Home
News

ஏர்டெல் அதிரடி: 4 திட்டங்களில் மீண்டும் திருத்தம்.!

இந்திய டெலிகாம் துறையில் நிகழும் கடுமையான போட்டி காரணமானகவும், அந்த போட்டியில் நிலைத்திருக்கும் முனைப்பிலும் பார்தி ஏர்டெல் மீண்டும் தனது பிரபலமான மைபிளான் இன்பினிட்டி திட்டங்களில் மீண்டும் அதிரடியான

By Muthuraj

இந்திய டெலிகாம் துறையில் நிகழும் கடுமையான போட்டி காரணமானகவும், அந்த போட்டியில் நிலைத்திருக்கும் முனைப்பிலும் பார்தி ஏர்டெல் மீண்டும் தனது பிரபலமான மைபிளான் இன்பினிட்டி திட்டங்களில் மீண்டும் அதிரடியான திருத்தங்களை நிகழ்த்தியுள்ளது.

ஏர்டெல் அதிரடி: 4 திட்டங்களில் மீண்டும் திருத்தம்.!

திருத்தம் கண்டுள்ள நான்கு மைபிளான் இன்பினிட்டி திட்டங்களில் ரூ.399/- கட்டணத் திட்டத்தை தவிர, மீதமுள்ள மூன்று திட்டங்களிலும் முன்பை விட மிகவும் சிறந்த தரவு நன்மைகளை வழங்கும்படி திட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. அதென்ன திட்டங்கள்.? அவைகளின் முந்தைய நன்மைகள் என்ன.? தற்போதைய நன்மைகள் என்னென்ன.?

வரம்பற்ற ரோமிங் வெளிச்செல்லும் அழைப்பு

வரம்பற்ற ரோமிங் வெளிச்செல்லும் அழைப்பு

ஏர்டெல் ரூ.399/- திட்டமானது, அதன் தரவு மற்றும் குரல் அழைப்பு நலன்கள் என இரண்டு வகை நன்மைகளிலுமே திருத்தம் கண்டுள்ளது. இனி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399/- போஸ்ட்பெயிட் ஆனது மொத்தம் 20 ஜிபி அளவிலான டேட்டா உடன் வரம்பற்ற ரோமிங் வெளிச்செல்லும் அழைப்புகளையும் வழங்குகிறது.

20 ஜிபி

20 ஜிபி

முதலில் இதே திட்டம் மாதத்திற்கு10 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற உள்வரும் ரோமிங் அழைப்புகளிலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள நன்மைகளை வழங்கும்படி மாற்றப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரூ.399/- ஆனது அதன் ஒரு பில்லிங் சுழற்சிக்கு 20 ஜிபி தரவு, வரம்பற்ற உள்வரும், மற்றும் எந்த வரம்பும் இல்லாத ரோமிங் அழைப்புகளையும் வழங்கும். இருப்பினும் துரதிருஷ்டவசமாக, ரூ.399/- ஆனது அமேசான் பிரதம சந்தா போன்ற பிற நன்மைகள், இலவச ஆட்-ஆன்ஸ போன்ற நன்மைகளை வழங்கவில்லை.

90ஜிபி

90ஜிபி

திருத்தம் கண்டுள்ள மற்ற திட்டங்களைப் பற்றி பேசும்போது, ​​ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499/- ஆனது இப்போது அதன் பில்லிங் சுழற்சியின் கீழ் 40ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல் ரூ.799/- என்கிற கட்டணத் திட்டமானது தற்போது 60ஜிபி தரவும் மற்றும் ரூ.1199/- என்கிற பெரிய பட்ஜெட் திட்டமானது தற்போது 90ஜிபி அளவிலான தரவும் வழங்குகிறது. இது முன்னர் 75ஜிபி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

300ஜிபி

300ஜிபி

திருத்தங்கள் தவிர்த்து, ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1,599/- என்கிற பிரீமியம் திட்டமானது அதன் பில்லிங் சுழற்சியில் 150 ஜிபி தரவு கொடுக்கிறது மற்றும் ரூ.1,999/- ஆனது 200ஜிபு தரவை வழங்குகிறது. இறுதியாக, ரூ.2,999/- என்கிற திட்டமானது ஒரு நம்பமுடியாத 300ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது.

வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார்

வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார்

திருத்தங்கள் பெற்றதின் விளைவாக தொலைதொடர்புத் துறையிலுள்ள மற்ற டெலிகாம் நிறுவனங்களைவிட சிறந்த தரவு நன்மைகளை ஏர்டெல் வழங்கி வருகிறது. இருப்பினும் விரைவில், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவைகளையும் ஏர்டெல் உடன் பொருந்துமாறு தங்கள் பட்ஜெட் திட்டங்களை மாற்றியமைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil
இலவச அமேசான் ப்ரைம் சந்தா

இலவச அமேசான் ப்ரைம் சந்தா

இந்தத் திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் ரோமிங் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், இலவச அமேசான் ப்ரைம் சந்தா (முன்னர் குறிப்பிட்டபடி ரூ.399 திட்டம் தவிர), இலவச ஆட் ஆன்ஸ் (ரூ.799/- திட்டம் மற்றும் அதற்கு மேலான திட்டங்களில்) ஆகியவற்றையும் வழங்குகின்றன.

புதிய பயனர்களுக்கு மட்டுமே இருக்குமென்பது போலும் தெரிகிறது

புதிய பயனர்களுக்கு மட்டுமே இருக்குமென்பது போலும் தெரிகிறது

ஏர்டெல் நிறுவனத்தின் இணையதளத்தில் ரூ.399/- திட்டத்திற்கான வரம்பற்ற வெளிச்செல்லும் ரோமிங் அழைப்புகள் பற்றிய விருப்பம் காட்டப்படவில்லை, ஆனால் மைஏர்டெல் பயன்பாட்டில் காட்டுகிறது. மேலும் இந்த புதிய மாற்றம் நெட்வொர்க்கில் சேரும் புதிய பயனர்களுக்கு மட்டுமே இருக்குமென்பது போலும் தெரிகிறது.

உறுதிப்படுத்தலுக்காக நாம் காத்திருக்க வேண்டும்

உறுதிப்படுத்தலுக்காக நாம் காத்திருக்க வேண்டும்

ஆக ஏர்டெல் நிறுவனத்திலிருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலுக்காக நாம் காத்திருக்க வேண்டும். மேலும் அது சார்த்த தகவல் மற்றும் இதர டெலிகாம் நிறுவனங்களின் அறிவிப்புகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தமிழ் கிஸ்பாட் வலைதளதத்துடன் இணைந்திருக்கவும்.

ஜியோவுடனான கட்டண யுத்தம்: ஏர்டெல் ரூ.149/-ல் கற்பனைக்கு எட்டாத திருத்தம்.!ws/ai

ஜியோவுடனான கட்டண யுத்தம்: ஏர்டெல் ரூ.149/-ல் கற்பனைக்கு எட்டாத திருத்தம்.!ws/ai

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு எதிராக மீண்டுமொரு நடவடிக்கையைஎடுத்துதுள்ளது. அதாவது அதன் பட்ஜெட் விலை திட்டமான ரூ.149/-ஐ மறுபரிசீலனை செய்துள்ளது.

ஜியோவின் குடியரசு 2018 திட்டங்கள் அறிமுகமான நாளில் இருந்தே பார்தி ஏர்டெல் உட்பட இதர டெலிகாம் நிறுவங்களிடம் இருந்து திருத்தங்கள் அல்லது புதிய திட்டங்கள் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு நிகழ்ந்துள்ளது. இனின் ரூ.149/-ன் நன்மைகள் என்ன.? இதன் முந்தைய நன்மைகள் என்ன.? என்பதை விரிவாக

நாள் ஒன்றிற்கு 1ஜிபி

நாள் ஒன்றிற்கு 1ஜிபி

நாள் ஒன்றிற்கு 1ஜிபி ஏர்டெல் ரூ.149/- ஆனது இப்போது 28ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்கும். அதாவது செல்லுபடியாகும் 28 நாட்களுக்கும், நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

பல வட்டாரங்களில்

பல வட்டாரங்களில்

ஏர்டெல் நிறுவனம் அதன் நெருங்கிய போட்டியாளரான ஜியோவை எதிர்க்கும் நோக்கத்தில் இந்த திட்டத்தை திருத்தியுள்ளதில் சந்தேகமில்லை. ஆந்திரா மற்றும் தெலுங்கானா, டெல்லி, கர்நாடகா போன்ற பல வட்டாரங்களில் இந்த திருத்தப்பட்ட ரூ.149/- கிடைக்கப்பெறுகிறது.

வரவிருக்கும் நாட்களில்

வரவிருக்கும் நாட்களில்

வரவிருக்கும் நாட்களில் ஆனாலும் கூட சில பயனர்கள் மட்டுமே இந்த வாய்ப்பைப் பெற தகுதியுடையவர்களாய் உள்ளன. விரைவில் இந்த ஏர்டெல் திட்டமானது ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாக வரவிருக்கும் நாட்களில் அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

மை ஏர்டெல் பயன்பாட்டினுள்

மை ஏர்டெல் பயன்பாட்டினுள்

மை ஏர்டெல் பயன்பாட்டினுள் இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்குமா என்பதை கண்டறிய ஏர்டெல் ப்ரீபெயிட் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் வலைத்தளத்திற்கு செல்லலாம் அல்லது மை ஏர்டெல் பயன்பாட்டினுள் திருத்தியமைக்கப்பட்ட ரூ.149/- கிடைக்கிறதா என்று சரிபார்க்கலாம்.

1ஜிபி மட்டுமே

1ஜிபி மட்டுமே

1ஜிபி மட்டுமே திருத்தப்பட்ட ரூ.149/- ஆனது ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான தரவை மட்டுமின்றி ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்களுக்கு ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளையும் வழங்கும். முன்னதாக, இந்த திட்டம் 1ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை மட்டுமே வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முன்னிலை

முன்னிலை

முன்னிலை மறுகையில் ஜியோ அதன் ரூ.149/-ன் கீழ் நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி வழங்கி முன்னிலை வகிப்பதும், சமீபத்தில் ஏர்டெல் அதன் ரூ.399, ரூ.199, ரூ.448 மற்றும் ரூ.509 ஆகிய பல வரம்பற்ற காம்போ ப்ரீபெய்ட் திட்டங்களையும் சமீபத்தில் திருத்தியதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

மூலம்: டெலிகாம்இன்ஃபோ.காம்

Best Mobiles in India

English summary
Bharti Airtel Yet Again Revises Postpaid Plans. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X