Home
News

Google Pay, PhonePe கதை முடிந்தது.. இனி ரூ.2000 மேல‌ இல்ல.. மார்ச் 31-க்குள் இதை பண்ணுங்க.. UPI-க்கு வந்தது?

யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைடு பேமண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) சேவையில் மத்திய அரசு நேரடி மாற்றத்தை கொண்டுவந்து இருக்கிறது. ரூ.2000-க்கு மேல் அல்லாமல் அதற்குள் பரிவர்த்தனைகளை செய்யும் கஸ்டமர்களுக்கு மார்ச் 31ஆம் தேதி மறக்க முடியாததாக மாற இருக்கிறது. கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ (UPI) ஆப்கள் மூலம் பரிவர்த்தனைகளை செய்யும் கஸ்டமர்களும் இப்போது இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்கெட் வரையில் கிடைக்கும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு (UPI Transactions) மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் திட்டங்களையும் கொண்டுவருகிறது. இப்போது, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை (UPI Transactions Incentive) கொடுக்கும் திட்டத்தை களமிறங்கி இருக்கிறது. ஆகவே, ஒவ்வொரு பரிவர்த்தனையும் கணக்கில் எடுக்கப்படுகிறது.

Google Pay, PhonePe கதை முடிந்தது.. இனி ரூ.2000 மேல‌ இல்ல.. மார்ச் 31?

அதாவது, ரூ.2000-க்குள் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.15 சதவீத ஊக்கத்தொகை கொடுக்கப்படும். இது ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும். அதுவே ரூ.2000-க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் இந்த ஊக்கத்தொகை கொடுக்கப்படாது. அதே நேரத்தில் தனிநபர் டூ வியாபாரிகள் (Person to Merchant) அல்லது பி2எம் (P2M) பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது.

ஆகவே, ஒட்டுமொத்த யுபிஐ கஸ்டமர்களுக்கும் இந்த ஊக்கத்தொகை கிடைக்காது. அதேபோல கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் பரிவர்த்தனைகளை செய்யும் கஸ்டமர்களுக்கும் இந்த ஊக்கத்தொகை கிடைக்காது. ஏனென்றால், இந்த ஊக்கத்தொகையை நேரடியாக மத்திய அரசு வழங்க இருக்கிறது. ஆகவே, அரசின் யுபிஐ ஆப் மூலமான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கிடைக்கும்.

அதாவது, இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of India) கீழ் செயல்படும் பீம் யுபிஐ (BHIM UPI) மூலம் பரிவர்த்தனைகளை செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த 0.15 சதவீத ஊக்கத்தொகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் ரூ.2000-க்குள் பரிவர்த்தனை செய்தால், ஊக்கத்தொகை கிடைக்காது.

அதே நேரத்தில் தனிநபர் டூ வியாபாரிகளுக்கான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த ஊக்கத்தொகை கிடைப்பதால், சிறுவணிகர்கள் அனைவரும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களில் இருந்து பீம் ஆப்-க்கு மாறவும் இது ஊக்குவிக்கிறது. ஏற்கனவே, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற தனியார் யுபிஐ ஆப்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இப்போது, அதிகளவில் பரிவர்த்தனைகள் நடக்கும் சிறுவணிகர்களுக்கு இந்த திட்டத்தை கொடுத்துள்ளது. இதன் மூலம் மளிகை கடை, பெட்டிக்கடை, டீ கடை போன்றவற்றில் நாள்தோறும் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும் என்பதால் அவர்களும் பீம் ஆப்-க்கு மாற தயாராகவே இருக்கின்றனர். இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு மார்ச் 31ஆம் தேதி கடைசியாகும்.

ஆனால், இவ்வளவு குறைந்த நாளில் எப்படி பரிவர்த்தனை செய்வது என்று குழப்பமடைய வேண்டாம். 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து 2025ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பரிவர்த்தனைகளை செய்த கஸ்டமர்களுக்கு இந்த ஊக்கத்தொகை கொடுக்கப்பட இருக்கிறது. ஆகவே, பழைய கஸ்டமர்களுக்கு ஊக்கத்தொகை அதிகமாக கிடைக்கும்.

இதுவரையில் செய்யவில்லை என்றால், இனிமேல் பீம் யுபிஐ ஆப் மூலம் பரிவர்த்தனைகளை செய்ய ஆரம்பிக்கலாம். ஏனென்றால், வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மீண்டும் இதுபோன்ற பரிவர்த்தனைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு, அடுத்த மார்ச் 31ஆம் தேதி வரையிலான பரிவர்த்தனைகளுக்கும் இந்த ஊக்கத்தொகை கொடுக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய யுபிஐ விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகள் மூலம் செயல்படாத மொபைல் நம்பர்கள் யுபிஐ ஆப்களில் இருந்து நீக்கம் செய்யப்பட இருக்கின்றன. அதாவது, ரீசார்ஜ் செய்யாமல், சேவை துண்டிக்கப்பட்ட சிம் கார்டுகளை இனி யுபிஐ ஆப்களில் பயன்படுத்த முடியாது. ஆகவே, இதை நினைவில் வைத்து கொண்டு பரிவர்த்தனைகளை செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BHIM UPI Transactions Incentive Per Payment To Small Merchants Up To Rs 2000 Till March 31
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X