை வழங்குநர்ஆக (PSP) அமேசான் பே மாறுகிறது.

இந்த நடவடிக்கை டிஜிட்டல் கட்டணங்களில் பயன்பாட்டின் எளிமை, நம்பிக்கை மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்கான பரந்த தொழில்துறை முயற்சிகளுடன் அமேசான் பே-வை நிலை நிறுத்துகிறது. மேலும் இந்த புதிய அம்சம், யுபிஐ ஆப்களிடையே போட்டியை தீவிரப்படுத்துகிறது, அமேசான் பேவை போலவே மற்ற நிறுவனங்களும் பாஸ்வேர்ட் இல்லாத மற்றும் பயோமெட்ரிக் சார்ந்த பேமண்ட் சொல்யூஷனைகளை ஆராய ஊக்குவிக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Biggest Change in UPI Service Biometric Fingerprint Facial Authentication For Payments Up to Rs 5000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X