பார்தி ஏர்டெல் டிஜிட்டலில் இனி ஸ்டார் சேனல்கள் கிடைக்காது! ஏன் தெரியுமா?

ஏர்டெல் டிஜிட்டல் மற்றும் ஸ்டார் இந்தியா நிறுவனங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் தோல்வி அடைந்துள்ளதால் இனிமேல் ஏர்டெல் DTHல் ஸ்டார் குறித்த எந்த சேனலும் இடம்பெறாது.

|

ஏர்டெல் டிஜிட்டல் மற்றும் ஸ்டார் இந்தியா நிறுவனங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் தோல்வி அடைந்துள்ளதால் இனிமேல் ஏர்டெல் DTHல் ஸ்டார் குறித்த எந்த சேனலும் இடம்பெறாது என்ற தகவல் வெளிவந்துள்ளது. இன்று முதல் அனைத்து ஸ்டார் சேனல்களும் அதாவது ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் பிளஸ், ஆசியாநெட், நேஷனல் ஜியாக்ரபி, விஜய் டிவி மற்றும் ஸ்டார் ஜலசா ஆகிய சேனல்கள் ஏர்டெல் DTH ல் இருந்து நீக்கப்படுகிறது. இந்த சேனல்கள் தேவைப்படுபவர்கள் நேரடியாக ஸ்டார் நிறுவனத்திடம் இருந்து பெற்று கொள்ளலாம்.

இன்று முதல் ஏர்டெல் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு தனித்தனி ஸ்டார் சேனல்களுக்கும் தனித்தனியாக பணம் கட்டி பார்த்து கொள்ள வேண்டும். எனினும் இது தற்காலிகமானது என்றும் விரைவில் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

 ஏர்டெல்

ஏர்டெல்

இதுவரை ஒவ்வொரு HD சேனல்களுக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை ஏர்டெல் டிஜிட்டலிடம் இருந்து ஸ்டார் பெற்று வந்தது. ஸ்போர்ட்ஸ் சேனல் தேவை என்றாம் மாதம் ஒன்றுக்கு ரூ.35ம், ஸ்போர்ட்ஸ் அல்லாத சேனல் என்றால் மாதம் ஒன்றுக்கு ரூ.25ம் ஸ்டார் வசூலிக்கின்றது, இவை போக ஏர்டெல் டிஜிட்டல் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து HD ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.50ம், HD அல்லாத ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.35ம் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்கிறது.

 ஸ்போர்ட்ஸ் தவிர மற்ற சேனல்களுக்கு

ஸ்போர்ட்ஸ் தவிர மற்ற சேனல்களுக்கு

இதேபோல் மற்ற HD அல்லாத சேனல்களுக்கு ஸ்டார் நிறுவனம் ஒரு சேனலுக்கு 45 காசுகள் முதல் ரூ.9.21 வரை வசூல் செய்கிறது. பிற ஸ்போர்ட்ஸ் சேனல்கள் மாதம் ரூ.15 கட்டணத்தில் கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் டிஜிட்டல், HD இல்லாத ஸ்போர்ட்ஸ் தவிர மற்ற சேனல்களுக்கு ரூ.10ம், HD இருந்தால் ரூ.,20ம் வசூல் செய்கிறது.

 கூடுதல் கட்டணங்கள்

கூடுதல் கட்டணங்கள்

ஸ்டார் பிளஸ், ஸ்டார் மூவிஸ், ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் பாரத் மற்றும் ஸ்டார் கோல்ட் உள்ளிட்ட 22 சேனல்களுக்கு ஏர்டெல் டிஜிட்டல் கூடுதல் கட்டணங்களை வசூல் செய்யாது. இந்த சலுகை ஒரு மாதத்திற்கு மட்டும் RIOக்கு மாறிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கிடைக்கும். இந்த ஒரு மாதத்திற்குள் இந்த இரு நிறுவனங்களும் விரைவில் ஒப்பந்தம் செய்து மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சலுகை விலையில்

சலுகை விலையில்

ஸ்டார் நிறுவனத்தின் இந்த 22 சேனலக்ளும் 66% சலுகை விலையில் இந்த ஒரு மாதத்திற்கு கிடைக்கும். இதுபோக மீதியுள்ள 11 சேனல்களுக்கு அந்தந்த சேனல்களுக்குரிய கட்டணங்கள் வசூலிக்கப்படும். அதேபோல் 23 HD சேனல்களுக்கும் அதேபோன்று கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

தேவையான சேனல்கள்:

தேவையான சேனல்கள்:

இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் ஏர்டெல் நிறுவனம் புதிய ஐந்து HD சேனல்களை அறிமுகப்படுத்துகிறது. அவை லிவிங் ஃபுட்ஸ், பிரைவ் HD, Dஸ்போர்ட்ஸ் HD, ஜீட் HD ஆகியவை ஆகும். இந்த ஐந்து சேனல்களும் முந்தைய இழப்பை ஈடுகட்டாது என்பதால் அதற்குரிய தொகை வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஒரு வாடிக்கையாளர் 60HD சேனல்களுக்கு ரூ.225 கட்டியிருந்தால் அந்த வாடிக்கையாளருக்குரிய தொகை அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் தங்கலுக்கு தேவையான சேனல்களை பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அணுகலாம்

RIOக்கு மாறுவது எப்படி?

RIOக்கு மாறுவது எப்படி?

ரெப்ரன்ஸ் இண்டர்கனெக்ட் ஆபர் என்று கூறப்படும் RIOக்கு மாறினால் ஸ்டார் சேனல்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். இந்த RIOக்கு உரிய கார்டுகள் அனைத்து கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் DTH நிறுவனங்களிலும் கிடைக்கும். ஏர்டெல் டெலிமீடியா நிறுவனத்திடம் இருந்தும் இந்த RIOஐ வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். RIO விலை என்பது தனி வீடு அல்லது பிளாட்டுகள் கணக்கின்படி அந்தந்த விலை நிர்ணயத்துக்கு ஏற்ப பெற்றுக்கொள்ளலாம்.

ஸ்டார் இந்தியா

ஸ்டார் இந்தியா

ஏர்டெல் நிறுவனமும் ஸ்டார் இந்தியா நிறுவனமும் தற்போதைய விலை பேச்சுவார்த்தையில் முடிவுகளை எட்டவில்லை. ஏர்டெல் டிஜிட்டல் சந்தாக்களின் விவரங்களை கொடுக்கவில்லை மற்றும் சந்தா கட்டணத்தை செலுத்துவதில்லை என்று ஸ்டார் இந்தியா ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டு மூன்று வாரங்களுக்கு பிறகு இந்த வளர்ச்சி வந்துள்ளது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
வால்ட்  டிஸ்னி

வால்ட் டிஸ்னி

மூன்று மாதங்களுக்கு முன்னர் வால்ட் டிஸ்னி வாங்கிய ஸ்டார் இந்தியா, இந்தியாவின் மிகப்பெரிய ஒளிபரப்பாகும் மற்றும் டிஸ்னி வரிசையில் உள்ள ஏறக்குறைய 70 சேனல்கள் கொண்ட ஒரு தொகுப்பு உள்ளது, கிட்டத்தட்ட எல்லாவற்றையும் DTH மற்றும் முக்கிய கேபிள் இந்தியாவில் நெட்வொர்க்குகளை தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Bhartis Airtel Digital removes all Star India channels from its packs ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X