ஏர்டெல் போஸ்ட்பெயிட்: பட்ஜெட் திட்டங்களில் 50% அதிக டேட்டா அறிவித்து அதிரடி.!
மிகவும் சிறப்பான தரவு நன்மைகளை வழங்கும் நோக்கத்தின் கீழ் அதன் மைபிளான்இன்பினிட்டி போஸ்ட்பெயிட் திட்டங்களை மீண்டும் மேம்படுத்தியுள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒரே நேரத்தில் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துகிறது. இது மற்ற தொலைதொடர்பு இயக்குனர்கள் செய்யத்தவறும் ஒரு விடயமாகும்.

இந்த காரியத்தை மிகவும் திறமையான முறையில் கையாளும் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ஆன பார்தி ஏர்டெல் நிறுவனம் தற்போது மற்றொரு அதிரடியான காரியத்தையும் செய்துள்ளது. மிகவும் சிறப்பான தரவு நன்மைகளை வழங்கும் நோக்கத்தின் கீழ் அதன் மைபிளான்இன்பினிட்டி போஸ்ட்பெயிட் திட்டங்களை மீண்டும் மேம்படுத்தியுள்ளது. அதேசமயம், ஏர்டெல் அதன் சில புதிய மைபிளான்இன்பினிட்டி போஸ்ட்பெயிட் திட்டங்களை நீக்கியும் விட்டது.

30ஜிபி
ஏர்டெல் அதன் ரூ.649/- திட்டத்தை நீக்கிவிட்டு அதன் ரூ.499/- திட்டத்தில் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. ஏர்டெல் வழங்கும் ரூ.499/- போஸ்ட்பெயிட் திட்டமானது தற்போது 30ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதற்கு முன்னர் 20ஜிபி அளவிலான டேட்டா வழங்கியது குறிப்பிடத்தக்கது.

50 ஜிபி
இதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் மைபிளான்இன்பினிட்டி போஸ்ட்பெயிட் திட்டங்களான ரூ.799/- மற்றும் ரூ.999/- ஆகிய திட்டங்கள் தற்போது 50 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகின்றன. மற்றொரு மைபிளான் திட்டமான ரூ.1199/- ஆனது 75ஜிபி தரவு வழங்குகிறது.

200 ஜிபி
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மிக விலை உயர்ந்த திட்டங்களான (உயர் இறுதியில் திட்டங்கள்) - ரூ.1,599, ரூ.1,799, ரூ.1,999 /- ஆகியவைகள் முறையே 100ஜிபி, 125ஜிபி மற்றும் 200ஜிபி என அதே அளவிலான டேட்டாவைதான் வழங்குகிறது.

ஐடியா செல்லுலார்
இந்த திருத்தங்கள் அடிப்படையில் பார்த்தால், ஐடியா செல்லுலார் ஆனது பார்தி ஏர்டெல் நன்மைகளை விட சிறந்த தரவுகளை வழங்கும் மறுகையில் உள்ள வோடாபோன் ஆனது ஏர்டெல் வழங்கும் அளவிலான டேட்டாவையே வழங்குகிறது.

வரம்பற்ற குரல் அழைப்பு
ஏர்டெல் அதன் ரூ.399/- திட்டத்தை தான் மைபிளான் இன்பினிட்டி திட்டத்தின் பட்ஜெட் திட்டமாக (முதல் திட்டமாக) கொண்டுள்ளது, இது 10 ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது, வீட்டு வட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் வழங்குகிறது. வெளிச்செல்லும் அழைப்புகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோமிங் அழைப்புகள்
ரூ.399/- திட்டத்தை தவிர்த்து, இதர அனைத்து மைபிளான் இன்பினிட்டி போஸ்ட்பெயிட் திட்டங்களும் ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் முன்னர் கூறிய தரவு நன்மைகள் ஆகிய அனைத்தையும் வழங்குகிறது.

வரம்பு 500ஜிபி
இந்த ஏர்டெல் பட்ஜெட் திட்டங்களின் மற்றொரு முக்கிய அம்சம் - தரவு பறிமாற்றம் செய்வதற்கான வசதியாகும். இந்த வசதியின் கீழ் பயனாளர்கள் அடுத்த பில்லிங் சுழற்சிக்கு பயன்படுத்தாத தரவை ரோல் ஓவர் செய்யலாம், இம்மாதிரியாக சேமிக்கும் டேட்டாவின் வரம்பு 500ஜிபி ஆகும்.

இலவச சந்தா
மேலும், ஏர்டெல் போஸ்ட்பெயிட் கட்டண திட்டங்களின் கீழ், இலவச ஏர்டெல் செக்யூர், ஒரு இலவச பேமிலி சைல்ட், இலவச வின்க் ம்யூசிக் சந்தா மற்றும் இலவச ஏர்டெல் டிவி சந்தா ஆகியவைகளும் கிடைக்கும். இதன் பயனர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் ஏர்டெல் பேமிலி ஷேர் திட்டம் மூலம் சேர்க்கலாம், இது அவர்களுக்கு 20% தள்ளுபடியை அளிக்கும்.


Click it and Unblock the Notifications