Just In
- 4 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 4 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 4 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 5 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- News
ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டது அரசியல் பின் வாங்கலா? முதல்வர் மு.க ஸ்டாலின் பதில்
- Sports
உலக கிரிக்கெட் வரலாற்றில் புது முயற்சி.. பயிற்சியாளர் விசயத்தில் பாக். ஏற்பாடு.. ஆப்ரிடி எதிர்ப்பு
- Finance
அதானி குழுமத்திற்கு ஜாக்பாட் நியூஸ்.. அபுதாபி நிறுவனம் ரூ.3200 கோடி முதலீடு செய்ய திட்டம் !
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
ஆண்டு முழுவதும் டேட்டா+வாய்ஸ்+ எஸ்எம்எஸ்; ஏர்டெல்-ன் "அடேங்கப்பா" பிளான்.!
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் கடந்த சில வாரங்களாகவே மிகவும் ஆக்கிரோஷமாக உள்ளதென்ற கூறலாம். நாட்டில் தற்போது 290 மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்டுள்ள இந்த தொலைதொடர்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர் தளத்தை தக்கவைத்துக்கொள்ள தொடர்ச்சியான முறையில் அதிரடியான மற்றும் ஆக்கிரமிப்பு மிகுந்த திட்டங்களை அறிவித்தவண்ணம் உள்ளது.

அதுபோதாதென்று ஏர்டெல் ஒரு மாபெரும் ஆண்டு திட்டத்தை அறிவிக்க திட்டமிடுவதாக (நம்பத்தகுந்த ஆதாரங்களின்படி) அறியவந்துள்ளது. இந்த பிரம்மாண்ட திட்டம் சாத்தியமானால் ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து புத்தம் புதிய திட்டமொன்று வெளியாகவேண்டும் அல்லது ஜியோ பின்னுக்கு தள்ளப்பட வேண்டும்.

பிரம்மாண்ட திட்டம்
அதுபோதாதென்று ஏர்டெல் ஒரு மாபெரும் ஆண்டு திட்டத்தை அறிவிக்க திட்டமிடுவதாக (நம்பத்தகுந்த ஆதாரங்களின்படி) அறியவந்துள்ளது. இந்த பிரம்மாண்ட திட்டம் சாத்தியமானால் ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து புத்தம் புதிய திட்டமொன்று வெளியாகவேண்டும் அல்லது ஜியோ பின்னுக்கு தள்ளப்பட வேண்டும்.

மிக தீவிரமான விலை நிர்ணயம்
வரும் நாட்களில் அறிமுகப்படுத்துமென்று கூறப்படும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் புதிய வருடாந்திர ப்ரீபெய்ட் கட்டணத் திட்டமானது ரூ.1000/-க்கு கீழ் என்ற மிக தீவிரமான விலை நிர்ணயம் கொண்டிருக்குமென்றும் கூறப்படுகிறது.

உச்சகட்ட சிறப்பம்சம்
அதுமட்டுமின்றி இந்த திட்டமானது - தற்கால பயனர்களுக்கு ஏஏற்ற வண்ணம் - டேட்டா, குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் ஆகிய மூன்று நன்மைகளையும் வழங்கும் என்பது திட்டத்தின் சிறப்பம்சமாகும் மற்றும் இதை அனைத்தையும் ஒரு வருடம் வழங்குமென்பது உச்சகட்ட சிறப்பம்சமாகும்.

மாதம் 1ஜிபி
இதுவரை அறிவிக்கப்படாத இந்த புதிய கட்டணத் திட்டத்தின் கீழ், ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு, ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகள் உடன் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் என செல்லுபடியாகும் காலத்தில் மொத்தம் 36,500 எஸ்எம்எஸ்கள் உடன் மாதம் 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கலாம்.

365 நாட்களுக்கு 300 ஜிபி அளவிலான தரவு
ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே ரூ.999, ரூ.1,999 மற்றும் ரூ.3,999/- ஆகிய பிரீமியம் திட்டங்களின் கீழ் வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் 365 நாட்களுக்கு 300 ஜிபி அளவிலான தரவு வரை வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மொத்தம் மூன்று மாதங்கள் செல்லுப்படியாகும்
உடன் இந்த அனைத்து திட்டங்களும் திறந்தவெளி சந்தை திட்டங்களாகும் என்பதும், குறிப்பாக ரூ.1000/-க்குள் ஏளனவே கிடைக்கும் ரூ.999/- திட்டமானது வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் மற்றும் 60 அளவிலான ஜிபி தரவு ஆகிய நன்மைகளை மொத்தம் மூன்று மாதங்கள் செல்லுப்படியாகும் வண்ணம் வலனாகுகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் விட்டுக்கொடுப்பதாய் இல்லை
ஜியோவின் அதிரடி திட்டங்களின் விளைவாக கடந்த டிசம்பர் 2017-ல், ஏர்டெல் நிறுவனம் 5 லட்சத்திற்கும் குறைவான புதிய சந்தாதாரர்களை மட்டுமே சேர்த்துள்ளது. இருப்பினும், ஏர்டெல் விட்டுக்கொடுப்பதாய் இல்லை மற்றும் எந்த நேரத்திலும் சண்டையிடுவதற்குத் தயாராக இருக்கிறது.


போட்டித்தன்மை
ஏர்டெல் நிறுவனத்தின் போட்டித்தன்மைக்கு வதந்திக்கப்படும் ரூ.1000/-க்குள்ளான ஆண்டு திட்டம் ஒரு மிகசிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த திட்டமா பற்றிய அதிகாரபூர்வமான தகவல்களுக்கும் மற்றும் இதர டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கும் தமிழ் கிஸ்பாட் வலைதளத்தின் டெலிகாம் செய்திகளுடன் இணைந்திருங்கள்.

நுழைவுநிலை ரூ.9/-
இதற்கு முன்னதாக அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் இரண்டு மினி ரீசார்ஜ் தொகுப்புகளை அறிமுகம் செய்ததையடுத்து பார்தி ஏர்டெல் அதன் ரூ.9/- திட்டத்தை அறிமுகம் செய்தது. ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் ப்ராமீஸ் திட்டத்தின் கீழ் ரூ.9/- என்கிற ஒரு நுழைவுநிலை திட்டத்தை அறிவித்தது.

கூடுதல் சிறப்பு
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.9/- ஆனது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.19/- உடனும் போட்டியிடுகிறது மற்றும் புதிதாய் அறிமுகமான பிஎஸ்என்எல்-ன் ரூ.7/- மற்றும் ரூ.16/- உடனும் போட்டியிடுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏர்டெல் ஆனது, வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது என்பது கூடுதல் சிறப்பு, உடன் 100 எஸ்எம்எஸ்களையும் மற்றும் 100 எம்பி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஜியோவை விட கூடுதலாக 80 எஸ்எம்எஸ்
mஇந்த புதிய திட்டமானது, வரம்பற்ற அழைப்புகள், 20 எஸ்எம்எஸ் மற்றும் 150எம்பி அளவிலான டேட்டாவை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.19/- திட்டத்தை தாக்குகிறது. ஜியோவின் ரூ.19/- ஆனது கூடுதலாக 50எம்பி அளவிலான தரவை வழங்கும் மறுகையில், ஏர்டெல் ஆனது அதன் ரூ.9/-ன் கீழ் ஜியோவை விட கூடுதலாக 80 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது

ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாகும்
எல்லாவற்றிக்கும் மேலாக ஏர்டெல் நிறுவனத்திலிருந்து வரும் இந்த புதிய திட்டம் ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாகும். அதாவது ஏர்டெல் அதன் செயல்பாடுகளை கொண்டுள்ள அனைத்து வட்டங்களிலும் இந்த திட்டம் கிடைக்கும் என்று பொருள்.x

காம்போ ஆஃபர் பிரிவின் கீழ்
மும்பை, டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் அனைத்து வட்டாரங்களிலும் இந்த ரூ.9/- என்கிற ரீசார்ஜ் அணுக கிடைக்கிறது. ஏர்டெல் வலைத்தளமானது காம்போ ஆஃபர் பிரிவின் கீழ் அனைத்து வட்டங்களிலும் இந்த புதிய கட்டணத் திட்டத்தை காட்சிப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.19
ரிலையன்ஸ் ஜியோவை போன்றே, பார்தி ஏர்டெல் நிறுவனமும் ரூ.19/- என்கிற கட்டணத் திட்டத்தை கொண்டுள்ளது. அந்த திட்டமானதும் ஒரு நாள் செல்லுபடியாக்கலுடன் அனைத்து கைபேசிகளுக்கான ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் மற்றும் 200எம்பி அளவிலான 3ஜி / 4ஜி தரவு ஆகிய நன்மைகளை வழங்குகிறது

ஏர்டெல் ரூ.23
ஏர்டெல் ரூ.19/ திட்டமும் ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாகும். மற்றொரு திறந்தவெளி சந்தை திட்டம்ஜன ஏர்டெல் ரூ.23/- ஆனது அனைத்து கைபேசிகளுக்கான ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் மற்றும் 100எம்பி அளவிலான 3ஜி / 4ஜி தரவு ஆகிய நன்மைகளை இரண்டு நாட்களுக்கு வழங்குகிறது

பிஎஸ்என்எல் மினி ரீசார்ஜ்
அறிவிக்கப்பட்ட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இரண்டு திட்டங்களுமே அதிவேக 3ஜி இணையத்தை வழங்கும் திட்டங்களாகும். அவைகள் ரூ.7 மற்றும் ரூ.16/- என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன.

மினி ரீசார்ஜ் ரூ.7/-ன் நன்மைகள்
நன்மைகளை பொறுத்தமட்டில், பிஎஸ்என்எல் ரூ.7/- ப்ரீபெய்ட் திட்டமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளிற்கு செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான இணைய தரவை வழங்கும். இதை தவிர இந்த பேக் வேறெந்த நன்மையையும் வழங்காது. மினி ரீசார்ஜ் ஆன ரூ.7/- ஆனது சந்தை நிலைமைகளின் அடிப்படையில் ரூ.9/- வரை விலை மாற்றம் பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

மினி ரீசார்ஜ் ரூ.16/-ன் நன்மைகள்
இரண்டாவதாக, பிஎஸ்என்எல் ரூ.16/- ஆனதும் ஒரு நாள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் 2 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவையு வழங்குகிறது. இமினி ரீசார்ஜ் ஆன ரூ.16/- ஆனது சந்தை நிலைமைகளின் அடிப்படையில் ரூ.19/- வரை விலை மாற்றம் பெறலாம்.

1ஜிபி மற்றும் 2ஜிபி
இணைய பயன்பாட்டை மிகவும் குறைவாக கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த மினி திட்டங்கள் சிறந்த தேர்வாகும். மற்றும் தங்களது தினசரி இணைய வரம்புகள் தீர்ந்து கூடுதல் தரவு தேடும் பயனர்களுக்கு இந்த மினி பொதிகள் பயனளிக்கும். மிகவும் மலிவான விலையின்கீழ் 1ஜிபி மற்றும் 2ஜிபி வழங்கும் பிஎஸ்என்எல்-ன் இந்த மினி தொகுப்புகளை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ அல்லது பார்தி ஏர்டெல் நிறுவனமும் மினி தொகுப்புகளை அறிவிக்கலாம்.
மூலம்: டெலிகாம். இன்ஃபோ
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470