ஏர்டெல் vs ஜியோ: ரூ. 349 திட்டத்தில் இப்படி ஒரு ஜாக்பாட் நன்மைகளா? இனி இது தான் ரீசார்ஜ் பண்றோம்..

|

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பயனர்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்குவதில் பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இடையேயான போர் நிறைவடையாத ஒன்றாகத் தெரிகிறது. இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன, அவற்றில் பல திட்டங்கள் ஒரே விலையில் வருகிறது. ஆனால், வெவ்வேறு நன்மைகளை வழங்குகின்றது. அப்படி ஜியோ மற்றும் ஏர்டெல்லில் ஒரே விலையில் கிடைக்கும் ரூ. 349 திட்டத்தின் நன்மைகளைப் பார்த்து, உங்களுக்கு எது சிறந்தது என்பதைத் தீர்மானிக்கப் போகிறோம்.

பாரதி ஏர்டெல் ரூ. 349 திட்டம்

பாரதி ஏர்டெல் ரூ. 349 திட்டம்

பாரதி ஏர்டெல் தனது ரூ.349 திட்டத்தை 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் குறுகிய வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இந்தத் திட்டம் பயனர்களுக்குத் தினமும் 2.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதாவது, இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் மொத்தமாக 70 ஜிபி டேட்டாவை அனுபவிக்க முடியும். டேட்டா நன்மையுடன், பயனர்களுக்கு நிறுவனத்திலிருந்து வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நம்மை வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது.

ரூ. 349 திட்டத்தின் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்ன?

ரூ. 349 திட்டத்தின் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்ன?

ஏர்டெல் வழங்கும் ரூ. 349 திட்டத்தின் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் பற்றிப் பார்க்கையில், இந்த திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்குக் கட்டணமின்றி மூன்று மாதங்களுக்கு அப்பல்லோ 24/7 சர்க்கிள் நன்மை, இலவச ஹெலோடூன்ஸ், விங்க் மியூசிக் சந்தா, ஷா அகாடமியிலிருந்து ஒரு வருட மதிப்புள்ள வகுப்புகளுக்கான அனுமதியை வழங்குகிறது.

இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..

ஏர்டெல் வழங்கும் மிகப்பெரிய ஜாக்பாட் நன்மை என்ன?

ஏர்டெல் வழங்கும் மிகப்பெரிய ஜாக்பாட் நன்மை என்ன?

இத்துடன் FASTag பரிவர்த்தனைகளுக்கு ரூ. 100 கேஷ்பேக் போன்ற பிற ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளுடன் இந்த திட்டம் வருகிறது. இந்த திட்டம் வழங்கும் ஒரு மிகப் பெரிய முக்கிய நன்மை பற்றிப் பார்ப்பதற்கு முன்பு இதே விலையில் கிடைக்கும் ஜியோவின் ரூ. 349 திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்த்திடலாம். பதிவின் இறுதியில் இருக்கும் ஜாக்பாட் நன்மையை படிக்க தவறிவிடாதீர்கள்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ. 349 திட்டத்தை ஏர்டெல் திட்டம் வழங்கும் அதே செல்லுபடியாகும் 28 நாட்களுடன் வழங்குகிறது. இருப்பினும், இந்தத் திட்டம் ஏர்டெல்லை விட அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது. ஜியோவின் இந்த திட்டம் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் மொத்தமாக 84 ஜிபி டேட்டாவை பெறுகிறார்கள்.

இறப்பதற்கு முன்பே கணித்த ஸ்டீபன் ஹாக்கிங்: 47 ஆண்டுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்ட கருந்துளை ரகசியம்.! உண்மையா?இறப்பதற்கு முன்பே கணித்த ஸ்டீபன் ஹாக்கிங்: 47 ஆண்டுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்ட கருந்துளை ரகசியம்.! உண்மையா?

FUP டேட்டா வரம்பு முடிந்த பின் என்னவாகும்?

FUP டேட்டா வரம்பு முடிந்த பின் என்னவாகும்?

இந்த திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. FUP டேட்டா வரம்பு முடிந்த பின்னர் பயனர்களுக்கான இணைய வேகம் 67 Kbps ஆகக் குறைத்து வழங்கப்படும். இந்த ஜியோ திட்டத்துடன் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

ஜியோவின் ரூ. 349 திட்டத்தின் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்ன?

ஜியோவின் ரூ. 349 திட்டத்தின் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்ன?

ரிலையன்ஸ் ஜியோ இந்த திட்டத்துடன் கூடுதல் நன்மைகளாக ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யூரிட்டி, ஜியோநியூஸ் மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோவின் தனிப்பயன் ஆப்ஸ்களின் நன்மைகளை தொகுத்து வழங்குகிறது. சரி, இப்போது ஏர்டெல்லில் கிடைக்கும் மிகப்பெரிய நன்மை என்ன? ஜியோ அதன் பயனர்களுக்கு வழங்கும் நன்மை என்ன என்பதை பார்க்கலாம்.

செவ்வாயில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நிலநடுக்கமா? இன்சைட் லேண்டரை அதிரவிட்ட 'மார்ஸ்குவேக்'..செவ்வாயில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நிலநடுக்கமா? இன்சைட் லேண்டரை அதிரவிட்ட 'மார்ஸ்குவேக்'..

ஜியோவை விட ஏர்டெல் வழங்கும் மிகப்பெரிய நன்மை என்ன தெரியுமா?

ஜியோவை விட ஏர்டெல் வழங்கும் மிகப்பெரிய நன்மை என்ன தெரியுமா?

ஏர்டெல் மற்றும் ஜியோ வழங்கும் நன்மைகளை பற்றி பார்த்தோம். இருப்பினும், ஜியோவை விட ஏர்டெல் வழங்கும் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இந்த திட்டம் உங்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ சந்தாவுக்கான நன்மையை வழங்குகிறது. இது ஒரு மாத இலவச சோதனை சந்தா இல்லை என்பதை நீங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். மற்ற திட்டங்கள் போல் அல்லாமல், இந்த ரூ. 349 திட்டம் உங்களுக்கு முழுமையான அமேசான் பிரைம் வீடியோஸ் சந்தாவை வழங்குகிறது என்பதை நினைவில் கொள்க. அதுவும் குறிப்பாக, இந்த நன்மை எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் உங்களுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு திட்டங்களில் எதைப் பயனர்கள் தேர்வு செய்யலாம்?

இந்த இரண்டு திட்டங்களில் எதைப் பயனர்கள் தேர்வு செய்யலாம்?

சரி, இப்போது எந்த திட்டத்தை நாம் தேர்வு செய்யலாம் என்று பார்க்கையில், சிலருக்கு ஜியோவின் திட்டத்தால் வழங்கப்படும் கூடுதல் தரவு சாதகமாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு, அமேசான் பிரைம் வீடியோ சந்தாவின் ஏர்டெல்லின் ஓவர்-தி-டாப் (OTT) நன்மை மதிப்புக்குரியதாக இருக்கிறது. நீங்கள் எந்தத் திட்டத்துடன் செல்ல விரும்புகிறீர்கள் என்பதை உங்களின் தேவைக்கேற்ப நீங்கள் ஆலோசித்து முடிவு செய்துகொள்ளுங்கள். இரண்டு நிறுவனங்களும் தரமான சேவைகளை வழங்குகின்றன, இரு நிறுவனங்களும் சிறந்த நெட்வொர்க் அனுபவத்தை வழங்குகிறது என்பதனால் நம்பி பயன்படுத்தலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Bharti Airtel Vs Reliance Jio Offers Major Benefits With Rs 349 Prepaid Plan : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X