ஏர்டெல் பதிலடி: ஜியோவின் ரூ.98/-க்கு எதிராய் ரூ.93/- அறிமுகம்.!
இந்த புதிய ஏர்டெல் ரூ.93/- ஆனது எந்தவொரு வரம்பும் இல்லாத ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது.
பார்தி ஏர்டெல் நிறுவனம், அதன் ப்ரீபெய்ட் ப்ராமிஸ் திட்டத்தின் கீழ் சில சிறப்பான ப்ரீபெய்ட் கட்டணத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொகுப்பின் கீழ் கிடைக்குமொரு திட்டமான ரூ.93/- ஆனது மொத்தம் பத்து நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் அதன் நன்மைகளை வழங்குகிறது.

ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் இந்த ரூ.93/- என்கிற கட்டணத் திட்டமானது, ஒரு நுழைவு-நிலை திட்டத்தை வரம்புக்குட்பட்ட காலப்பகுதியுடன் தேடும் பயனர்களை இலக்காகக் கொண்டதாகும். மேலும் முக்கியமாக, இது ஜியோவின் ரூ.98/- என்கிற கட்டண கட்டணத்துடன் நேரடியாகவே போட்டியிடுகிறது.

ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல்
இந்த புதிய ஏர்டெல் ரூ.93/- ஆனது எந்தவொரு வரம்பும் இல்லாத ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒட்டுமொத்த செல்லுபடி காலத்திற்குமான 1 ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 10 நாட்களுக்கு வழங்குகிறது.

1ஜிபி அளவிலான தரவு
இந்த 1ஜிபி அளவிலான தரவு நன்மையானதை எந்தவொரு கைபேசியிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது ஒரு வாடிக்கையாளர் 3ஜி கைபேசியைப் பயன்படுத்தினால், அவர் ஏர்டெல் நிறுவனத்தின் 2ஜி / 3ஜி தரவுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மொத்தம் 14 நாட்களுக்கு
மறுகையில் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.98/- நன்மைகளை பொறுத்தமட்டில், நாள் ஒன்றிற்கு 150எம்பி டேட்டா என்கிற கணக்கில் மொத்தம் 14 நாட்களுக்கு 2.1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் எந்த வரம்பும் இல்லாத அழைப்பு நன்மைகளையும், முழு செல்லுபடியாகும் காலத்திற்குள் மொத்தம் 140 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.

வழக்கம்போல டேட்டா நன்மை
ஒப்பீட்டில், ஏர்டெல் நிறுவனமானது எஸ்எம்எஸ் நன்மைகளின் மீது அதிக கவனம் செலுத்த, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ திட்டமானது வழக்கம்போல டேட்டா நன்மைகளின் மீது கவனம் செலுத்துகிறது.

டேட்டா வரம்பு முடிந்த பின்னர்
ஜியோவின் ரூ.98/- திட்டத்துடன் கிடைக்கும் மற்றொரு நன்மை என்னவென்றால், மேற்குறிப்பிட்டுள்ள டேட்டா வரம்பு முடிந்த பின்னர் கிடைக்கும் தரவு வேகமானது 64கேபிபிஎஸ் ஆகும். அதாவது இந்த திட்டம் வரம்பற்ற தரவு நன்மையை உருவாக்குகிறது.

ஜியோடிவி, ஜியோ சினிமா
இந்த திட்டங்களின் கீழ் ஆப்ரேட்டர்கள் இருவருமே தங்கள் சொந்த டிஜிட்டல் உள்ளடக்க சேவைகளை வழங்குகிறார்கள். ரிலையன்ஸ் ஜியோவானது ஜியோடிவி, ஜியோ சினிமா, ஜியோம்யூசிக்போ ஆகியவைகளும், ஏர்டெல் நிறுவனமானது ஏர்டெல் டிவி, வின்க் மியூசிக் ஆகியவைகளையும் வழங்குகிறது.
மூலம்: டெலிகாம்டால்க்.இன்ஃபோ


Click it and Unblock the Notifications