Home
News

ரூ.1000, ரூ.2000 UPI அனுப்ப BHIM ஆப்பிற்கு வந்தது மாற்றம்.. அதிகபட்சம் ரூ.5000 லிமிட்.. NPCI அறிவிப்பு!

என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (National Payments Corporation of India) உருவாக்கப்பட்ட யுபிஐ (UPI) ஆப் ஆன பீம் ஆப்பில் (BHIM App) ரூ.5000 வரை லிமிட் உடனான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தின் கீழ், பயனர்கள் தங்கள் கைரேகை (Fingerprint ) அல்லது முக அங்கீகாரத்தை (Facial recognition) பயன்படுத்தி குறைந்த மதிப்புள்ள யுபிஐ பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க உதவும் பயோமெட்ரிக் அங்கீகார அம்சம் (Biometric authentication feature) ஆனது பீம் ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.1000, ரூ.2000 UPI அனுப்ப BHIM ஆப்பிற்கு வந்தது மாற்றம்!

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் முழு உரிமையுடைய பிரிவான என்பிசிஐ பீம் சர்வீசஸ் லிமிடெட் (NPCI BHIM Services Limited) அறிமுகப்படுத்தியுள்ள இந்த அம்சம், யுபிஐ பின் நம்பரை (UPI PIN Number) உள்ளிட வேண்டிய தேவையின்றி ரூ.5,000 வரை பணம் செலுத்த அனுமதிக்கிறது.

இந்த அம்சம், குறிப்பாக - அடிக்கடி குறைந்த மதிப்புள்ள பணம் செலுத்தும் பயனர்களுக்கு, அன்றாட பரிவர்த்தனைகளை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் யுபிஐ பின் நம்பரை உள்ளிட வேண்டிய தேவையை நீக்குவதன் மூலம், தவறான அல்லது மறக்கப்பட்ட பின் நம்பர்களால (Incorrect or forgotten PIN Number) ஏற்படும் தோல்வியுற்ற பரிவர்த்தனைகளையும் (Failed transactions) இது குறைக்கும்.

இந்த புதிய பயோமெட்ரிக் அங்கீகார அம்சத்தின் கீழ் - பயனர்கள் ஒருவருக்கொருவர் பண பரிமாற்றம் செய்தல் (peer-to-peer transfers), வணிகர்களின் க்யூஆர் கோட்களை ஸ்கேன் செய்து பணம் அனுப்புவது (scanning merchant QR codes) மற்றும் ஆன்லைன் பர்சேஸின் போது பணம் செலுத்துதல் (making online purchases) உள்ளிட்ட பல்வேறு பொதுவான செயல்பாடுகளில் பயன்படுத்தலாம்.

இந்த புதிய அம்சம் குறித்து கருத்து தெரிவித்த என்பிசிஐ பீம் சர்வீசஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான லலிதா நடராஜ், வலுவான பாதுகாப்புகளை பராமரிக்கும் அதே வேளையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை எளிமையாக்கும் வகையில் இந்த அப்டேட் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு, பரிவர்த்தனைகளை நேரடியாக தனிப்பட்ட பயனருடன் இணைத்து, பயன்பாட்டின் எளிமை மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் மேம்படுத்த உதவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கைரேகைகள் அல்லது முகத்தை அடையாளம் காணும் விவரங்கள் (Fingerprints or facial recognition details) போன்ற பயோமெட்ரிக் தரவுகள் (Biometric Data) ஆனது "எக்ஸ்டர்னல்" ஆக பகிரப்படாமல் பயனரின் டிவைஸிலேயே பாதுகாப்பாக சேமிக்கப்படும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பின் நம்பரை தவறாக பயன்படுத்துதல் (PIN misuse) அல்லது அங்கீகரிக்கப்படாத அணுகல் (Unauthorised access) தொடர்பான அபாயங்களையும் குறைக்கிறது.

இதெல்லாமே ரூ.5000 க்குள்ளான யுபிஐ பேமண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும். ரூ.5,000 க்கு மேற்பட்ட அதிக மதிப்புள்ள யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு (UPI Payment above Rs.5000), பீம் ஆப் பயனர்கள் தங்களின் யுபிஐ பின் நம்பரை உள்ளிட வேண்டியிருக்கும், இதன் மூலம் பீம் ஆப்பில் அதிக மதிப்பிலான பணத்திற்கு கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

பீம் ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அம்சம் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை ஆதரிக்கும் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) ஆகிய 2 வகை டிவைஸ்களிலும் தற்போது அணுக கிடைக்கிறது. இது வழக்கமான டிஜிட்டல் பேமண்ட்களை வேகமாகவும், தடையின்றியும் செய்வதன் மூலம் மில்லியன் கணக்கான பயனர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BHIM App Biometric UPI Payment Launched Users Now Send Money up to Rs 5000 Using fingerprint face ID
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X