துவங்குகிறது ஏர்டெல்'இன் 'ஓப்பன் நெட்வெர்க்' : வேலைக்கு ஆகுமா..?!

Written By:

பயனாளிகளுக்கு தனது நெட்வெர்க் சார்ந்த தகவல்களை வழங்கி அதன் மூலம் கிடைக்கபெறும் கருத்துக்களை கொண்டு தனது நெட்வெர்க்குகளில் சிறப்பான முன்னேற்றங்களை உண்டாக்கும் ஏர்டெல்'இன் ஓப்பன் நெட்வெர்க் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனாளிகளுக்கு நன்மைகள் உண்டா..? ஏர்டெல்'இன் இம்முயற்சி எதை நோக்கியது, பயனளிக்குமா..?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பாரதி ஏர்டெல் :

பாரதி ஏர்டெல் :

பாரதி ஏர்டெல் அளித்த தகவலின்கீழ் சுமார் 3000 நெட்வெர்க் தளங்களில் ஓப்பன் நெட்வெர்க் மேம்படுத்தலும், மற்றும் 30,000 நெட்வெர்க் தளங்களுக்கான தேர்வு முறையையும் தொடங்கியுள்ளது.

உகந்த தளங்கள் :

உகந்த தளங்கள் :

இன்றைய தேதி வரையிலாக 9,000-க்கும் மேற்பட்ட இடங்களில் ஓப்பன் நெட்வெர்க் மேம்படுத்தப்பட்டுள்ளன மற்றும் 30000-க்கும் மேற்பட்ட இத்திட்டத்திற்கான உகந்த தளங்கள் என நெட்வொர்க்-சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க ஏர்டெல் நெட்வொர்க் குழு தெரிவித்துள்ளது.

அறிக்கை :

அறிக்கை :

இந்த பணியின் போது புதிய கோபுரங்கள் நிறுவுதல் பணியும் இணைந்தே நடைபெறும் என்றும் ஏர்டெல் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 கருத்து :

கருத்து :

ஜூன் 2016-இல், ஏர்டெல் ஒரு ஊடாடும் ஆன்லைன் இடைமுகம் வழியாக மொபைல் நெட்வொர்க் தகவல் பகிரங்கப்படுத்தப்பட்டு, அதை மேம்படுத்தும் கருத்துகளைக் நுகர்வோர்களிடம் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

முழுவதும் :

முழுவதும் :

இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான, சிறந்த, மிதமான அல்லது முற்றிலும் இல்லாத நெட்வெர்க் என இந்தியா முழுவதும் எந்த இடத்தில் இருக்கும் கோபுரங்களையும் ஒரு வண்ண குறியீட்டு இடைமுகம் வழியாக அறிந்துகொள்ள முடியும்.

வலிமை :

வலிமை :

அதாவது ஏர்டெல் நெட்வொர்க் பாதுகாப்பு மற்றும் சமிக்ஞையின் வலிமையை வாடிக்கையாளர்கள் வெளிப்படையாக பார்க்க முடியும்.

தொடர்பு புள்ளி :

தொடர்பு புள்ளி :

ஓப்பன் நெட்வொர்க் போர்டல் , மைஏர்டெல் ஆப், ஏர்டெல் அழைப்பு மையம் மற்றும் ஏர்டெல் கடைகள் என பல தொடர்பு புள்ளிகளில் இருந்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை ஏர்டெல் பெற்ற வண்ணம் உள்ளது.

நேர்மறையான முயற்சி :

நேர்மறையான முயற்சி :

"சிறிய முயற்சியாக இருப்பினும் நெட்வெர்க் வளர்ச்சி சார்ந்த நேர்மறையான முயற்சியாக இதை கருதுகிறோம், மேலும் பல வாடிக்கையாளர்கள் எங்களுடன் இணைவார்கள் என்றும் நம்புகிறோம்" என்று இந்தியா மற்றும் தெற்கு ஆசிய பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

 ஏர்டெல் ப்ராஜக்ட் லீப் :

ஏர்டெல் ப்ராஜக்ட் லீப் :

ரூ 60,000 கோடி முதலீட்டில் ஒரு எதிர்கால தயார் வலையமைப்பு உருவாக்கும் ஏர்டெல் நிறுவன திட்டமான ஏர்டெல் ப்ராஜக்ட் லீப்'பின் ஒரு பகுதி தான் ஓப்பன் நெட்வெர்க் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

50% வரை தள்ளுபடி : பிஎஸ்என்எல் அசத்தல் அறிவிப்பு.!!


எல்லா 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கும் இலவச ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு பெறுவது எப்படி??


3ஜி ஸ்மார்ட்போன்களிலும் ரிலையன்ஸ் ஜியோ சேவையைப் பயன்படுத்துவது எப்படி.??

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Bharti Airtel upgrades over 9,000 network sites under Open Network. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot