இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
ரூ.299 முதல் கிடைக்கும் அமேசான் ப்ரைம் வீடியோ பிளானுக்கும், ரூ.199-க்கு கிடைக்கும் நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளானுக்கும் வேட்டு வைக்கும் முனைப்பின்கீழ் வோடாபோன் ஐடியா நிறுவனமானது தனது விஐ மூவீஸ் அன்ட் டிவி ஆப் வழியாக கிடைக்கும் நன்மைகளை "வேற லெவலுக்கு" அதிகரித்துள்ளது!
அப்படி என்ன நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளது? விஐ மூவீஸ் அன்ட் டிவி ஆப்பிற்கு (Vi Movies and TV App) கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய மாற்றமானது (அதிகரிக்கப்பட்டுள்ள நன்மைகளானது) வோடாபோன் ஐடியா சேவையின் கீழ் இருக்கும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் (Prepaid and Postpaid) ஆகிய இரண்டு வகை சந்தாதாரர்களுக்குமே பொருந்தும்.

தற்போது விஐ மூவீஸ் அன்ட் டிவி ஆப்பின் கீழ் 400 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் (400 Live TV Channels) மற்றும் 13 க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்கள் (13 OTT Apps) மற்றும் காம்ப்ளிமென்ட்ரி கன்டென்ட் லைப்ரரிகளுக்கான (Complimentary Content Libraries) அணுகல்கள் கிடைக்கும்.
என்னென்ன ஓடிடி ஆப்கள் கிடைக்கும்? தற்போது விஐ மூவீஸ் அன்ட் டிவி ஆப்பின் கீழ்.. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar), சோனி லிவ் (Sony Liv), மனோரமா மேக்ஸ் (Manorama Max), ஃபேன்கோட், சௌபால், க்ளிக், நம்மஃப்ளிக்ஸ், ப்ளேஃப்ளிக்ஸ், டிஸ்ட்ரோடிவி, ஷெமரூ மீ, ஹங்காமா ப்ளே, யூப் டிவி மற்றும் நெக்ஸ்ஜிடிவி ஆகியவைகள் அணுக கிடைக்கிறது.

குறிப்பாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் கீழ் ஷோடைம், கர்மா காலிங், லூட்டரே, சேவ் தி டைகர்ஸ் சீசன் 2, 12த் ஃபெயில், சாலார் (இந்தி), பாட்னா சுக்லா போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களை பார்க்கலாம். மறுகையில் உள்ள சோனி லைவ் உடன் ஷார்க் டேங்க் இந்தியா, ஸ்கேம் 2023, தி தெல்கி ஸ்டோரி, ரைசிங்கனி VS ரைசிங்கனி மற்றும் பல கன்டென்ட்களை அணுகலாம்.
ஃபேன்கோட் வழியாக பயனர்கள் எப்1 மற்றும் லைவ் கிரிக்கெட் போட்டிகளை காணலாம். இதுதவிர்த்து விஐ மூவீஸ் அன்ட் டிவி ஆப்பின் கீழ் சிறந்த தயாரிப்பாளர்களிடமிருந்து வெளியான பிராந்திய மொழி கன்டென்ட்களையும் பார்க்கலாம். எடுத்துக்காட்டிற்கு மனோரமா மேக்ஸ் மற்றும் நம்மபிளிக்ஸ் (NammaFlix) போன்றவைகளை கூறலாம்!

என்ன விலை? வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் ப்ரீபெய்ட் பயனர்கள் விஐ மூவீஸ் அன்ட் டிவி ஆப்பை ரூ.202 க்கும், போஸ்ட்பெய்டு பயனர்கள் ரூ.199 க்கும் அணுகலாம். இந்த சந்தாவின் கீழ் விஐ பயனர்கள் ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில் இருந்து கன்டென்ட்டை ஸ்ட்ரீமிங் செய்ய முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
விஐ மூவீஸ் அன்ட் டிவி ஆனது ஆண்ட்ராய்டு (Android), கூகுள் டிவி (Google TV), ஐஓஎஸ் (iOS), அமேசான் ஃபையர் ஸ்டிக் (Amazon FireTV Stick) மற்றும் வெப் வெர்ஷனிலும் (Web Version) அணுக கிடைக்கிறது. சமீபத்தில்.. இதேபோல ஒரு முக்கிய மாற்றத்தை இந்தியாவின் முக்கியமான டைரக்ட்-டு-ஹோம் (Direct-to-Home) சேவை ஆப்ரேட்டர்களில் ஒன்றான டாடா ப்ளே நிறுவனமும் செய்து இருந்தது.
டாடா ப்ளே நிறுவனமானது ரூ.99 க்கு புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்தது. அது டாடா ப்ளே 4கே (Tata Play 4K) என்று அழைக்கப்படுகிறது. இது சில நாட்களுக்கு முன்பு டாடா ப்ளே நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு புதிய வேல்யூ ஆடட் சேவை (New Value added service) ஆகும். இது சூப்பர் ஹை ரெசல்யூஷனில் (Super-high resolution) கன்டென்ட்-ஐ பார்க்க உதவும் ஒரு சேவையாகும். தற்போது இந்த சேவை மாதத்திற்கு ரூ.99 என்கிற அறிமுக விலையில் வாங்க கிடைக்கிறது!


Click it and Unblock the Notifications








