ஏர்டெல் பயனர்களே 5G யூஸ் பண்ண ரெடியா? ஜியோவுக்கு டாட்டா சொல்லி முதல் 5ஜி சேவையை துவங்கும் ஏர்டெல் ..

|

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான பாரதி ஏர்டெல் தனது நெட்வொர்க்கில் 5 ஜி தயார் என்று கூறியுள்ளது. 5 ஜி வணிக ரீதியாக சோதனை செய்த நாட்டின் முதல் ஆபரேட்டராக இப்போது ஏர்டெல் திகழ்கிறது. ஏர்டெல் தனது 1800 மெகா ஹெர்ட்ஸ் தாராளமயமாக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் பேண்ட் மூலம் ஹைதராபாத்தில் நேரடி 5 ஜி சேவைகளைச் சோதனை செய்து அதன் ஆற்றலை நிரூபித்துள்ளது.

ஏர்டெல்லின் புதிய 5 ஜி சேவை

ஏர்டெல்லின் புதிய 5 ஜி சேவை

ஏர்டெல்லின் புதிய 5 ஜி சேவையின் கீழ் பயனர்கள் பெரிய திரைப்படங்களை சில நொடிகளில் பதிவிறக்கம் செய்யலாம் என்று டெல்கோ தெரிவித்துள்ளது. ஏர்டெல் 4 ஜி மற்றும் 5 ஜி இரண்டையும் ஒரே ஸ்பெக்ட்ரம் தொகுதியில் ஒரே நேரத்தில் ஏர்டெல் இயக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாரதி ஏர்டெல் தனது 5ஜி நெட்வொர்க் இப்போது பயன்பாட்டிற்குத் தயார் என்று கூறியுள்ளது.

ஏர்டெல் டைனமிக் ஸ்பெக்ட்ரம் பகிர்வு தொழில்நுட்பம்

ஏர்டெல் டைனமிக் ஸ்பெக்ட்ரம் பகிர்வு தொழில்நுட்பம்

பாரதி ஏர்டெல் டைனமிக் ஸ்பெக்ட்ரம் பகிர்வு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதன் 5 ஜி நெட்வொர்க்கை தயார் செய்துள்ளது. இதன் பொருள் ஏர்டெல் அதன் தற்போதைய தொழில்நுட்ப-நடுநிலை மிட்-பேண்டுகள் (1800/2100/2300 மெகா ஹெர்ட்ஸ்) மற்றும் துணை ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் (800/900 மெகா ஹெர்ட்ஸ்) மூலம் 5 ஜி சேவைகளை வழங்க முடியும் என்று கூறியுள்ளது.

ரூ.6,000 முதல் ரூ.7,000 விலைக்குள் வெளியாகும் புதிய சாம்சங் கேலக்ஸி M02.. எப்போ தெரியுமா?ரூ.6,000 முதல் ரூ.7,000 விலைக்குள் வெளியாகும் புதிய சாம்சங் கேலக்ஸி M02.. எப்போ தெரியுமா?

10x - 100x வரை 5 ஜி சேவை

10x - 100x வரை 5 ஜி சேவை

அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டால், சில மாதங்களில் 5ஜி நெட்வொர்க்கை மக்கள் பயன்படுத்த முடியும் என்று ஏர்டெல் கூறியுள்ளது. பயனர்கள் 4 ஜி மற்றும் 5 ஜி இரண்டையும் ஒரே ஸ்பெக்ட்ரம் தொகுதி மூலம் பெற முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 10x லாடென்சி, 10x ஸ்பீட் மற்றும் 100x கண்கரென்சி வழங்க முடியும் என்பதையும் நிறுவனம் கூறியுள்ளது.

 நாட்டின் முதல் 5ஜி சேவை

நாட்டின் முதல் 5ஜி சேவை

இப்போது சில எளிய மென்பொருள் மேம்படுத்தல்களுடன் 5G-க்கு மாற்ற முடியும் என்று ஏர்டெல் கூறியுள்ளது . தற்போதைய ஆண்டெனாக்கள் மற்றும் ரேடியோ சாதனங்களை வைத்து இதை எளிதாக செய்து முடிக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஜியோ 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 5 ஜி தயாராகும் என்று கூறியிருந்தது. இப்போது ஏர்டெல் சத்தமில்லாமல் சோதனை செய்து முடித்து, 5ஜி வழங்கும் நாட்டின் முதல் நிறுவனமாக மாறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Telecom Operator Has Said That Its Network Is 5G Ready : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X