Home
News

ஏர்டெல் புதிய ரூ.597/-திட்டம்: எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா.!

தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் தனது புதிய திட்டங்களை அறிமுகம் செய்து கொண்டே உள்ளது, அதன்படி இப்பொழுது ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.597/-என்ற காம்போ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

By Sharath

தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் தனது புதிய திட்டங்களை அறிமுகம் செய்து கொண்டே உள்ளது, அதன்படி இப்பொழுது ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.597/-என்ற காம்போ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் அனைத்து வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சேவைகள் 168 நாட்களுக்குத் தடையின்றி வழங்குகிறது.

இந்த புதிய பிளான், அதிக வாய்ஸ் கால் பயனர்களை மனதில் வைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டும் செல்லுபடியாகும், இது எப்யுபி(FUP) வரம்பு இல்லாமல் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையைப் பயனர்களுக்கு வரம்பின்றி வழங்குகிறது.

10ஜிபி இலவச டேட்டா

10ஜிபி இலவச டேட்டா

168 நாள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளான்-க்கு நிகராக இந்திய முன்னணி டெல்காம் நிறுவனம் இதே வேலிடிட்டி கொண்ட பிளான்-ஐ ரூ.1000/- க்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய காம்போ பிளான் இல் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை, 100 எஸ்எம்எஸ் ஒரு நாளைக்கு என்ற விதம் 16,800 எஸ்எம்எஸ்-கள் மற்றும் 10ஜிபி வரை இலவச டேட்டா கிடைக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் ரூ.995/- பிளான்

ஏர்டெல் ரூ.995/- பிளான்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.995/- பிளான் போன்றே இதிலும் டேட்டா பயன்பாட்டில் கட்டுப்பாடு இல்லை, உங்கள் பேக்கிற்கான டேட்டாவை எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம். இந்த ஏர்டெல் ரூ.995/- நீண்ட வேலிடிட்டி பிளான் பேக் வாடிக்கையாளர்களுக்கு 180 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் மற்றும் 1ஜிபி டேட்டா சேவையை வழங்குகிறது. மொத்த வேலிடிட்டி நாட்கள் கணக்கின் படி 6ஜிபி நமக்கு லாபமாகக் கிடைக்கிறது.

சிறந்த பிளான்

சிறந்த பிளான்

ரூ.995/- பிளானுடன் ஒப்பிடும்போது புதிய ரூபாய் ரூ.597/- பிளான் சிறந்த பிளான் திட்டமாகும். இதில் மேலும் டேட்டா நன்மை மாதாந்திர அடிப்படையில் கட்டுப்பாடின்றி வழங்கப்படுகிறது. இந்த புதிய ரூ.597/- பிளான் வாய்ஸ் கால் பயனர்களை இலக்காகக் கொண்டது மற்றும் டேட்டா ஆர்வலர்களுக்கு இது பயனளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் அன்லிமிடெட் பிளான்

ரிலையன்ஸ் அன்லிமிடெட் பிளான்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரூ.999/- பிளான் அன்லிமிடெட் வாய்ஸ் கால் உடன், 100 எஸ்எம்எஸ் ஒரு நாளைக்கு என்ற விதம் 60ஜிபி டேட்டா சேவையை 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.597/- திட்டம் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.999/- திட்டத்தை விடச் சிறந்ததாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Unveils Rs 597 Prepaid Plan With 168 days Validity : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X